27 November 2008

கரூர் மாவட்டம்





கரூர் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏப்ரல் 2008 முதல் அக்டோபர் 08 வரை பிரசவ எண்ணிக்கை வட்டார ஆரம்பசுகாதார நிலையங்கள் வாரியாக நிரல்படம்.

நிர்வாக கட்டமைப்பு நிரல்படம்




தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் , கூடுதல் ஆரம்ப சுகாதார நிலயங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களின் நிர்வாக கட்டமைப்பு நிரல்படம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை






தோகமலை வட்டாரத்திற்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2008 09 ம் வருடத்தில் அக்டோபர் 2008 வரை நடைபெற்ற பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்பான நிரல்படம்.

26 November 2008

பரங்கிப்புண்










யாஸ் ‍பரங்கிப்புண் எனப்படுவது ஒரு வகை தோல்நோய்

இந் நோய்க்கு காரணமான கிருமியின் பெயர் டிரிபோனிம பெர்டினு வகை பாக்டீரியா

காட்டு மாரியாத்தா

பெக்கனி புண்ணு

பெக்கல் மாரியாத்தா

பரங்கிப்புண்ணு

என்ற பெயர்களில் மலைவாழ் பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம்,குளித்தலை,தோகமலை,மற்றும் கடவூர் ஆகிய வட்டாரங்களில் சுமார் 500 கிராமங்களில் நேரடி பரங்கிபுண் (யாஸ்) சர்வேபணி நடத்தப்பட்டது.

17 November 2008

ஜனனி சுரக்ஷா யோஜனா JSY




வறுமை கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு முதல் இரு பிரசவத்திற்கு ரூ.700/ ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவமான பெண்ணிற்கு மரு.பாரதிராஜா அவர்கள் காசோலை வழங்கும் காட்சி.

16 November 2008

ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன்


திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றுள்ளது.சிறுகாம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இப் பணியினை மேற்கொண்ட மருத்துவகுழுவிற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மானிய கோரிக்கை

2008 _ 09 மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானிய கோரிக்கை இங்கே பி டி எஃப் வடிவில்.

டவுன்லோடு செய்ய இங்கே



health_FW_t

15 November 2008

நரம்பு சிலந்தி நோயை ஒழித்தது எப்படி

குறிப்பு:இந்தப் பதிவு மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ் அவர்களது வலத்தளத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலினுள் ஒரு புழு இருக்கும்.

இந்த புழுவை எப்படி வெளியில் எடுப்பது. அதை ஒரு தீக்குச்சியில் (அல்லது ஏதாவது குச்சியில்) சுற்றிக்கொண்டு தினமும் சிறிது சிறிதாக எடுக்க வேண்டும்
ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ”படி கிணறுகள்” (step wells) அதிகம் உண்டு. நம் ஊர் போல் கயிறு வாளி எல்லாம் தேவையில்லாமல் கிணற்றில் நேரடியாக இறங்கி நீரை எடுக்க வேண்டியது தான்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பம் !!

இந்த புழுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கிணற்றினுள் இறங்குகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே அவரது காலில் இருக்கும் அந்த புழு சிறிது எட்டிப்பார்த்து நீரினுள் லார்வாக்களை விட்டு விடுகிறது. (மற்ற நேரங்களில் லார்வாக்களை வெளியிடாது. மற்ற நேரங்களில் வெளியிட்டால் லார்வாக்களால் பிழைக்க முடியாது என்பதால் அதனால் பலனில்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் புத்திசாலி புழு அது !!)

அந்த லார்வாக்கள் (இவைகளை L1 லார்வாக்கள் என்று அழைக்கிறார்கள்) சைக்லாப்ஸ் (cyclops) என்னும் சிறிய உயிரினங்களுக்குள் புகுந்து ஒரு 15 நாட்கள் உள்ளே இருந்து வளர்ச்சி பெறுகின்றன. (வளர்ச்சி பெற்ற பின் அவை L3 லார்வாக்கள் ஆகிவிடுகின்றன)

இப்படி இருக்கையில் அதே நீர்நிலைக்கு ஒருவர் வருகிறார். அங்கிருந்து நீரை எடுத்து செல்கிறார். அதை காய்ச்சாமல், வடிகட்டாமல் அப்படியே குடிக்கிறார். சைக்ளாப்ஸும் (அதனுள் இருக்கும் லார்வாவும்) அவரின் வயிற்றிற்கும் செல்கின்றன. சைக்லாப்ஸ் ஜீரணமாகி விடுகிறது. அதனுள் இருக்கும் L3 லார்வா வெளிவருகிறது இரைப்பையின் சுவற்றை துளைத்து சென்று உடலினுள் புகுந்து தோலுக்கு அடியில் வந்து விடுகிறது

9 முதல் 12 மாதங்களில் அவை புழுக்களாகிவிடுகின்றன. அதன் பிறகு இந்த நபர் நீரில் காலை வைத்தால் உடன் L1 லார்வாக்களை வெளியிட்டு, அவை L3
லார்வாக்கள் ஆகி, அந்த நீரை ஒருவர் வடிகட்டாமல் குடித்து அவருடம்பில் மீண்டும் புழுவாக வேண்டியது தான்.

இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். ஒரு காலத்தில் தமிழகத்தில் பரவலாக இருந்த இந்த நோய் இன்று கிடையவே கிடையாது. இதிலென்ன, ஒரு காலத்தில் பரவலாக இருந்த பெரியம்மையும், போலியோவும் கூடத்தான் இன்று கிடையாது. டெட்டெனஸ், கக்குவான் இருமல் டிப்தீரியா போன்றவையும் வெகுவாக குறைந்து விட்டன என்று நீங்கள் கூறலாம்.

அந்த நோய்களை எல்லாம் நாம் தடுப்பூசி மூலமே கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால் நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்தி பின்னர் காணாமல் ஆக்கியது தடுப்பூசி மூலம் அல்ல. பொது சுகாதார நடவடிக்கைகள் மூலமே

நோயை தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ ஊசியோ, மாத்திரையோ இல்லாமல் மக்களின் நடத்தை மாற்றம் மூலம் மட்டுமே ”அழிக்க”ப்பட்ட ஒரு நோய் நரம்பு சிலந்திதான்..

ஒரு நோயை தடுக்க அறுவை சிகிச்சை / மாத்திரை/ ஊசிகளுடன் வாழ்க்கை முறை மாற்றமும் முக்கியம், என்ற நிலையில் இருந்து வாழ்க்கை முறை மாற்றமே முதல் வைத்தியம், அறுவை சிகிச்சையும் மருந்தும் ஊசியும் இரண்டாம் பட்சம் தான் என்ற அளவிற்கு (From "Life Style Modification as a supplement to drugs and surgery" to "Life Style Modification as the Main Mode of Treatment and Drugs / Surgery only in rare cases) ஒரு சிந்தனை மாற்றத்தை அளித்த நிகழ்வு நரம்பு சிலந்தி ஒழிப்பு திட்டம் தான்



1981 முதல் 1990 பத்தாண்டுகளை ஐ.நா சபை சர்வதேச குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதார பத்தாண்டு (International Drinking Water Supply and Sanitation Decade ) என்று வரையறுத்தவுடன் ஏற்கனவே பெரியம்மையை “ஒழித்தி”ருந்த அனுபவமும் உற்சாகமும் கை கொடுக்க நரம்பு சிலந்தியை கட்டுப்படுத்த கிளம்பிவிட்டனர்

அப்பொழுது இந்தியாவில் 7 மாநிலங்களில் இந்த நோய் அதிக அளவில் இருந்தது

ராஜஸ்தான்

குஜராத்

ஆந்திர பிரதேசம்

மத்திய பிரதேசம்

மகாராஷ்ட்ரா

கர்நாடகா

தமிழ்நாடு

இந்தியாவிலும் இந்த திட்டம் 1980 முதல் செயல்படுத்தப்பட்டது. கிராமம் கிராமமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் 1983ஆம் ஆண்டு இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44819
1984ல் ஒரு மாநிலத்திலிருந்து இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது
1984ல் 89 மாவட்டங்களில் 12840 கிராமங்களில் 39,792 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்
1986ல் உலக சுகாதார சபை நரம்பு சிலந்தியை ஒழிப்பது என்று தீர்மானம் இயற்றிய போது இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22610வாக குறைந்திருந்த்து.

1987ல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17031.

1988ல் அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குணமடைந்திருந்தனர். அப்பொழுது கூட ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இந்த நோய் முற்றிலும் மறைந்திருந்தது

பொது சுகாதாரத்தில் முதல் இடத்தில் இருக்கும் தமிழகத்திலிருந்து நாலே வருடங்களில் நாம் சாதித்ததை ராஜஸ்தானால் 16 வருடங்கள் கழித்து தான் சாதிக்க முடிந்தது


1996ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்திலிருந்து 3 கிராமங்களில் 9 பேர்களிட தான் நரம்பு சிலந்தி கடைசியாக காணப்பட்டது

1999 வரை ஏழு முறை இந்த திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் 1999ல் கடைசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

உலக சுகாதார நிறுவனத்தில் நிபுணர் குழு 1999 நவம்பர் 9 முதல் 25 வரை ஆய்வு செய்தனர்
அதன் பின்னர் 2000 இந்தியாவில் இந்த நோய் இல்லை (eliminated) என்ற சான்று வழங்கப்பட்டது
2001 பிப்ரவரி 15ஆம் தேதி இந்திய நரம்பு சிலந்தியற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது (free of guinea worm)
முதன் முதலாக இந்த சான்றை பெற்ற ஆசிய நாடு நாம் தான்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுதல்

காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுதல்
ஆக இவை இரண்டையும் தடுத்தாலே நரம்பு சிலந்தி புழுவால பரவ முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால்
குடிக்கும் நீரில் நரம்பு சிலந்தியின் L3 லார்வா, இரைப்பையினுள் செல்லுவதை தடுத்தல்
ஆழ்துளை கிணறுகளை அமைத்தல்
கைபம்புகளை அமைத்தல்
தண்ணீரை காய்ச்சுதல்
வடிகட்டிய தண்ணீரை மட்டுமே குடித்தல்
காலில் இருக்கும் புழு நீரினுள் L1 லார்வாக்களை வெளியிடுவதை தடுத்தல்
படி கிணறுகளை மூடி ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் அவ்வளவு தான்
நன்றி: மரு.புருனோ (www.payanangal.in)
http://www.payanangal.in/2008/10/18-how-guinea-worm-was-eradicated-in.html

14 November 2008

பொது சுகாதார‌த் துறை இயக்குனர்

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குனர் திரு.டாக்டர்.இளங்கோ அவர்களை 5 முறை நேரில் நெருக்கமாக சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.(நெருக்கமாக என்பதற்கு அருகில் என்பதை தவிர வேறு அர்த்தம் இல்லை.விவேக் காமெடியில் சொல்வது போல "அவரை எனக்குத்தெரியும் அவருக்கு என்னைத்தெரியாது")
முதலில் சந்தித்தது திண்டுக்கல்லில். கரூர் மாவட்டத்தில் என்னுடன் பணி புரிந்த திரு.ராமனாதன் உதவியாளர் அவர்களின் திருமணத்திற்கு திண்டுக்கல் சென்றிருந்த போது .அப்போது அவர் திண்டுக்கல் துணை இயக்குனர்.

இரண்டாவது, திருச்சியில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மருத்துவர்களுக்கான ஒரு பட்டறை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தனர்.அப்போதய தலைமை கணக்கு அலுவலர் மற்றும் நிதி ஆலோசகர் திரு.நாராயணன் அவர்களின் வகுப்பும் இருந்தது.அவருக்கு பவர் பாய்ண்ட் உதவிக்கு இயக்குனரக உதவியாளரும் எனது நெருங்கிய நண்பருமான திரு.ராஜனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றிருந்தேன்.அப்பொது தான் திரு.ஜி.ஆர்.ரவீந்திரநாத்,நாரண்ம்மா தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் புதல்வர் திரு.அறம்.,காதுகள் நாவல் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற‌ எம்.வி.வெங்கட்ராம் அவர்களின் பேத்தி மரு.ஏ.ஆர்.சாந்தி ,ஆகியோரை பார்த்தேன். தற்காலிக பணியாளர்களாக இருந்த போதே நிவாகம், துறை பணிகள் போன்றவைகளிள் அவர்களுக்கு இருந்த ஆர்வம் கண்டு ஆச்சிரியப்பட்டேன்.(இது தொடர்பாக தனி பதிவு எழுதவேண்டும்).சரி விஷயத்திற்கு வருகிறேன்,
அந்த பட்டறைக்கு ஒரு சிலைடு ஷோவுடன் துறை தொடர்பான நீண்ட வகுப்பு எடுத்தார்.அவரது பேச்சை அரங்கில் இருந்த அனைவரும் மிக அமைதியாகவும்,கவனமாகவும் வுள்வாங்கிய அந்நிகழ்வு இன்றும் என் நினைவில் உள்ளது.அவரது பேச்சாற்றலை நான் எதிர் பார்க்கவில்லை.திருநெல்வெலி துவங்கி,சமூகநீதி,மாணவர் சக்தி,என சுவாரசியமான பல விஷயங்கள் இடைஇடையே.இறுதியில் கேள்விநேரம்.சளைக்காத கேள்வி,சளைக்காத பதில்.ஒரு அதிகாரியாக பார்த்தது போய் ஒரு ஆளுமையுள்ள பேச்சாளராக அங்கு பார்த்தேன்.

3 வது சென்னையில் திரு.அரங்கஅனந்த கிருட்டிணன் அவர்களுடன் எங்கள் சங்க மாநில நிர்வாகிகள் அனைவரும் அவரது அலுவலகத்தில் அவரை ஒரு மாலைப்பொழுதில் சந்தித்தோம்.எந்த கோரிக்க்கைகளும் இல்லாத ஒரு சாதாரண சந்திப்புதான்.வந்த அனைவருக்கும் இருக்கைகள் தந்து உட்காரச்சொன்னார்.அமைச்சுப்பணியாளர்களை உட்காரவைத்துப் பேசிய அவரது பண்பு போற்றுதலுக்கு உரியது.கோரிக்கைகள், பணிகள்,இவைகளையெல்லாம் தாண்டி நச் சென்று அவர் சொன்ன ஒரு சங்கதி

1. உங்களது ஒவ்வொரு கூட்டத்திலும் துவங்குமுன் ஒரு மணி நேரம் உஙகளை நீங்களே சுய விமரிசனம் செய்து கொள்ளுவதற்கு நேரம் ஒதுக்குங்கள்.இன்று நாம் வேலைக்கு வந்து எத்தனை பேருக்கு உதவி செய்துள்ளோம்,எத்தனை கோப்புகளை எடுத்து பணி செய்துள்ளோம். என்பது மதிரியான பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.சங்கம், கோரிக்கைகள் அத்ற்கான போராட்டஙள் அனத்தும் தேவைதான்
கூடவே சுயபரிசோதனையும் தேவை.

4 வது சந்திப்பு அவர் இயக்குனராக பதவி உயர்வு பெற்றபின்.இயக்குனர் அறையில். சம்பிரதாய சந்திப்பு
5 வது சந்திப்பு தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் அவர்களுடன்.இயக்குனர் அறையில் அவர் எதிரே உயர்நிலை அலுவலர்கள் பலர்.இடயிடயே தம்பி சீனு (பி சி) அவசர செய்திகளை தொடர்பு கொள்ள தொலைபேசியுடன்.மிகுந்த பரபரப்பான சூழல்.அந்த சூழலிலும் கிடைத்த சிறிது நேரத்தில் கோரிக்கை படிவத்தினை கொடுத்தார் தோழர். கோரிக்கை ஒரு சிறு புத்தகம் போல இருந்தது.(அனைத்தும் அரங்க அனந்த கிருட்டிணன் அவர்கள் உழைப்பு) அப்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகள் இவர் சாதிப்பதற்காக வந்துள்ளார் என்பதை உணர்த்தியது.

உங்கள் கோரிக்கைகளை சுருக்கமாக 3 கட்டம் போட்டு தெரிவியுங்கள்.

1.கோரிக்கை சுறுக்கமாக.
2.எங்கு நிலுவை?
3.என்ன செய்தால் தீர்வுகிட்டும்?

இவைகளுடன் முதலில் இணை இயக்குனர்(நிர்வாகம்) அவர்களுடனான முதல் கட்ட பேச்சு நடத்துங்கள் அடுத்து
அதன் பிறகு அவர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கிறேன்.என்றார்.இதற்கிடையில் தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் மற்றும் நிவாகிகள் இயக்குனர் அருகில் பேசிக்கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.இயக்குனர் சிரித்துக்கொண்டே கண்ணாடியை நாசி நுனிக்கு இறக்கி மேல் பக்கமாக பார்த்து புகைப்படம் எடுத்தவரை பர்ர்த்து கேட்டார்." என் அறையில் என்னை புகைப்படம் எடுக்க என்னிடம் அனுமதி பெறவேண்டாமா?"
தவறை உணர்ந்து உடன் மன்னிப்பு கோரினார் நண்பர்.பேசி முடித்த பிறகு விடைபெற்றோம். அப்போது தோழர்.அரங்க அனந்தகிருட்டிணன் இயக்குனரிடம் கேட்டார் "எங்கள் மாநில நிர்வாகிகள் உங்களுடன் ஒரு புகைப்பட்ம் எடுத்துக் கொள்ள அனுமதிப்பீர்களா அய்யா?" "ஓ.எஸ்".என்ற அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மாநில நிர்வாகிகள்

விளம்பரம்

ஆரம்ப சுகாதர நிலயங்கள் தற்போது நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.தரமான குடிநீர்,கழிப்பறை,காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமை,பிணியாளர்களுக்கு தொலைக்கட்சி பெட்டி,பிரசவித்த தாய்மார்களுக்கும்,குழந்தைகளுக்கும்,குடிக்க குளிக்க சுடுநீர்,24 மணி நேரமும் மருத்துவரின் கவனிப்பு என அதிக வசதிகள் இருக்கிறது.இருந்தும் இவைகளின் இருப்பை மக்களுக்கு தெரிவிக்க விளம்பரம் தேவை யாக உள்ளது.தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிலவிளம்பரங்கள் இங்கே.

தடுப்பூசி பெரிய சவால்






தட்டம்மை தொடர்பான இந்த ஊடகச்செய்தி கவலை அளிக்கிறது.
போலியோவும்,பெரியம்மையும்,தமிழ்நாட்டில் இல்லாமல் செய்த பொது சுகாதாரத் துறைக்கு இது பெரிய சவால்தான்.இதனை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்?.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பபூசி போட தாய்மார்கள் ஆரம்ப சுகாதார நிலயதிற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.ந‌டைமுறையில் இது அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது.அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதில் இருக்கும் வசதி இதில் இல்லை.பெரும்பாலும் விவசாயக் கூலிகளாக இருக்கும் பெண்கள் தடுப்பூசி போடும் நாட்களிள் பேருந்து பிடித்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வரவேண்டியுள்ளதோடு ஒரு நாள் கூலியையும் இழக்க நேரிடுகிறது.அறிவுசால் நமது துறை அறிஞர்கள் இது தொடர்பாக ஆரோக்யமான விவாத பங்களிப்பை தரவேண்டிய அவசியம் உள்ளது.
மரு.புருனோ,பழனி சுரேஷ் போன்றோர் இதனை முன்னெடுக்கலாம்.

02 November 2008

மருத்துவர் தாக்கப்பட்டுள்ளார்



பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாபாளயம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளார்.இது கொடுஞ்செயல்,கண்டிக்கத்தக்கது.மருத்துவர் ரமேஷ் அவர்களை தாக்கியதாக குற்றம் சாற்றப்படும் முத்தையா அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.இவ் விஷயத்தில் ஒன்று பட்டு குரல் எழுப்பி போராடிவரும் பொது சுகதாரத்துறை சகோதர சகோதரிகள் அனைவரின் ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியஒன்று.