pr310509_e_payrevision
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து நாளை 01.06.2009 முதல் அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
30% ஊதிய உயர்வு
வீட்டு வாடகைப்படி,நகர ஈட்டுப்படி இரட்டிப்பு,
1.1.2006 முதல் அமல்1.1.2007 முதல் பணப்பயன்,
3 தவணைகளில் நிலுவைத்தொகை
முதல் தவணை ஜூன் 30க்குள்
ஆகியவை சிறப்பு அம்சங்கள்.
நீண்ட கால கோரிக்கையான வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி சம்பளத்தின் சதவிகித அடிப்படையில் வழங்கப்படவில்லை.
31 May 2009
மண்டை ஓடு , எலும்பு சின்னம் இன்றுமுதல் சட்டம் அமலுக்கு வருகிறது
மண்டை ஓடு , எலும்பு சின்னம் இன்றுமுதல் சட்டம் அமலுக்கு வருகிறது.இன்றுமுதல் பீடி சிகரெட் பாக்கெட்டுகளில் மண்டை ஓடு எச்சரிக்கைச் சின்னம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.இதை மீறினால் தயாரிப்பளருக்கும், விற்பனையாளருக்கும்,சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.புகையிலை தயாரிப்பு நிறுவனங்களின் நிபந்தம் காரணமாக இந்த சட்டத்தை அமல் படித்த மத்திய அரசு தாமதம் செய்வதாக தொண்டு நிறுவனங்கள் சார்பாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு பதில் அளித்த ம்த்திய அரசு மே 31 முதல் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தது.தண்டனை தயாரிப்பளருக்கு அபராதம் ரூ.5000 அல்லது அபராதத்துடன் 2 ஆண்டு சிறை. மறுமுறை இத்தவறை செய்யும் தயாரிப்பாளருக்கு ரூ.10000 அபராதம் மற்றும் 5 ஆண்டு சிறை.மெல்லக்கூடிய புகையிலை பாக்கெட்டுகளில் கருந்தேள் படத்துடன் கூடிய எச்சரிக்கையும், புகைக்கக்கூடிய தன்மையிலான பாக்கெட்டுகளில் மண்டையோடு மற்றும் குறுக்கே இரண்டு எலும்புகள் படத்துடன் எச்சரிக்கையும் இருக்கவேண்டும்.பி.கு.:ஆண்டுக்கு புகையிலையால் 8 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள்.தினமும் புகையிலைக்கு 2,200 பேர் பலியாகிறார்கள்.http://www.mohfw.nic.in/