03 June 2011

oxygen concentrators to PHCs Vellore District


All PHCs in Vellore Health Unit District to get oxygen concentrators


Improving healthcare: K.S.T. Suresh, DDHS, Vellore, explaining the working of the oxygen concentrator to PHC medical officers and nurses at the Collectorate in Vellore on Saturday.
   VELLORE: All 38 primary health centres (PHCs) in Vellore Health Unit District (HUD) will be supplied five-litre oxygen concentrators, which are capable of extracting oxygen from the atmosphere and improving the quality of oxygen that is inhaled by patients through the machine.
K.S.T. Suresh, Deputy Director of Health Services (DDHS), Vellore, demonstrated the use of the equipment to medical officers and nurses of PHCs at the office of the DDHS here on Saturday. He said the oxygen concentrator has a dual advantage in that, unlike conventional oxygenators where oxygen has to be refilled every time the gas is exhausted, this equipment extracts the oxygen in the atmosphere, and could also be used as a nebulizer by mixing the nebulizing solution. The equipment filters oxygen in the atmosphere and improves the quality of the oxygen that is inhaled by the patient through the concentrator, he said.
Dr. Suresh urged the medical officers of PHCs to bring the new oxygen concentrators to regular use, and use the conventional oxygenator as a stand-by. The government, he said, was distributing oxygen concentrators for the first time to PHCs. The government has procured the equipment at a subsidised cost of Rs.23,000 (for a five-litre oxygen concentrator) through the Tamil Nadu Medical Services Corporation against the market rate of Rs.33,000 for supply to the PHCs, he said.
Dr. Suresh that oxygen concentrators meant for all 38 PHCs in the Vellore HUD were stocked in the office of the DDHS, and medical officers had been asked to take them to their PHCs from Saturday.

From 08.05.2011 Hindu

கண்மருத்துவ உதவியாளர்கள் சங்க செயற்குழு

29.05.2011 Tamil Nadu Government Ophthalmic Assistants Association:State general council meet, Poomalai Rural Mart, Bharathidasan Salai, 9 a.m.






மேல்படிப்பிற்குச் செல்லும் மருத்துவர்கள்

இந்த வருடம் தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மூன்று மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்காக தேர்வாகி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
1.மரு.எஸ்.தேன்மொழி MD(GM) Madurai Medical collage
Dr.A.Thenmozi MBBS






காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்த இவருக்கு இது தான் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்த இடம்.சளைக்காமல் மருத்துவச் சேவை செய்யக்கூடியவர். மென்மையும் நேசிப்பும் கொண்டவர்.நிர்வாகத்தில் தவறு நிகழ்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டு அதன்படி நடக்கக் கூடியவர்.எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்யாதவர்.இவரது வாழ்வில் முக்கியமான தருணங்களான திருமணம்,குழந்தைபேறு,கிரகப்பிரவேசம்? என அனத்தும் இங்கு பணியார்றும் போது நடந்ததால் இவரது குடும்பதுடன் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் பரிச்சயம் இருந்தது.இவரது கணவரும் மருத்துவர். உடன் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு எனில் தம்பதியர் இருவருமே பாரபட்சமின்றி தங்களால் ஆன உதவிகளை செய்யக்கூடியவர்கள்.எனக்கு நல்ல குடும்ப நண்பர்.பட்ட மேற்படிப்பிற்காக குறைந்த நாட்களே விடுப்பு எடுத்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்.MD (GM) .கிடைத்து மதுரை மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் இவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.15.05.2011 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இவர் பிரிவு உபசார விழாவிற்காக விருந்திற்கு அழைத்திருந்தார்.நானும் முதன்மை குடிமை மருத்துவ அலுவலரும் ,என்.எம்.எஸ் மனோகரன் அவர்களும் காவல் காரன் பட்டி ஆ.சு.நி சென்றிருந்தோம்.விருந்து முடிந்து நடை பெற இருந்த கூட்டத்தில் நான் கல்ந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டு பேசும் அளவு எனது மன நிலை இல்லை,திருமணமாகி புகுந்த வீடு செல்லும் சகோதரியை பிரியப்போதும் ஒரு சகோதனின் மன நிலையே எனக்கு இருந்தது.வெறுமனே ”போய் வருகிறேன் மேடம்” எனச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.எல்லா வெறுமை களும் இடைவெளிகளால் நிரப்பப் படுகின்றன.

02. மரு.கே.சவுமியா (DPM Madras Medical collage) 
Dr.K.Sowmiya MBBS






காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார்.சிறிதுகாலம் வட்டார மருத்துவ அலுவலராகப் பொறுப்பு வகித்தார்.சிறந்த நிர்வாகி.இவர் IAS ஆகி யிருக்க வேண்டியவர்.இவரது நிவாகத்தின் கீழ் பணியாற்றுவது பாதுகாப்பானது.எல்லா பொறுப்பையும் சுமக்கத் தயங்காதவர்.பல்வேறு காலகட்டங்களில் இவரது துணிச்சலான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்ததுண்டு.குறிப்பாக எங்களது ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான போது துரிதமாகச் செயல்பட்டு அகால வேளை எனவும் பாராமல் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி தேவையான பணிகளை மேற்கொண்டார்.இவ்வளவு பணிகளையும் தமது கடமை எனக்கருதியே செய்தார்.எந்த நேரத்திலும் சோர்ந்து கொண்டதோ புலம்பியதோ இல்லை.தேவையான நேரத்தில் அன்பு காட்டியும் தேவையான நேரத்தில் கண்டிப்பு காட்டியும் பணியாற்றியவர்.காய்க்கிற மரம் தான் கல்லடி படும்,ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது,போன்ற சொல்லாடல் களை யெல்லாம் பொருத்திப்பார்க்கத்தக்கவர் எனினும், சிறந்த நிவாகம் என வரும் போது இதெல்லம் சாதாரனமாகிவிடுகிறது.மெட்ராஸ் மெடிகல் காலேஜ் க்கு DPM படிக்கச் செல்லும் இவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.15.05.2011 பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


03. மரு.உமாமகேஸ்வரி( எம்.டி பெத்தாலஜி- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி) Dr.Umamaheswari MBBS






இவர் சேப்ளாப்பட்டி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார். பழனி மாவட்டத்திலிருந்து சமீப வருடத்தில் இங்கு வந்தவர்.அதிகம் பேசாதவர்.அதிர்ந்து பேசாதவர்.இவர் பிரிவு உபசாரமாக சேப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிய சிறந்த விருந்தில் நானும்,BMO,NMS,Opthalamic assist ஆகியோர் கலந்து கொண்டோம்.15.05.2011 பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.மேற்படிப்பிற்குச் செல்லும் இவருக்கு எனது வாழ்த்துக்கள்.

பதவி உயர்வில் செல்லும் கிராம சுகாதார செவிலியர்


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய்த்தில் பணியாற்றி பகுதி சுகாதார செவிலியர் பதவி உயர்வின் காரணமாக இரண்டு கிராம சுகாதார செவிலியர்கள் மறுதலில் சென்றுள்ளனர்.

  1. எஸ்.என்.மல்லிகா

சிறந்த களப்பணியாளர்.தோகைமலை துணை சுகாதார நிலையத்தின் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வந்தார்.பொதுமக்களிடம் நல்ல பெயர் பெற்று பணியாற்றிவந்தார்.அன்பும் அடக்கமும் நிறைந்தவர்.பதவி உயர்வில் கரூர் மாவாட்டம் மைலம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் செல்லும் பொருட்டு 04.03.2011 அன்று விடுவிக்கப்படடார்.புதிய பணியிடத்தில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.

  1. எஸ்.கல்யாணி
நாகனூர் துணை சுகாதாரநிலைய கிராம சுகாதார செவிலியராக பணியாற்றிவந்த இவர் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்று தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் ஆரம்ப சுகாதார நிலய்ம் செல்லும் பொருட்டு 04.03.2011 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
தனது பகுதியைப் பற்றிய அனைத்து விவரங்ககளையும் விரல் நுனியில் வத்திருப்பார்.ஊர் மக்களுடன் இரண்டரக் கலந்தவர்.இரவு பகல் பாராமல் களப்பணியாற்றுபவர். தோகைமலையிலிருந்து கரூர் செல்லும் வழியில்தான் இவரது துணை சுகாதார நிலையம் உள்ளது.பணிநிமித்தம் நான் அவ்வழியாக கரூர் செல்லும் போதெல்லாம் ஏதோ ஒரு சாலை ஓரத்தில் ஒரு தோளில் கைப்பை மற்றொரு தோளில் தடுப்பூசி பெட்டியுடன் புடவைத்தலைப்பை வெயிலுக்கு பாதுகாப்பாக தலையில் போட்டவாறு இவர் சென்றுக்கொண்டிருப்பார்.பதவி உயர்வில் செல்லும் இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு நாள்



உலகெங்கும் இன்று 31.05.2011 கடைபிடிக்கப்படுகிறது.
  •  உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து 1987 ம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாளை சிறப்பு நாளாக அறிவித்தது.
  • உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.
  • இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.(நெட்டில் கிடைத்த சில படங்கள்)

    • புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாலும் உலகம் முழுவதும் 60 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்

    • இந்தியாவில் தினமும் 2465 பேர் வீதம், ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோயால் இறக்கின்றனர்

    • இந்தியாவில் 2020ல் 16 லட்சம் இறப்பார்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இன்றைக்கு புகைப்பதை ஆண்மையின் கம்பீரமாக கருதும் இளைய தலைமுறையினர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்

    •