31 December 2008

2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்


zwani.com myspace graphic comments
Myspace New Years Comments2009 ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அனைத்து வளங்களும் பெற்று மகிழ்வோடு வாழவும்,வருடம் முழுதும் வாழ்வில் வசந்தம் வீசவும் வாழ்த்துகிறேன்.
அன்புடன்
வெங்கட்

30 December 2008

இதய அறுவை சிகிச்சை உதவித்தொகை அதிகரிப்பு
Photobucket

அரசு ஆணை எண் 407 நாள் 05.12.2008 படி ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு அளித்துவரும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது
Name of the Surgery Existing Rate Revised Rate
1 Closed Heart Surgeries Rs.10,000/- Rs.20,000/-
2 Major Open Heart Surgeries Rs.30,000/- Rs.50,000/-
3 Complex Open Heart Surgeries Rs.70,000/- Rs.1,00,000/-

இதய அறுவை சிகிச்சை உதவித்தொகை அதிகரிப்பு

Photobucket


அரசு ஆணை எண் 407 நாள் 05.12.2008 படி ஏழை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு அளித்துவரும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது

Name of the Surgery Existing Rate Revised Rate
1 Closed Heart Surgeries Rs.10,000/- Rs.20,000/-
2 Major Open Heart Surgeries Rs.30,000/- Rs.50,000/-
3 Complex Open Heart Surgeries Rs.70,000/- Rs.1,00,000/-

22 December 2008

ஒரு தவறான செய்தி வதந்தியாக பரவி............

ஒரு தவறான செய்தி வதந்தியாக பரவி கானக நெருப்பாய் மருத்துவமணைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூடவும் பதற்றம் ஏற்படவும் காரண்மாகியுள்ளது.

முதல் நாள் இரவே ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்து தங்கி போலியோ சொட்டுமருந்து கேரியர்களை தயார்செய்வது போன்ற் பல பணிகளைச் செய்துவிட்டு விடியற்காலை 5.00 மணிக்கே எழுந்து அனைத்து பூத்துகளுக்கும் பணியாள்ர்களையும் ஊர்திகளில் கொண்டு விட்டு சொட்டு மருந்து பெட்டிகளை வினியோகம் செய்து ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைகள் கூட விடுபடாமல் சொட்டுமருந்து போடப்பட்டுள்ளதா?என ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் ஒரு மாபெரும் நோய்தடுப்புப் பணிநடத்தி முடிக்கப் பட்டுள்ளது.

ஒரு தவறான செய்தியினால் பரவிய வதந்தி இப் பணியில் ஈடுபட்டுள்ள அனத்துப் பணியாளர்களயும் குழந்தைகளின் பெற்றோர்களையும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளது.
சிறு குழந்தைகளை கையில் சுமந்து கொண்டு உண்மையிலேயே நம் குழந்தக்கு இந்த சொட்டு மருந்தினால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்கிற பதைபதைப்புடன் கண்களில் மிரட்சியுடன் ஆரம்பசுகாதார நிலயங்களுக்கு வந்துள்ள பெற்றோர் களுக்கு மருத்துவர்களும் ஏனய பணியாளர்களும் தக்க பதிலளித்து வதந்திதான் தைரியமாக இருங்கள் உங்கள் குழந்தைக்கு ஒனறும் ஆகாது என நம்பிக்கை அளித்து அவர்களை ஆற்றுப்படுத்தி வருகிறார்கள்.அரசும் இது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக விளக்கங்கள் அளித்து வருகிறது.இந்த நிமிடம் வரை(10.15.Pஆ 21.12.2008) ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் மருத்துவர்களும் பணியாளர்களும் பெற்றோர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.உண்மையில் ஒரு குழந்தைக்கு கூட போலியோ சொட்டுமருந்தினால் பாதிப்பு ஏற்படாதபோது இது போன்ற வதந்திகளுக்கு மக்களும் ஊடகங்களும் மதிப்பளிக்காமல் பொறுப்புடன் செயல்பட்டு போலியோ ஒழிப்பு என்கிற மாபெரும் பணி சிறக்க உதவ வேண்டும்.

Photobucket

வாகனம் தயார் நிலையில்

மருத்துவ அலுவலரின் மேற்பார்வை மற்றும் ஆய்வு.


முகாம் படங்கள்வழிகாட்டு வகுப்புக் காட்சிகள்களப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான வழிகாட்டு வகுப்புக் காட்சிகள்.

துவக்கி வைக்கப்படுகிறது

21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் துவக்கி வைக்கப்படுகிறது.

21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை

21.12.2008 போலியோ சொட்டுமருந்து முதல் தவணை க்காக ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சொட்டுமருந்தினை கிராமப்பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல கேரியர்களை தயார்நிலையில் வைக்கும் பணியில் ஊழியர்கள்.

18 December 2008

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?

2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?

3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?

4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?

5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு நடத்தப்படுகிறது?

6.இந்த தேதியை நிர்ணயிப்பது எந்த அமைப்பு?

7.இதே போல உலக அளவில் எந்தெந்த நாடுகளிள் வருடா வருடம் போலியோ முகாம்கள் நடத்தப் படுகிறது?

8.இந்த வருடமவது "பைனல் புஷ்" ஆக இருக்குமா?

மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்
ம‌ற்றும்
மரு.சுரேஷ்

ஆகியோர் ப‌தில‌ளிக்க‌ கேட்டுக் கொள்கிறேன்.

14 December 2008

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திருச்சி வருகை

மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்புமிகு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சி வருகை தொடர்பான பத்திரிகை செய்திகள் இங்கே.

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும்சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் மூன்று மாதங்களில் நிரப்பப்படும் என மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மான்புமிகு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் திருச்சியில் தெரிவித்துள்ளார்.5124 செவிலியர்களும்,4418 டாக்டர்களும்,12332 மருத்துவம் சாராத பணியாள்ர்களும் இதுவரை நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.11 சதவிகிதமாக இருந்த காலிபணியிடஙள் தற்போது 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.இன்னும் 3 மாதங்களில் காலிபணியிடங்களே இல்லாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.