31 January 2009

உயிர் மருத்துவக் கழிவு





தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.



ஆரம்ப சுகாதார நிலையங்களில் உருவாகும் மருத்துவக் கழிவுகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நோய் தொற்றுக்கள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டன.

இந்த பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் என்ற புதிய முறை தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்படி, கழிவுகளை சேகரிப்பதற்காக ஒவ்வொரு பிரிவுக்கும் சிவப்பு, மஞ்சள், நீலம், கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கூடைகள் வழங்கப்படுகின்றன.

இதில், சிவப்புக் கூடையில் மருந்து, ரத்தம், குளுக்கோஸ், பிளாஸ்டிக் குழல் போன்ற கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.

மஞ்சள் நிறக் கூடையில் உயிர் மருத்துவக் கழிவுகளான, உடல் உறுப்புக்களின் சிதைவுகள், நஞ்சுக்கொடி, உடலுறுப்புப் பகுதிகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.

நீல நிறக் கூடையில், கண்ணாடி மருந்து குப்பிகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், கண்ணாடி வில்லைகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.

கருப்பு நிறக் கூடையில் காலாவதியான மருந்துகள், எக்ஸ் கதிர் இயக்க கழிவுகளைச் சேகரிக்க வேண்டும்.

(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கலாம்)


பச்சை நிறக் கூடையில் பொதுவான கழிவுகளான உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் உறைகள், மாவுகட்டுக் கழிவுகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும்.

இதற்காக மருத்துவமனைகளின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பல வண்ணங்களில் கூடைகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்தகைய சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்களை அதற்கான பிரத்யேக வாகனம் மூலம் அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவன வாகனம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

29 January 2009

Jan Pay authorization

Jan Pay Author is at Ion

28 January 2009

வருமுன் காப்போம்























வருமுன் காப்போம் முகாம் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 27.01.2009 அன்று தோகமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.சில புகைப்படங்கள் இங்கே.

17 January 2009

HRA CALCULAOR

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படிக்கான விசுவல் பேசிக் கால்குலேட்டர் டவுன் லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.


HRA CALCULAOR.exe

16 January 2009

பொங்கல் விழா




Photobucket



தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் மற்றும் புத்தாண்டு விழா புகைப்படங்கள்

15 January 2009

இடைக்கால நிவாரணம்

Photobucket

தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அறிவித்துள்ளது.அரசு ஆணை எண் 10 நிதி(பிசி)துறை நாள் 13.01.2009.இதன் படி 01.01.2009 அன்று பெறும் ஊதியத்தின் அடிப்படையில் ஒரு மாத ஊதியம்+தனிஊதியம்+அகவிலைஊதியம்+அகவிலைப்படி ஆகியவைகளின் கூட்டுத்தொகை யின் மூன்றுமடங்கு இடைக்கால நிவாரணமாக கிடைக்கும்.

01.01.2009 அன்று இரண்டு வருடத்திற்குமேல் பணி செய்தவர்களுக்கு 3 மாதமும் இரண்டு வருடங்களுக்கு குறைவாக பணிபுரிபவர்களுக்கு ஒரு மாதமும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
IR go

12 January 2009

பிரசவத்தில் சாதனை

TOP 5 DELIVERIES IN ADDITIONAL PHC'S KARUR DISTRICT FROM APRIL 08 TO DECEMBER 2008

Photobucket





கரூர் மாவட்டத்தில் மொத்தம் 29 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஊள்ளன. இதில் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்கள் 8.மீதமுள்ள 21 ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள்.முதன்மை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் சகல வசதிகளும் இருக்கும். முக்கியமாக இடவசதி.ஆனால் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிள் இடவசதி குறைவு.இந்த ஆண்டு ஏப்ரல் 2008 முதல் ஜனவரி 2009 வரையில் அதிகமான பிரசவம் நடைபெற்ற கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முதல் 5 இங்கே நிரல் படமாக. 113 பிரசவங்கள் பார்த்து முதல் இடத்தில் உள்ள தோகமலை வட்டாரத்தைச் சேர்ந்த காவல்காரன்பட்டி கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வாழ்த்துக்கள்.இச் சாதனயினை அடைய கடுமையாக உழைத்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள், தாய்மை துணை செவிலி, ஆகியோர் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.இச் சாதனை அடைந்த விதம் பற்றி தனி பதிவு பின்னர் எழுதுகிறேன்.

06 January 2009

தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி



Photobucket



Photobucket


Photobucket






இன்று 05.01.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள இரத்த சேமிப்பு நிலையத்தின் பயன் பாட்டினை பார்வையிட தமிழ்நாடு எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைட்டி மேற்பார்வையாளராக மரு.இராதகிருஷ்ணன்(tech. support unit TANSACs,NACO) அவர்களும் அவருடன் கோவையிலிருந்து பயோ மெடிகல் பொறியாளர் திரு.பாலராஜ சேகர் அவர்களும் வந்திருந்தனர்.மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,ஐ சி டி சி கவுன்சிலர் திருமதி.சுதா,மற்றும் ஆய்வக நுட்புனர் திரு.அழகர் ஆகியோர் உடனிருந்தனர்.

05 January 2009

வாகனம் புதிது








இன்று புதிய ஆம்புலன்ஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவு.சில புகைப்படங்கள்.அவுட் ரீச் க்காக வழங்கப்பட்டடுள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்








போலியோ சொட்டு மருந்தினால் குழந்தைகளுக்கு பாதிப்பு என்பது வெறும் வதந்திதான் அதன் நம்பவேண்டாம் எனவும், வதந்தி காரணமாக சொட்டுமருந்து போடாத குழந்தைகள் எதேனும் இருந்தால் உடன் போட்டுக்கொள்ள வற்புறுத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் களப்பணியாளர்கள்

04 January 2009

மகிழ்ச்சி காட்சிகள்.









போலியோ களப்பணியில் சில மழலைகளின் மகிழ்ச்சி காட்சிகள்.