06 August 2009

டி.கல்லுப்பட்டி

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதை கடந்த இரண்டு வருடங்களில் கண்டு வருகிறோம்.

12 மணி நேரத்தில் 10 பிரசவம் நடைபெருவது என்பது சாதாரணமானதல்ல.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

5 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள்.அனைத்தும் சுகப்பிரசவம்.

கடந்த 28 ம் தேதி மாலை 3.00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 3.00 மணி வரை இப் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

ஒரு குழந்தை பிறந்து அந்த மேசையையும் அறையையும் சுத்தம் செய்யக்கூட நேரம் இருந்திருக்காது.

இச் செய்தியின் பின்னால் இருக்கும் மருத்துவர்கள்,(medical officer) செவிலியர்கள்,(staff nurse)கிராம சுகாதார செவிலியர்கள்,(village health nurse)துப்புரவுப்பணியாளர்கள்,(sanitory worker) இதர உதவியாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது.

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்



2 comments:

  1. தற்காலத்தில் தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சுகப்பிரசவங்கள் நல்லவிதமாக நடக்கின்றன என்பது மனதை குளிர வைக்கும் மகிழ்வான செய்தி.

    இந்த சாதனை நிகழ்விற்கு பின்னால் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள்,துப்புரவுப்பணியாளர்கள், இதர உதவியாளர்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம்