22 December 2009

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி ஏழை குடும்பத்தினர் பயன் பெற, உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை கடந்த ஜூலை 23ஆம் தேதி முதல்வர் கலைஞர் தொடங்கி வைத்தார். அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக உள்ள குடும்பத்தினர் பயன் பெற முடியும்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14.12.2009அன்று நடைபெற்றது. பல்வேறு தனியார் மருத்துவமணையிலிருந்து மருத்துவர்களும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் அதிகாரிகளும் பங்கேற்ற இம் முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.தகுதியானவர்கள் உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்




























தோகமலையில் சித்த மருத்துவம்

16.12.2009 இன்று சித்த மருத்துவர் திருமதி.சங்கரவடிவு அவர்கள் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.அவருடன் மருந்தாளுனர் திருமதி ஆனந்தி அவர்களும் பணியேற்றார்.பிரதிவாரம் புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் இவர்களுக்குப் பணி.தேசிய கிராமப்புர சுகாதார மிஷன் திட்டம் மூலமாக இவர்களுக்கு பணி நியமனம் வழங்கியுள்ளது.
இப்புதிய வரவினால் தோகமலை பகுதி மக்கள் மிகுந்த பயனடைவர்.
இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்

200 இடங்களில் சித்த மருத்துவப் பிரிவும்,
30 இடங்களில் ஓமியோபதி பிரிவும்
25 ஆயுர் வேதா பிரிவும்,
25 யுனானி சிகிச்சை பிரிவும் ,
20 இடங்களில் இயற்கை மற்றும் யோகா பிரிவும்,
என மோத்தம் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் என்.ஆர்.எச்.எம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமொயோபதி பிரிவு துவக்கப்பட்டுள்ளது

27 November 2009

Pay Authorisation

Pay Authorisation for the month of November and December 2009 issued vide Lr.No.49990/AB2/2009-2 H& fw Dept dt,26.11.2009

05 November 2009

01.01.2006 க்கு முன்பாக பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு

01.01.2006 க்கு முன்பாக பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு முந்தய ஊதிய வீதத்தில் அடுத்த ஊதிய உயர்வு 1.1.2006 கு பின் வந்தால் அவர்கள் எஃப்.ஆர்.22 பி படி ஊதிய நிணயம் செய்யமுடியாமலிருந்தது.அது இப்போது மற்றப்பட்டுள்ளது.

Before 1 1 06 Promotion

டாக்டர்களின் ஊதிய விகித மாற்ற ஆணை

Dr GO

15 October 2009

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உதவிமருத்துவர்களின் பணி நேரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் உதவிமருத்துவர்களின் பணி நேரம் அரசு ஆணை எண் 339 (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை)14.10.2009ன் படி குறைக்கப்பட்டுள்ளது .
புதிய வேலை நேரம் மேம்படுத்தப்பட்ட ஆ.சு.நி
5 மருத்துவர்கள் பணிபுரியும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மூன்று பிரிவான பணிப்பகிர்வு.
1.காலை 8.00 முதல் 2.00 வரை
2.மதியம் 2.00 முதல் 8.00
3.இரவு 8.00 முதல் மறுநாள் காலை 8.00 வரை ( தங்கி பணிபுரிதல்) (இதில் காலை முதல் பணிப்பிரிவின் போது பொறுப்பு மருத்துவரும் (இன்சார்ஜ்) ஒரு உதவி மருத்துவரும். ஏனைய பணிப்பிரிவில் ஒரு மருத்துவர்.முந்தைய ஆணையில் இருந்த நிர்வாகப் பணிக்கான காலம் 2.00 முதல் 4.00 வரை தற்போது நீக்கப்பட்டுள்ளது.மேலும் காலை பணிப்பிரிவில் பணிபுரியும் உதவிமருத்துவர் எப்போதும் ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற நிலை வரும்.களப்பணி, நிவாகப்பணி,ஆய்வுக்கூட்டங்கள்,பள்ளிகளுக்கு செல்தல், ஏஎன்சி செக்கப் ,தடுப்பூசிப்பணிகள் மேற்பார்வை, போன்ற‌ ஏனைய பொதுசுகாதார பணிகளுக்கான பணிப்பகிர்வு இல்லை.சராசரியாக ஒரு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 300 க்கும் குறையாத புற நோயாளிகள் வருகை இருக்கும்.மேற்கண்ட பணிகளில் ஈடுபடும் இன்சார்ஜ் மருத்துவர்கள் புறநோயாளிகளைப் பார்க்க நேரம் இருக்காது.காலை பணிப்பிரிவில் இன்சார்ஜ் மருத்துவரை சேர்த்து 3 மருத்துவர்கள் பணியில் இருப்பது மட்டுமே பணிப்பளுவை குறைக்கும். எனவே 5 மருத்துவர்களுக்கு மாறாக‌ 6 மருத்துவர்கள்பணியிடம்
உருவாக்கவேண்டும்.)
ஒரு/இரு/மூன்று மருத்துவர்கள் பணிபுரியும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களிள்
ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் காலை 9.00 முதல் 4.00 வரை பணி புரிய வேண்டும்.

( உணவு இடைவேளை 1.00 முதல் 1.30)
4.00 முதல் மறுநாள் காலை 9.00 வரை ஒருமருத்துவர் அழப்புப்பணிக்கு தயாராக இருக்க வேண்டும்.
அழைப்பு பணி என்பது நான்கு வித சூழல்களுக்கு மட்டும் தான்
1. பேரிடர்
2. தடுப்பூசி
3. கொள்ளை நோய்
4. உணவுநஞ்சேறல்
மேலும் புறநோயாளிகள் பரிசோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது??
(இனி மேம்படுத்தப்பட்ட‌ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடு இருக்கும்.இப்போதே கூடுதல் ஆ.சு.நி. பணியைத்தான் மருத்துவர்கள் விரும்புகிறார்கள்.)


மேலும் விவரங்களுக்கும் ஆனை நகல் பார்ப்பதற்கும்
http://www.payanangal.in/2009/10/blog-post_15.html

சர்வதேச கைகள் கழுவும் தினம் 2009


15.10.2009 சர்வதேச கைகள் கழுவும் தினம் 2009

உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்களால் இறக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித் துள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள 10ல் 5 குழந்தைகள் இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் தினமும் 1000 குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றனர்.பாக்டீரியா, வைரஸ்கள், ஓட்டுண்ணிகள் ஆகியவைதான் நோய்களுக்கான முக்கிய காரணம். இவற்றை நாம் கண்களால் காண முடியாது.

இவை வாய் அல்லது தோல் மூலமாக நமது உடலுக்குள் நுழைகின்றன. இந்த கிருமிகள் பரவ மலம் ஒரு முக்கிய காரணம். ஒரு கிராம் மனித மலத்தில் 1 கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன. மலத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிட்டால் அவை ஈக்கள், கை வில்கள், திரவங்கள், விளை நிலங்கள் மூலமாக பரவி பல்வேறு நோய்களை பரப்புகின்றன.

இதற்கு முதற்கட்ட தடை நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிப்பதும், கைகளை சுத்தமாக கைழுவுவதும்தான். இந்த நோய் கிருமிகள் நமது வீட்டு சூலில் நுழையாமல் தடுக்க வேண்டும். இதற்கு கை கழுவுவது முக்கியத்துவம் வாய்ந்தது. கைகளை சுத்தமாக கழுவினால் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது. வயிற்று போக்கு, சுவாச தொற்று, தோல் தொற்றுகள் போன்றவற்றை இந்த பழக்கும் குறைத்துவிடும். சோப்பினால் கைகளை கழுவினால் 42 முதல் 47 சதவீதம் வயிற்று போக்கு ஏற்படுவதை குறைக்கலாம் என ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 சதவீதம் சுவாச தொற்றுகளும் குறைகிறது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சுத்தமாக காணப்படும் கைகளில் கூட லட்சக்கணக்கான நோய்கிருமிகம் இருக்க கூடும். நுண்நோக்கியில் பார்ப்பதன் மூலம் இதை அறியமுடியும். உணவை கையாள்வது, கை குலுக்குவது, கழிப்பறை கதவுகளை தொடுவது போன்ற தினசரி செயல்களின் மூலம் இந்த கிருமிகள் பரவுகின்றன. கைகளை கழுவுவதன் மூலம் பலவிதமான நோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும் என்பதால் இந்த பழக்கம் அதிகமாக பயனளிக்கிறது.

தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியிலும் சர்வதேச கைகள் கழுவும் தினம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.சவுமியா, உதவிமருத்துவர் திரு.பிரபாகரன்,திருமதி.நர்மதா,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ராஜலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் திரு.பொன்னுசாமி,திரு.ஏ.டி.பழநிச்சாமி ஆகியோர் கைகள் கழுவுவதின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.
கைகள் கழுவுதல் தொடர்பான செயல் விளக்கத்தினை திருமதி.லட்சுமி செவிலி, மற்றும் திருமதி.நாகராணி சமூக சுகாதார செவிலி ஆகியோர் நிகழ்த்திக் காட்டினர். பள்ளி மாணவர்களும், பெண்கள், சுயவுதவிக்குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடந்தனர்.இறுதியில் பள்ளி மாணவர்களைக்கொண்டு விழிப்புணர்வுப் பேரணி நிகழ்த்தப்பட்டது

கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு பகுதி


ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்சியின்போது


கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு பகுதி


பள்ளி தலைமை ஆசிரியர் சிறப்புரை



சர்வதேச கைகள் கழுவும் தினம்

மரு.சவுமியா சிறப்புரை

30 September 2009

Pay authorization

September and october 2009

23 September 2009

அகவிலைப்படி 01.07.2009

தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு 01.07.2009 முதல் 5% சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டுள்ளது.


DA go 1.7.09

22 September 2009

ஜனனி சுரக்ஷா யோஜனா

01.07.2009 முதல் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தை செயல் படுத்துவதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.பிரசவமாகும் அரசு நிறுவனத்திலேயே தொகை வழங்குதல்,ஒரு வாரத்திற்குள் தொகை பயனாளருக்கு வழங்குதல், கணக்கு பராமரிப்பு பிணியாளர் நலச்சங்கத்திடம் ஒப்படத்தல் போன்ற நல்ல அம்சங்கள் இதில் உள்ளது.அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இங்கே.

Jsy Guidelines 8-6-2009

வீடுகட்டும் முன் பணத்திற்கான வட்டி

2009 10 ஆம் அண்டிற்கான அரசு ஊழியர்களின் வீடுகட்டும் முன் பணத்திற்கான வட்டி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.

Hba Interest

மோட்டார் வாகன முன்பண உச்சவரம்பு

அரசு ஊழியர்களுக்க்கான மோட்டார் வாகன முன்பண உச்சவரம்பு திருத்திஅமைக்கப்பட்டுள்ளது.

fin_e_467_2009

புதிய நால்வருணங்கள்

திருத்திஅமைக்கப்பட்ட ஊதிய விகிதங்களுக்கு ஏற்ப அரசு ஊழியர்களை நான்கு வகுப்புகளாக பிரித்து அரசு ஆணைவெளியிட்டுள்ளது

Revised Grade GO

02 September 2009

நடமாடும் மருத்துவக்குழு

நடமாடும் மருத்துவக்குழு ( Mobile Medical Unit) 04.02.2009 முதல் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.இதன் பணிகள் தொடர்பான விரிவான பதிவு பின்னர் மேற்கொள்ளலாமென இருக்கிறேன்.இக் குழுவில் புதிய நியமனமாக 1 உதவிமருத்துவர்,(Asst.surgeon)1 செவிலி,(Staff Nurse)1 ஓட்டுனர்,(Driver)1 துப்புரறவுப்பணியாளர்(vancleaner cum sanitory worker) உள்ளனர்.முகாம் தொடர்பான சில புகைப்படங்கள் இங்கே.








30 August 2009

திருமணம்

இன்று 30.08.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைப் பணியாளராக பணிபுரியும் திரு.எஸ்.கண்ணன் அவரிகளின் திருமணம் திருச்சி காட்டூர் பரத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.எங்களது குடும்பத்தின் புது வரவான மணப்பெண் ஜி.விஜயலட்சுமி அவர்களை வரவேற்கிறோம்.



27 August 2009

Pay authorization

August 09

23 August 2009

புதிய வருகை


கடந்த இரண்டு மாதங்களில் புதிதாக மூன்று நபர்கள் தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்கள் 

1. செல்வி.ராஜலக்ஷ்மி செவிலி.நடமாடும் மருத்துவ குழு விற்கான செவிலியராக பணி யேற்றுள்ளார்.அரசுப்பணிக்கு புதியவர்.

2.மரு. திருமதி.நிறைமதி திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலாகி தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்.இவர் தண்டலை புத்தூர் ஆ.சு.நி ல் நடமாடும் மருத்துவ குழு விற்கான உதவி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
 
3. திரு.சந்தோஷம் நடமாடும் மருத்துவ குழு விற்கான ஊர்தி ஓட்டுனர். அரசுப்பணிக்கு புதியவர்.

மூவரையும் மனமுவந்து வரவேற்கிறோம்.


19 August 2009

PCA Clarification

Clarification 17 08 09

18 August 2009

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

"தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் 01.08.2009 முதல் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிது.இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களை கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.G.O.Ms.No.204, Health and Family Welfare (AB 2)Department, dated 15.07.2009.

துணை சுகாதார நிலையங்கள், அல்லது வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.


இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

மக்கள், நலத்திட்டங்களை பெற அலைந்த காலம் போய், மக்களை தேடி திட்ட உதவிகள் செல்லும் காலம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இறப்பு நிகழ்ந்தால் அதற்கான சான்றிதழும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்கப்படும்.


15 August 2009

சுதந்திரதினம்

63வது சுதந்திரதின வாழ்த்துகள்.
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
"ஜெய்ஹிந்த்"

06 August 2009

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?இப்படியெல்லாம்இருக்கிறது என்று?

ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நடைபெற்றுள்ள பிரசவ‌ங்களின் எண்ணிக்கை இதோ. 2006 -2007=82532

2007-2008 =153989

2008-2009 =259193  

கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடியுள்ளது.

இதற்கான காரணம் என்ன ?

   1.மகப்பேறு சமயத்தில் தாய்/சிசு மரணவிகிதம் அபரிமிதமாக குறைந்துள்ளது.

தாய், குழந்தை கவனிப்பு மக்களுக்கு திருப்தி அளிக்கிறது. 

   2. 24 மணி நேரமும் மருத்துவர்கள்,செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

   3. சிக்கலான பிரசவம் எனில் பக்கத்தில் உள்ள அரசு  மருத்துவமணைக்கு அழத்துச்செல்ல ஆம்புலன்ஸ் எப்போதும் உள்ளது.

   4.இரவு நேரங்களில் வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டு விட்டால், ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தனியார் வாகனத்திலும்(டாக்சி)வரலாம்.அதற்கான‌ வாடகையினை கிராமசுகாதார செவிலியரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

  5. பிரசவத்திற்கு பெண்ணுடன்வரும் ஆண்/பெண் துணை பிரசவத்தின்போது உடன்இருக்க அனுமதி உண்டு.   6.உடன் வரும் துணையாளருக்கு

 தங்கிக்கொள்ளஇடம்,

குளிக்கடவல்,சோப்பு,பேஸ்ட்,பிரஷ் 

அடங்கிய கிட்வழங்கப்படும்

  7.கர்பமான 7 வது மாதம் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் மூலம்ரூ.3000/-காசோலைவழக்கப்படும்.

பிரசவம்முடித்து டிஸ்சார்ஜ் ஆகும்போது ரூ.3000/-க்கானகாசோலை யுடன் ஜனனிசுரக்ஷா யோஜனாதிட்டத்தின் மூலம்ரூ.700/-க்கானகாசோலையும்வழங்கப்படும். (முதலாவது முதல்இரண்டு கர்பத்திற்குமட்டும்,இரண்டாவதுமுதல் இரண்டுபிரசவத்திற்குமட்டும்.எனைய விதிகள்பொருந்தும்)

   8.பிரசவமான அன்றிலிருந்து இரண்டுநாட்களுக்கு ஆறு வேளைக்கும் உணவு வழங்கப்படும்.

   9.குடிக்க , குளிக்க சுடுநீர் வழங்கப்படும்.

   10.பிரசவத்திற்கு பின்குடும்ப நல அறுவைசிகிச்சைசெய்துகொள்ளும்தாய்மார்களுக்கு ரூ.600/- ரொக்கமாக வழங்கப்படும்.