14 November 2014

கருத்தடை முகாம் சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்களில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுமார் 10 பெண்கள் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக கருத்தடை சிகிச்சை செய்த 4 மருத்துவர்களை சட்டீஸ்கர் அரசு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.இம்முகாம் தனியாராலோ அல்லது லாப நோக்கிலோ நடத்தப்படவில்லை.நெமிசந்த் ஜெயின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த 8-ஆம் தேதி மாநில சுகாதாரத்துறை சார்பில் பெண்களுக்கான கருத்தடை முகாம் நடத்தப்பட்டது.முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொற்றுக் கோளாறு ஏற்பட்டதே இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என்று மாநில சுகாதாரத் துறை துணைத் தலைவர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.பல பெண்கள் மரணமடைந்துள்ளனர்.இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையாக தலா 2 இலட்சம் அரசு வழங்கியுள்ளது. இறந்த பிறகு வழங்கும் இத்தகைய தொகையினை முகாம் நடத்தவும் தொற்று ஏற்படாவண்ணம் முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் பயன் படுத்தியிருந்தால் இத்தகைய அசம்பாவிதத்தை தவிர்த்திருக்கலாம். போதிய ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை பணியமர்த்தாததும் முகாம் நடத்துவதற்கு போதுமான அளவிற்கு நிதி வழங்காததும், இத்தகைய முகாம்களுக்கு இலக்கு நிர்ணயித்து அதனை அடைய அலுவலர்களை நிர்பந்திப்பதும், இத்தகைய மரணங்களுக்கு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளவேண்டும்.இங்கு யானை வாங்குபவர்களுக்கு அங்குசம் வாங்கத் தெரிவதில்லை. போதுமான மருந்துகள், கையுறைகள்,கிருமி நாசினிகள் வழங்கப்படுவதில்லை.இது போன்ற முகாம்களுக்கு செலவிடப்படும் தொகையினை விட கூடுதலனாதொகை அரசியல் வாதிகள் கலந்துகொள்ளும் முகாம் துவக்க விழாவிற்குப் பயன்படுத்தப் படுகிறது. சிக்கனம் எதில் வேண்டும் என்பதை அரசுகள் உணரவேண்டும். தமிழகத்தில் சென்றவருடம் வட்டார அளவில் ஒரு ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்பட்ட ” சிறப்பு மருத்துவ முகாம்” இந்த ஆண்டு ஒரு வட்டாரத்திற்கு ”மூன்று” முறை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற வருடம் ஒரு வட்டாரத்திற்கு வழங்கப்பட்ட நிதியிலேயே என்பது தான் விந்தை. ”யானை வாங்கனும் பூனை விலையில் “இந்த நிதிக் குறைப்பு எங்கு போய் முடியும்? பந்தல் போடவும், சாப்பாடு போடவும் உள்ளூர் பிரபலங்களில் ஸ்பான்சர்களுக்காக அலைய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். பிறகு சிறப்பு மருத்துவமுகாம்களின் தரம் எப்படி இருக்கும்? இதன் அனைத்து பிரதிபலிப்புகளும் முகாம்களை நம்பி வரும் அப்பாவி மக்களுக்கு அளிக்கப்படும் சேவையில் தானே பிரதிபலிக்கும். நடை முறை கொள்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் திருத்தி அமைக்காத வரையில் இது போன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்.

13 November 2014

"எபோலா" ஆய்வுக்குழு வருகை.

விமான நிலையத்தில் வந்திறங்கும் எபோலா நோய்கண்டவர்களை தனிமை படுத்திவைக்கும் அறைதொடர்பான ஆய்வுமேற்கொள்ள திருச்சி கி.ஆ.பெ.மருத்துவக்கல்லூரிக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையிலிருந்து குழுவினர் 10.11.2014 வந்தனர்.உடன் இணை இயக்குனர் எபிடெமிக் திரு.பாலசுப்ரணனியன் மற்றும் துணை இயக்குனர் (லேப்) ஆகியோரும் வந்திருந்தனர்.


                                மருத்துவக்கல்லூரியில் டீன் அறையில் கூட்டம்