26 February 2012

களப்பணி


தெலுங்கப்பட்டி கிராமத்தில் மஞ்சள் காமாலை பரவியுள்ளது என பரவிய வதந்தியைத் தொடர்ந்து நடந்த மருத்துவப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள்..இறுதியில் அப்படி ஏதுமில்லை என கண்டறியப்பட்டது.24 February 2012

பிரிவோம் சந்திப்போம்

                                 
                          கடந்த 25.01.2011 முதல் எங்களுடன் இணைந்து பணியாற்றி எங்களை எல்லாம் வழிநடத்திய சீப் சிவில் சர்ஜன் திரு.கே.குமாரசாமி அவர்கள் பழனி நகராட்சி பள்ளி மருத்துவ ஆய்வு அலுவலர் பணிக்கு பணியிட மாறுதலில் சென்றுவிட்டார.
                      வேடசந்தூர் அவரது சொந்த ஊர்.அவரது ஊருக்கு அருகாமையில் சென்றது அவருக்கு வசதி.எங்களுக்கெல்லாம் அசதி.இவருடன் பழகிய நாட்கள் என் நினைவிலிருந்து எப்போதும் நீங்காது.மனித நேயமும்,அன்பும்,பணிவும் மிக்கவர்.தன்னைவிட வயதிலும்,பதவியிலும்,குறைந்தவர்களிடம் இவர் காட்டிய பணிவும் , கனிவும் அசாத்தியம்.
              இவரிடமிருந்து கால் வந்தாலே ஒரு அவசரம் எனக்குள் தொற்றிக் கொள்ளும்.காரணம் போனை ஆன் செய்தவுடன் வணக்கம் சொல்லிவிடவேண்டும் . ஒரு நொடி தயங்கிவிட்டால் கூட “ வணக்கம் சார்” என எதிர் முனையிலிருந்து குரல் வந்துவிடும்.நமக்கு.வயதிலும் பதவியிலும் பெரியவர் நமக்கு முதலில் வணக்கம் சொல்கிறாரே என்கிற குற்ற உணர்வு எனக்குள் வியாபிக்கும்.அவருக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை.சாதாரணமாக உரையாடுவார்.குடும்ப விஷயங்களை விசாரிப்பார்.
                                குட்மார்னிங் சொன்னால் பதிலுக்கு சிலர்  தலையை மட்டும் ஆட்டுவர், சிலர் அதைக்கூட ஆட்ட மாட்டாரகள், எனக்கு குட்மார்னிங் சொல்வது உனது கடமை என்பதாக நிமிர்ந்து கூட பார்க்காமலும் சில அலுவலர் இருப்பார்கள்.இவர்களுக்கு நடுவில் திரு.குமாரசாமி அய்யா அவர்கள் குறிஞ்சிப்பூ.
                                 பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா என்ற பாடல்வரிகளைப் போல இவருக்கு பணிவு அசாத்தியம், துணிவு பிரயோகிக்க வேண்டிய வாய்ப்பே இவருக்கு  கிடையாது .ஒரு ஊழியரை கூட கடிந்து பேசமாட்டார்.அதிகாரிகளின் உத்தரவினை சிரமேற்கொண்டு செய்து முடித்திட வேண்டும் என நினைப்பார்.கடிதங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு “ சார் அந்த லெட்டருக்கு பதில் எழுதிடலாமா? என கூலாக கேட்பார்” அப்போது தான் எனக்கே அந்த கடிதம் மறந்து போனது தெரியும்.சிறந்த மனிதாபிமானி.எல்லா ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இவரது மாறுதல் பேரிழப்பு.
                          சில மனிதர்களை வாழ்க்கையில் இனி சந்தித்து விடவே கூடாது என எனக்கு தோன்றியிருக்கிறது.ஆனால் இவரைப் போன்ற மனிதர்களை எப்போது சந்திக்கப் போகிறோம் என தோன்றுகிறது.இவருக்கு என்ன கைமாறு செய்ய?...இவரைப் போல துளிகூட கர்வமும்,ஆணவமும்,இல்லாத மனிதனாக வாழ முயற்சிப்பது மட்டுமே இவர் நினைவை நம்முள் நிறுத்த ஒரே வழி.

22 February 2012

தூய்மைப் பணிகள்

ஆரம்ப சுகாதார நிலைய வளாக தூய்மைப் பணிகள்

மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி சுத்தம் செய்யும் பணி


 பார்த்தீனியா செடிகள் அழிப்பு


சுத்தப்படுத்தப் பட்ட வளாகம்


தூய்மைப் பணியில் ஊழியர்

   

செம்மண் நிரவல் பணி
21 February 2012

போலியோ சொட்டு மருந்து


 தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் 19.02.2012 அன்று நடை பெற்றது. இதற்காக சொட்டு மருந்து மய்யங்கள், ஆரம்ப சுகாதார மய்யங்கள், அரசு மருத்துவமனை கள், சத்துணவு மய்யங்கள், பள்ளி கள் என 40,400 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவை தவிர, பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 903 நகரும் மய்யங் களும் மற்றும் எளிதில் செல்ல முடியாத கிராமங்களுக்காக 838 நடமாடும் குழுக்களும் அமைக்கப் பட்டிருந்தது.

இந்த பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள், அரசு செவிலியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டிருந் தனர். தனியார் மருத்துவமனை களிலும் குழந்தைகளுக்கு போலி யோ சொட்டு மருந்தை போடும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 முதல் மாலை 4 மணி வரை நடந்தது
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதனால், தமிழகம் கடந்த 8 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக உருவாகி உள்ளது. தமிழகத்தில் நடந்த சிறப்பு முகா மில், 65.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி நடக்க உள்ளது

வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி, தமிழகத்திற்கு வரு பவர்களின் குழந்தைகளால் போலியோ நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. அதனால், அந்த குழந்தைகளுக்கு கடந்த டிசம்பர் 11 மற்றும் ஜனவரி 8ஆம் என இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. நேற்று நடந்த சிறப்பு முகாமில் இடம் பெயர்ந்து வாழ்வோர் மற்றும் இலங் கை வாழ் அகதிகளின் 32 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
போலியோ ஒழிப்பில் இந்தியா சாதனை
இந்தியாவில் 1985 ல் தான் போலியோ முகாம்கள் தொடங்கபட்டது.அப்போது  3.5 லட்சம் பேர் போலியோ பாதிப்புக்கு உள்ளானது  கண்டறியப்பட்டது. ஆனால் இது படிப்படியாகக் குறைந்து கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு வயதுக் குழந்தை போலியோவால் தாக்கப்பட்டது பதிவானது. கடந்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதியிலிருந்து இதுவரை ஒருவர் கூட போலியோ நோய் பாதிப்புக்குள்ளாகவில்லை.

ஓராண்டாக போலியோ நோய் தாக்குதலுக்கு எவரும் உள்ளாகாதது வரவேற்கத்தக்க அம்சம் என்றாலும், இத்துடன் இந்த பணி நிறைவடைந்து விடவில்லை. இதே நிலை வரும் ஆண்டுகளில் தொடர தொடர் நடவடிக்கை அவசியம்