22 March 2009

நம்பிக்கை மையம் என்கிற மானுட ஆற்றுப்படை

நம்பிக்கை மையம் என்கிற எச்ஐவி எய்ட்ஸ் இரத்த பரிசோதனை கூடம் மற்றும் ஆற்றுப்படுத்தும் மையம் தோகமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2006 ம் ஆண்டு முதல் செய‌ல் ப‌ட்டு வ‌ருகிற‌து.

தாய் சேய் நலத்திட்டத்தின் கீழ் இங்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு, இரத்த அளவு,
1.இரத்த தடவல்,
2.இரத்தவகை,
3.பால்வினை நோய்க்கான பரிசோதனை ,
4.சிறுநீர் மற்றும்
5.எச்ஐவி பரிசோதனைகள் ,
சோதிப்பதுடன்,

1.எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் பரவும் வழிமுறைகள் மற்றும்
2.எய்ட்ஸ் பரவா முறை பற்றியும்,
3.எய்ட்ஸ் என்றால் என்ன? என்பதன் விளக்கத்தையும்
4.கர்ப்பிணி பெண் மூலம் சிசுவிற்கு எய்ட்ஸ் பாவாதிருக்க இம் மருத்துவ மனையில் "நெவாரபின்" எனும் மருந்து இலவசமாக கொடுக்கப்படும் என்பதையும்,

எய்ட்ஸ் பரிசோதனையை கர்பிணி பெண் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தையும்,
நம்பிக்கை மையத்தை சார்ந்த ஆலோசகர் கர்பிணி பெண்ணுக்கு விளக்குவார்.

ஒருவேளை எச்ஐவி தாக்குண்ட கர்பிணி பெண் கண்டறியப்பட்டால்,

1.அவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனையும்,
2.பிறக்கும் சிசுவுக்கு கொடுக்கப்படும் நெவாபின் திரவம் மூலம் சிசுவுக்கு எச்ஐவி நோய் பரவாது என்ற நம்பிக்கையை
கர்பிணி தாய்க்கு ஆலோசகர் ஏற்படுத்துகிறார்.

மேலும், எச்ஐவி நோய் தாக்குண்ட கர்பிணி பெண்ணை பிரத்யேகமாக கவனித்துக் கொள்ள மாவட்ட என்.ஜி.ஓ கள பணியாளர் ஒருவரை உதவிக்கு நம்பிக்கை மையம் வழங்கும்.

எச்ஐவி நோய் தாக்குண்ட கர்பிணி பெண்ணிற்கு இரத்தத்தில் சிடி 4 எனும் அணுக்கள் எண்ணிக்கை சதவீதம் அறிய மாவட்ட அரசு மருத்துவ மணையில் உள்ள ஏஆர்டீ மையத்திற்க்கு என்.ஜி.ஓ பணியாளர் மூலம் அழைத்து செல்லப்படுவார்.

அவருக்கு காசநோய் தாக்குதல் உண்டா என்பதை அறிய ஆரம்ப சுகாதார மையத்தில் சளி பரிசோதனை கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு சளி பரிசோதனையும் செய்யப்படும்.

எச்ஐவி தாக்குண்ட காபிணி பெண்ணின் கணவருக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவரையும், நம்பிக்கை மையத்தை சார்ந்த இரத்த பரிசோதனை கூடத்திற்க்கு அனுப்பிவைக்கபடுவார்.

கர்பிணி பெண்ணும், அவரது கணவரும் எச்ஐவி தாக்குண்ட விபரங்களை ரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை ஆற்றுநர் வழங்குவார்.

இரத்த பரிசோதனை கூடத்தில் ஒருவருக்கு எச்ஐவி நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மூன்று வகையான பரிசோதனை முறைகள் கையாளப்படும். இம் மூன்று பரிசோதனைகளிலும், முடிவு பாஸிட்டீவ்வாக வந்தால்தான் அவர் எச்ஐவி நோய் தாக்குண்டவராக கருதப்பட்டு, முடிவு தெரிவிக்கப்படும். இரத்த மாதிரியை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அங்கும் இரத்தத்தை பரிசோதித்து முடிவு பாஸிட்டீவ்வாக இருப்பின் அவர் எச்ஐவி நோய் தாக்குண்டவராக ஏற்க்கப்படுவார். அவரின் முழு விபரங்களை அவர் அனுமதியின்றி யாருக்கும் வழங்கவோ, தெரிவிக்கவோ மாட்டாது.

பிற சேவைகள்

மேலும், கர்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, அனைவரும் எச்ஐவி எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு தொலைக்காட்சியின்
(TV) மூலம்,மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பயன்படும் வகையில், எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் ஓளிபரப்பப்பட்டு வருகின்றது.
எய்ட்ஸ் பற்றிய விள்க்கக் குறிப்பு கையேட்டினை இங்கு வரும் புற நோயாளிகள் அனைவருக்கும் வழங்கி,அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும், குழப்பங்களையும் அறவே நீக்குககிறது இந்த நம்பிக்கை மையம்.

தகாத உடலுறவில் பரவும் பால்வினை நோய், எச்ஐவி நோய் தொற்றுக்கு, ஆளாகமல் இருக்க இலவசமாக ஆணுறைகள் நம்பிக்கை மையத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

தகாத உடலுறவை தவிர்க்கும்படியும், முடியாத காலங்களில் ஆணுறைகளபயன்படுடத்துமாறும் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுமகிறது.

இரத்த பரிசோதனையின் போது ஒருவருக்கு இரத்தம் எடுத்த குழலை நோயாளியின் கண் முன்னேயே பொசுக்கப்பட்டு, முறையாக கழிவு நீக்கம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு, ஒருவருக்கு பயன்படுத்திய ஊசி நமக்கும் பயன்படுத்தபடுமோ என்ற அச்சத்தை போக்கப்படுகிறது.
முடிவில்,
தாகத உடலுறவு,
சுத்திகரிக்கப்படாத ஊசி,
பரிசோதிக்கப்படடாத இரத்தம்,
கர்பிணி பெண்களிடமிருந்த சிசுவிற்கு
எச்ஐவி பரவாமலிருக்க நோயாளிகளின் ஒததுழைப்பை வேண்டுகிறது.

தன்னார்வத்துடன் வரும் நபருக்கு எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய ஆலோசனை வழங்கி பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் இரகசியம் பாதுகாக்கப்படும்.

ஏச்ஐவி எய்ட்ஸ் தாக்குண்ட கர்பிணி பெண்களுக்கு இம்மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்படும். அப்போது பிரசவவலிக்கு முன்பு தாய்க்கு நிவரப்பின் மாத்திரையும்(200மிலி) குழந்தை பிறந்தவுடன் நிவரப்பின் திரவமருந்து 72 மணி நேரத்திற்க்குள் வழங்கப்படும்.
மேலும், பிரசவம் ஆன பின்பு 18 மாதம் முடிந்து குழந்தைக்கு எச்ஐவி எய்ட்ஸ் பரிசோதனை செய்தால் அதன் முடிவுக் நெகடிவ் என்று வரும்.

இந்த நம்பிக்கை மையத்தின் ஆலோசகர் மற்றும் ஆற்றுநர் வாரம் ஒருமுறை காவல்காரன்பட்டி, சேப்ளாபட்டி துணை ஆரம்பசுகாதார நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள கர்பிணி பெண்கள் அவரது கணவர்மார்கள் மற்றும் தன்னார்வத்துடன் வரும் நபர்களுக்கு எச்ஐவி எய்ட்ஸ் பரிசோதனை செய்து வருகின்றனர்.

ந‌ன்றி:இந்த‌ ப‌திவிற்கான‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌ந்து உத‌விய‌ தோக‌ம‌லை ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ ஆற்றுனர் திரும‌தி.டி.சுதா அவ‌ர்க‌ளுக்கு

2 comments:

  1. இதை சிறு சிறு பத்திகளாக வழங்கலாமே

    ReplyDelete
  2. மாற்றிவிட்டேன் சரிதானா சார்?

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்