29 July 2014

மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை

ரத்தசோகை நோயை தடுக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்.19.06.2014Nirmaladevi Superintndent Retirement 30.06.2014

Veeramachanpatty PHC, Trichy District, Smt,Nirmaladevi Superintndent Retirement 30.06.2014 Function PhotosMMU

Hospital on wheels vehicle streamed for utilisation by Thuraiyur constituency honourable MLA Tmt.P.INDIRA GANDHI MADAM after completion of infra structural modernisation works. Function was held at GPHC , VEERAMACHANPATTI,THURAIYUR BLOCK ,TRICHY DT on 12/07/2014மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள்

மாநில அரசு ஊழியர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் இன்று திருச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பொது சுகாதாரத் துறை ஊழியர்கள் சான்ற்கள், மெடல்கள் பெற்றனர்.துணை இயக்குனர் டாக்டர்.ஐ.ரவீந்திரன் அவர்கள் பரிசு பெற்றவர்களை வாழ்த்தினார் ஜீலை 2014

சாவித்ரி ஸ்டெனோ(ஷாட் பூட்), மகேஸ்வரி கணக்கு உதவியாளர்(லாங்க் ஜம்ப்),கணேசன் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் (ஷாட் பூட்), ரமேஷ் உதவியாளர்( இறகுப்பந்து),அருள்பிரகாஷ் கணக்கு உதவியாளர்(இறகுப் பந்து).

ரேவதி ராஜாத்தி (வாலிபால்), ராஜயோகம் உதவி கணக்கு அலுவலர்(100 மீ ஓட்டப்பந்தயம்)

ரிலே டீம் அருள்மொழி,மஹேஸ்வரி,மீனா,பிரியா,
104
Intensified Diarrhoea Control Fortnight Programme

photos taken at the Intensified Diarrhoea Control Fortnight Programme Training to Anganwadi Workers in Trichy District T.Pet Block at GPHC T.Pet on 26.07.2014.The Training was given by Dr.K.Anand BMO. All the AWWs,VHNs,SHNs,HIs&BHS also participated in the training.World population day

World population day function , students who won the prizes for essay writing felicitated by Union chairman and Bmo. Perumalpalayam hr.sec.school, kannanur high school students honoured by gifts.
வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு முகாம்
இந்தியாவில் ஆண்டுதோறும் வயிற்று போக்கு பாதிப்பால், 2.30 லட்சம் குழந்தைகள் இறக்கிறது'' என, திருச்சி மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கு நோயை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு முகாம் துவக்க விழா, ஸ்ரீரங்கத்தில் நடந்தது.
விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது: ""உலக அளவில், பெரியவர்களுக்கு இதயநோய், ஹெச்.ஐ.வி., சிறுநீரக நோய் ஆகியவை உயிர் கொல்லி நோய்களாக கருதப்படுகிறது. அதே போல், 5 வயது வரையுள்ள குழந்தைகளின் இறப்புக்கு, வயிற்று போக்கு தான் காரணமாக உள்ளது. யுனிசெஃப் புள்ளி விவரப்படி, உலக அளவில், ஆண்டுதோறும், எட்டு லட்சம் குழந்தைகளும், இந்திய அளவில், 2.30 லட்சம் குழந்தைகளும் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின், ஆறு மாதங்கள் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதன் மூலம், 16 வயது வரை குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கிறது. இதனால், கர்ப்பிணி பெண்கள், பிரசவமான பெண்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுபடி, பிறந்த குழந்தை முதல், ஐந்து வயது வரையுடைய குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று போக்கை கட்டுப்படுத்த, சிறப்பு முகாம் வரும், 8 ம் தேதி வரை நடக்கிறது. இதில், குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள், ஓ.ஆர்.எஸ்., பொட்டலங்கள் வீடு வீடாக, அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இதை, குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். அரசு தலைமை கொறடா மனோகரன், எம்.பி., குமார், மேயர் ஜெயா, எம்.எல்.ஏ., பரஞ்சோதி, சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரவீந் திரன், மாநகராட்சி ஆணையாளர் தண்டபாணி, நகர்நல அலுவலர் மாரியப்பன், கோட்ட தலைவர் லதா, கவுன்சிலர்கள் பாபு, முத்துலட்சுமி, பச்சையம் மாள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்

புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்

 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள புள்ளி விவர தொகுப்பு உதவியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்

காலியிடங்கள்: 34

பணியிடம்: ஒவ்வொரு மாவட்ட தலைமை இடத்திலும் ஒரு இடம் மற்றும் மாநில தலைமை இடத்தில் இருடங்கள்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 01.07.2014 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பி.எஸ்சி (கணினி அறிவியல்) பிசிஏ அல்லது கணினி பயன்பாடு குறித்த முதுகலை பட்டயம் அல்லது கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் குறித்த ஒரு வருட காலத்திற்கு குறையாத படிப்புச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் தட்டச்சு செய்வதில் திறமையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல புலமையும் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: புள்ளி விவரங்கள சேகரித்தல், தொகுத்தல் மற்றும் கணினியில் பதிவு செய்வதில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு(தேவைப்படும் பட்சத்தில்), சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும்முறை: www.tnhealth.org.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்ப கவரின் மேல் “Data Processing Assistant-CRS-SBHI” என்று எழுதி அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Joint Director (SBHI), O/o. The Director of Public Health and Preventive Medicine, No.359, Anna Salai, DMS Compound, Teynampet, Chennai-6

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:31.07.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnhealth.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

17 July 2014

பொது மாறுதல் 2014

பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான 2014 பொது மாறுதல் கலந்தாய்வு கீழ்கண்டவாறு நடைபெற உள்ளது.

நி.அ/கண்காணிப்பாளர்/உதவியாளர்: 23.07.2014
இ.நி.உ/தட்டச்சர்/சுருக்கெழுத்தர்         : 24.07.2014

இடம் சென்னை எக்மோர் சுகாதாரம் மற்றும் குடும்பநல பயிற்சி நிலையம்
நேரம்: காலை 10.00