30 November 2012

டெங்கு களப்பணி அனுபவங்கள்-2

கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சமி சொக்கலிங்கம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளஒர் விஷயம்.
ஒரு கிராமத்தில் கோவில் உண்டியலாக ஒரு எவர்சில்வர் குடத்தினை வெட்டவெளியில்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள்.மழை பெய்து உண்டியல் ஓட்டை வழியாக நீர் சேர்ந்து கொசுபுழுக்கள் உறுவாகியுள்ளது.அதனை கண்டறிந்த களப்பணியாளர்கள் உண்டியலை அகற்றச்சொல்லி ஊர் மக்களிடம் கேட்டுள்ளனர்.மக்களோ “சாமி குத்தம்” அயிடும் என பயந்து உண்டியலை அகற்ற மறுத்துள்ளனர்.பிறகு சாதுரியமாக சாமிகுத்தமும் ஆகாமல்,கொழுப்புழுவும் வளராமல் இருக்க மண் கொண்டு உண்டியல் வாயை பூசி மூடியுள்ளனர்.
படிப்பினை:
இனி,டயர்,கப்,தேங்காய் சிரட்டய்,பூந்தொட்டி...இவைகளுடன் ஓபன் உண்டியலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                                               சிகிச்சைக்கு முன்?

சிகிச்சைக்குப் பின்




26 November 2012

நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல்

ஒவ்வொரு மருத்துவ மணைகளிலும் நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல் நன்றி http://hainallama.blogspot.in/

22 November 2012

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்ட பிரச்சினைகள்


முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் இந்த வருடம் 2012-13 செப்டம்பர் வரை பயனாளர்கள்  அனைவருக்கும் தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ரூ.46,72,000  தொகைகள் வங்கிகள் மூலமாக அவர்களது கணக்கில் வரவு வைக்கப் பட்டுவிட்டன.ஆன் லைனில் ஏற்றப்பட்ட வங்கி கணக்கு எண்களின் தவறுகளின் காரணமாக அனுப்பப்பட்ட தொகைகள் திரும்ப மருத்துவ அலுவலர்களின் கணக்கிற்கே வருவது தொடர்க்கதையாக இருந்தது.20.11.2012 உடன் மிகுந்த சிரமத்திற்கிடையில் சரியான கணக்கு எண்களை கண்டுபிடித்து தொகை அனுப்பப்பட்டு விட்டது,

         தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இத்திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பை வழங்காதது வருந்தத்தக்கது.
        கணக்கு எண் சரியில்லை என திருப்பி அனுப்பும் தொகைகளுக்கான விவரங்களை சரியாக அனுப்பாததனால் மட்டுமே மருத்துவ அலுவலரின் கணக்கிலிருந்து பயனாளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகாத நிலை, பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளது.
      திரும்பிய பணம் யாருடையது? என கண்டுபிடித்து அந்த மனுவிற்குரிய சரியான கணக்கு எண்ணை தருமாறு கிராம சுகாதார செவிலியரிடம் picme எண்னுடன் கோரினால் மட்டுமே சரியான கணக்கு எண்களை பெறமுடியும்.
          மேலும் மனுக்களை ஆன் லைனில் ஏற்றும் பணிக்கென்று தனியாக டேட்டா எண்டிரி ஆப்ரேட்டர்கள் நியகிக்கப் ப்டாத்தால் பல இடங்களில் அவுட் சோர்சிங் முறையில் வெளியாட்களை கொண்டு டேட்டாக்கள் பதிவு செய்யப் படுகின்றன.
                                            பதிவு செய்யப்பட்ட மனுக்களின் விவரங்களை ஆய்வுசெய்வதுமில்லை.50 வயதுக்கு மேலானவர்களே பெரும்பாலும் பகுதி சுகாதார செவிலியர்களாக உள்ளனர்.அவர்களுக்கு கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாததால் அவர்களால் ஆய்வு செய்ய முடிவதில்லை.
                                          இந்நிலையில் ஏனோ தானோ வென்று ஏற்றப்பட்ட கணக்கு எண்கள் தப்பாக வங்கிக்கு செல்லும் போது அவைகள் திருப்பி அனுப்பப் படுகிறன.அவ்வாறு திருப்பி அனுப்பும் போது மருத்துவ அலுவலர் அளித்த இசிஎஸ் படி முழு விவரங்களுடன் திருப்பி அனுப்பப் படுவதில்லை..
இதனால் திரும்பிய பயனாளர்கள் யார் என கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
இதில் பாதிக்கப் படுவது அமைச்சுப் பணியாளர்களூம்,பயனாளர்களும் தான்.
ஏன் இவ்வளவுத் தொகை மருத்துவ அலுவலரின் கணக்கில் இருக்கிறது என உயர் அதிகாரிகள் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் பல இடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் திணறுகிறார்கள்.பயனாளர்களும், குழந்தையே பிறந்துவிட்டது இன்னும் பணம் வரவில்லை என வருத்தத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது.
1.அரசு பணம் கொடுத்துவிட்டது
2.அமைச்சுப் பணியாளர்கள் பட்டியல் தயாரித்து பணமாக்கி விட்டார்கள்
3.வங்கிக்கு இசிஎஸ் அனுப்பியாகி விட்டது.
இதுவரை சரியாக செல்கிறது.
1.வங்கியிலிருந்து உடனடியாக லிஸ்ட் வருவதில்லை.
2.வங்கியில் மொத்தமாக மட்டுமெ பணம் கழிக்கப் படுகிறது.
3. உதாரணமாக ரூ.15,00,000 இலட்சம் வங்கிக்கு .சிஎஸ் மூலம் அனுப்பப் பட்டால் ஒரே நாளில் 12,00,000 இருப்பில் கழிக்கப் படுகிறது(Debit).யார்யார் கணக்கில் வரவு வைக்கப் பட்டது என்பதற்கான பட்டியலை தேசிய வங்கிகள் தருவதில்ல,
4.வேறு ஒரு நாளில் ரூ.3,00,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது இது யார் பணம் என கேட்டால் அதற்கான முழு விவரங்களையும் வங்கி தருவதில்லை.”இதெல்லாம் கணக்கு எண் தப்பு அதனால் திரும்பிடுச்சு என வங்கி தெரிவிக்கிறது..
5.ரொம்ப வற்புறுத்தி கேட்டால் நேம் லிஸ்ட் மட்டும் தருவார்கள் அதில் உதாரணமாகபோதும்பொண்ணு 4,000 என இருக்கும் அதே பெயரில் 40 பேர் இருப்பார்கள் இது யாருடையது அவர்கள் picme எண் என்ன? என கண்டறிவது பிரம்மப் பிரயத்தனம்.


டெங்கு தடுப்பு: சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்சியர் அழைப்பு


திருச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட கிராமப்புறங்களில் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 7 பேர் மற்றும் 35 சுகாதார ஆய்வாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர்.
 
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 500, சுகாதார ஆய்வாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 400 வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, விருப்பமுள்ளவர்கள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தை அணுகலாம்.

குறிப்பு:

இது மாதிரியான பணியமர்த்தல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உண்டு