http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
http://www.youtube.com/watch?
PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
தமிழகத்தில் இதய, சர்க்கரை நோயாளிகளை கண்டறிய வீடு தேடி வரும் "நலமான தமிழகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் தொற்றில்லாத நோய்களை கண்டறிய "நலமான தமிழகம்' என்ற திட்டம் துணை முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பொது சுகாதார துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் இந்நோய்கள் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்களை காப்பாற்றும் வகையில் இத்திட்டம் முதற்கட்டமாக கிராமப்புறத்தில் வாழும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பயிற்சி பெற்ற தன்னார்வ பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரது உடல்நிலை வரலாறு, உடல் உழைப்பு விபரங்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் விபரங்கள், இடைச் சுற்றளவு ஆகியவை அறியப்பட்ட அதன் அடிப்படையில் புள்ளிகள் (ஸ்கோர்) வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் புள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது. 30க்கும் கீழ் புள்ளிகள் இருந்தால் அவர்கள் பெயர், விபரங்கள் சேகரிக்கப்படும். அவர்கள் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் கிராம அளவில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட முகாமில் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு அதில் குறைபாடு ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு அதன் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்த, இதய நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.