31 July 2010

எயிட்ஸ் ஜாகோ


பில்கேட்ஸின் "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் “ஆதரவு மற்றும் நிதியுதவியுடன்'எயிட்ஸ் ஜாகோ' என்ற பெயரில் இந்திய திரையுலக முன்னனி நட்சத்திரங்களைக் கொண்டு உருவாக்கியுள்ள எயிட்ஸ் பற்றிய நான்கு குறும்படங்கள் 22.07.10 அன்று சென்னையில் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

1.மீரா நாயர் இயக்கிய மைக்ரேஷன்


2.ஃபர்ஹான் அக்தர் இயக்கிய - பாசிடிவ்
3..சந்தோஷ்சிவன் இயக்கிய ப்ராரம்ப்(தி பிகினிங்)

http://www.youtube.com/watch?v=wTeG4K3v_hw


4.. விஷால் பரத்வாஜ் இயக்கிய பிளட் பிரதர்ஸ்

இந்த நான்கு படங்களில் மூன்று படங்கள் ஹிந்தியிலும் ஒரு படம் (சந்தோஷ் சிவன் இயக்கியது ) மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இப்பபடங்கள் குறித்த சுருக்கத்தினை இங்கே ஒருவார்த்தை வலைப்பூவில் படியுங்கள்.
இப்படங்களைப் பற்றிய குறிப்புகளே மிக உருக்கமாக இருக்கிறது.
பிரபலமான நடிகர்கள்,(பிரபு தேவா,சித்தார்த்,ஷமீராரெட்டி.)டெக்னீஷியன் கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இப்படங்கள் கண்டிப்பாக மக்களைச் சென்றடையும்.

நீங்களும் உங்கள் பகுதியில் இந்த நான்கு திரைப்படங்களையும் பார்க்கவோ அல்லது திரையிடவோ விரும்பினால் டி ஏ ஐ - வி ஹெச் எஸ் - ஐ 044 - 22542355 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
என மேலே சுட்டப்பட்ட வலைப்பூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போய்வாருங்கள் நரேஷ் குப்தா.


உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இன்று 31.07.2010 அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒரு சாமானியனைப்போல எந்த பந்தாவுமின்றி எளிமையுடனும் நேர்மையாகவும் பணியாற்றிய இவரது ஸ்டெயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிலரை பார்க்கும் போது நாமும் இப்படி இருக்க வேண்டும் என எனக்குள் தோன்றும். அப்படி நான் பார்த்து வியந்த, விரும்பிய, ஒரு அதிகாரி இவர்.இவரது பணியே ஒரு பாடம் என்னைபோல பலருக்கு. மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக நேற்று தலைமச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவரின் பாதையில் இவருக்கே தெரியாமல் இவரது பாதம் பட்டு எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டிருக்கிற்து .அவைகள் பெரும் விருட்சமாகி இவரை எப்போதும் நினைவுகூறும். போய்வாருங்கள் நரேஷ் குப்தா.

30 July 2010

Pay Authorisation July 2010

pay authorization for the month of July 2010 click below for copy

23 July 2010

கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 . இத்துறையில் பணியாற்றும் அனைவரும் படித்தாக வேண்டிய ஆவணம் இது.அரசு என்ன செய்திருக்கிறது என்ன செய்யப்போகிறது இதுவரை செய்ததின் விளைவுகள் என்ன என்பன போன்ற பல தகவல்களை பெற்றுள்ள பெட்டகம் இது. ப்டியுங்கள் உங்களை பற்றிக்கூட இதில் வரலாம்.


Health Family Welfare t

21 July 2010

டெங்கு எதிர்ப்பு மாதம்


டெங்கு எதிர்ப்பு மாத நடவடிக்கையாக 21.07.2010 அன்று தோகமலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளைக் கொண்டு ஒரு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில் முதன்மை பூச்சியியல் வல்லுனர் திரு.S.ஸ்ரீதரன், திருச்சி மண்டல பூச்சியியல் வல்லுனர் திரு A.பாலாஜி,கரூர் பூசிசியியல் வல்லுனர் திரு.A.சிவக்குமார் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் ம்ரு.சவுமியா அவர்களும் கலந்து கொண்டணர்14 July 2010

மாணவ மாணவியர் களுக்கு பாராட்டுச் சானறிதழ்

பஞ்சப்பட்டி ஆ.சு.நி. கண்மருத்துவ உதவியாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்கள் மகனுக்கு வழங்கப்பட்ட சான்று.
காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் சான்றிதழ் பெறும் காட்சி

கரூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களின் குழந்தைகளில் இநத ஆண்டு (2009-10) 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் 90 சதவிகிதத்திற்கு மேல் மதிபபெண் பெற்றவர்களுக்கு பாராட்டுச் சானறிதழ வழங்கப்பட்டது.மரு வீ.வீரபாண்டியன் துணை இயக்குனர் நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் அவர்களது முயற்சியில் 12.07.2010 அன்று விழாநடைபெற்றது.தோகமலை வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்திற்குட்பட்ட காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் ஓட்டுனராகப் பணியாற்றும் திரு.முருகபூபதி அவர்களின் மகன் திரு கபிலன் அவர்களும் 91சதவிதம் பெற்று சான்றிதழ் பெற்றார்.

11 July 2010

ஒருநாள் இரண்டு செய்திகள்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வருமுன் காப்போம் மருத்துவ முகாம் 09.07.2010 அன்று அ.உடையாப்பட்டிக்கு உட்பட்ட கழுகூரில் நடைபெற்றது.அன்று மாலை முகாமிலிருந்து மருந்து எடுத்துவர கரூர் துணைஇயக்குனர் அலுவலகம் சென்ற ஆம்புலன்ஸ் எதிபாராத விதமாக கரூரில் விபத்திற்குள்ளானது.ஓட்டுனர் திரு சந்தோசம் மற்றும் சீராளர் திரு.சக்திவேல் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர்.எதிரே மோதிய வாகனம் பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ்.அவ்வூர்தி மருந்துகளை ஏற்றிக்கொண்டு எதிரே வந்தது.