18 December 2010

சாதனையாளர் விஞ்ஞானி பொன்முடி

பொது சுகாதாரத்துறையில் பல தனித்திறமைகள் பெற்ற சாதனையாளர்கள் உள்ளனர் அவர்களைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,நாடகக்காரர்கள்,கூத்துக் கலைஞர்கள்,ஓவியர்கள்,பேச்சாளர்கள், என எத்தனையோ திறமையாளர்கள் இத்துறையில் உள்ளனர்.அவர்களில் ஒருவராக திரு.பொன்முடி அவர்களை பற்றிய பதிவினை இங்கே தருகிறேன்.மேலும் தொடர்ந்து பல சாதனையாளர்கள் பற்றிய விரிவான செய்திகள் தொடரும்.

க.பொன்முடி.
இள நிலை உதவியாளர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
ஈகுவார் பாளையம்

இதுதான் இவ்ரது அலுவலக முகவரி.பூமிப்பந்தினை பற்றிய நெடிய ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்.இதுவரை இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.நியூ சென்சுரி பதிப்பகம் மற்றும் விகடன் பிரசூரம் ஆகியவை இந்நூல்களை வெளியிட்டுள்ளது

பூமிப்பந்தின் புதிர்கள்.இது விகடன் பிரசூரம்.

நாம் வாழும் இந்த பூமி, எப்படி உருவானது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். நிலையாக ஓர் இடத்தில் இருப்பதுபோல் நாம் உணரக்கூடிய இந்த பூமி, உண்மையில் ஓரிடத்தில் நிலையாக இல்லை; சுற்றிக்கொண்டே இருக்கிறது. இது பூமி கிரகத்தைப் பற்றிய விஷயம்.
இந்த பூமியும்கூட, நிலம், நீர் என்று பிரிந்துள்ளது. நீர்ப்பரப்புக்கு அடியில்கூட நில மட்டம் இருக்கிறது. இந்த நிலமட்டத்தில் ஏற்படும் பெரும்பாலான மாற்றங்களும் பூமியின் அடிப்பகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன.
இப்போதெல்லாம் திடீரென்று சில இடங்களில் கடல் மட்டம் உயர்கிறது என்கிறார்கள். ஆனால் உண்மையில் கடல் மட்டம் உயரவில்லை; கடல்நீரால் மூழ்கடிக்கப்பட்டுள்ள நிலப் பகுதியே உயர்கிறது.... அதுவே கடல் மட்டம் உயர்வதாக நமக்கு ஒரு தோற்றத்தைத் தருகிறது என்கிறார் இவர்.

கடல் நீர் சூழ்ந்துள்ள நிலம், அதாவது கண்டங்கள்தான் உயர்கின்றன என்பதற்கு சில ஆதாரங்களை இந்த நூலில் முன்வைக்கிறார்

கண்டங்கள் நகர்தல் என்ற கோட்பாட்டை இவர் சில ஆதாரங்களை முன்வைத்து மறுக்கிறார். முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பிறகு நகர்ந்தன என்ற கூற்றையும் ஏற்கவில்லை

கண்டங்கள் நகரவில்லை; உயர்கின்றன என்பதே இவர் கருத்து.
ஒரு காலத்தில் நட்சத்திரங்களாக இருந்தவையே கால ஓட்டத்தில் குளிர்ந்து பாறையாக இறுகி பூமி போன்ற கிரகங்களாகின்றன என்பதைச் சொல்லி, மேற்கண்ட இந்தக் கருத்துகளுக்கு பக்க பலமாக பல தகவல்களை இந்நூலில் முன்வைக்கிறார்.

இவரது வீட்டு முகவரி.

விஞ்ஞானி.க.பொன்முடி
1 , அப்பு தெரு ,நுங்கம் பக்கம்,
சென்னை.600 034,
பேச : 98400 32928

இவர் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைத் தட்டுகள் உயர்வதால்தான் நில அதிர்ச்சி சுனாமி ஏற்படுகிறது என்பதை ஆய்வு மூலம் கண்டு பிடித்துஇருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் 25.05.2009,அன்று சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் திரு. ரமேஷ் பிரபா அவர்கள் இவரை நேர்காணல் செய்துள்ளார்.அதற்கான லிங்க் கீழே.


ராஜ் தொலைக்காட்சியில் 01.11.2009, அன்று நேரடியாக ஒளிபரப்பான மக்கள் மேடை நிகழ்ச்சியில் நில அதிர்ச்சி குறித்து நேயர்களின் கேள்விகளுக்கும், ஊடகவியலாளர் திரு முருகானந்தன் அவர்களின் கேள்விகளுக்கும் திரு.பொன்முடி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.அதற்கான லிங்க் கீழே.

இவர் இந்த ஆராய்ச்சிக்காக .பதவிஉயர்வு,நான்குவருட பணிக்காலம் மற்றும் ஊதியம் என நிறைய இழந்துள்ளார்.இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.இவரது சாதனைகளுக்காக இவரை வாழ்த்துவோம்.ஊக்கமளிப்போம்.


06 December 2010

நலமான தமிழகம்

தமிழகத்தில் இதய, சர்க்கரை நோயாளிகளை கண்டறிய வீடு தேடி வரும் "நலமான தமிழகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் தொற்றில்லாத நோய்களை கண்டறிய "நலமான தமிழகம்' என்ற திட்டம் துணை முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டு பொது சுகாதார துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் இந்நோய்கள் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மக்களை காப்பாற்றும் வகையில் இத்திட்டம் முதற்கட்டமாக கிராமப்புறத்தில் வாழும் மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பயிற்சி பெற்ற தன்னார்வ பணியாளர்களை கொண்டு ஒவ்வொரு வீடுகளிலும் சென்று 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரது உடல்நிலை வரலாறு, உடல் உழைப்பு விபரங்கள், பெற்றோருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் விபரங்கள், இடைச் சுற்றளவு ஆகியவை அறியப்பட்ட அதன் அடிப்படையில் புள்ளிகள் (ஸ்கோர்) வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் புள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது. 30க்கும் கீழ் புள்ளிகள் இருந்தால் அவர்கள் பெயர், விபரங்கள் சேகரிக்கப்படும். அவர்கள் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் கிராம அளவில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்களை கொண்ட முகாமில் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு அதில் குறைபாடு ஏற்பட்டால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைத்து வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு அதன் மூலம் சர்க்கரை, ரத்த அழுத்த, இதய நோயாளிகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

05 December 2010

After one man commission

fin_e_63305_5_2010