31 March 2013

பவானிசாகர் பயிற்சி

பொது சுகாதாரத்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் 25 நபர்களுக்கு 26.4.2013 முதல் 24.06.2013 வரை பவானிசாகர் அடிப்படை பயிற்சி வழங்கப்பட உள்ளது.இத்துடன் பெயர்ப்பட்டியல்.-ஆவனம் உதவி திரு.கு.ராஜா










அமைச்சுப்பணியாளர் சங்கம் இயக்குனருடன் சந்திப்பு

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் சார்பாக 27.03.2013 அன்று மான்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களையும் இயக்குனர் அவர்களையும் சந்தித்துள்ளனர்.-படங்கள் உதவி திரு.கு.ராஜா.






27 March 2013

டாக்டர்.சம்பத்குமார்




நல்ல அதிகாரியாக இருப்பதும் நல்ல மனிதராக இருப்பதும் நல்ல நிர்வாகியாக இருப்பதும் அவ்வளவு எளிதல்ல .எல்லாம் ஒருங்கினைந்த ஓர் மனிதர்,தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சுகாதார மாவட்டத்தையே வழிநடத்திய ஆசான்,எனது ஆதர்ச புருஷர்.டாக்டர்.சம்பத்குமார் இந்தமாதம் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒவ்வோரு ஆய்வுக் கூட்டத்திலும் இவர் கையாண்ட எளிமையான நேரடியான அனுகுமுறை அனைவரையும் கவர்ந்தது.யாரையும் மனம் புன்படும் படி கடிந்ததில்லை.இனி வரும் காலங்களில் இது போன்ற அதிகாரிகளை காண்பது அரிதாக இருக்கும்.போய் வாருங்கள் சார்.உங்களிடம் கற்றுக் கொண்ட பணியும்,அன்பும்,எங்களை வழிநடத்தும்.





21 March 2013

2013 பல்ஸ் போலியோ

2013 பல்ஸ் போலியோ முகாம் மற்றும் களப்பணி தொடர்பான படங்கள்













06 March 2013

மென்பொருள் உதவித்துளிகள்

முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவித்திட்ட மென்பொருள் ஆக்கத்தில் கீழ்கண்ட பயன்பாடுகளை எளிமையாக்கினால் பயன் படுத்துபவர்களுக்கும் பணி துரிதமாக நடைபெறவும் பயனுள்ளதாக இருக்கும்.

அ)       தற்போது 9.0 மென்பொருளின் படி ஒரு செயல்முறைகளுக்கு ( proceedings) ஒரு பட்டியல் என கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் ஒரு செயல்முறைக்கு ஒரு ஈசிஎஸ் மட்டுமெ ஜெனரேட் ஆகிறது.
   இதையே சற்று மாற்றி ஒரு உதாரணத்திற்கு ( proreeding 55 to 60 )  என ஈசிஎஸ் ஜெனரேட் செய்யயும் வசதியினை ஏற்படுத்தலாம்.அதற்கான செயல்முறைகள் வாரியான  பொழிப்பும் ( ABSTRACT)  கிடைக்க வழியேற்படுத்தலாம்.
இதனால் தினந்தோறும் ப்ரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்தாலும் பட்டியலின் எண்ணிக்கை அதிகரிக்காது.ஒருமுறை MTC 70  கருவூலம் சென்றால் திரும்பி வர குறைந்தது 4 நாட்களாவது ஆகும்.அதுவரை புரொசீடிங்க்ஸ் ஜெனரேட் செய்யாமல் இருக்கவேண்டியதில்லை.

ஆ) proceedings submission details entry தற்போது user friendly ஆக இல்லை.காரணம் ஒவ்வொரு proceedings க்கும் தனித்தனியாக விண்டோவருவது காலதாமதமாகிறது.அப்ளிகேஷன் ஃபார்வேர்டுச் செய்வது போல ஒரே பக்கத்தில் அனைத்து பதிவுகளும் வந்தால் எளிதாக இருக்கும். 
   பதிவு செய்யப்பட்ட proceeding பதிவுகளை ஒரு முறை பதிவு செய்து விட்டால் ஆக்டிவேட் ஆகாமல் இருப்பதில்லை.மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு செய்யமுடிவதும் எவ்வளவு பதிவு செய்துள்ளோம் என பதிவு செய்பவர்கள் அறிவதும் சிரமமாக உள்ளது.

இ) print proceedings,ECS, ஆகிய பக்கங்களில் எத்தையாவது தவனை என்பதும் வரவழைப்பது பயனுள்ளதாக இருக்கும்.