30 March 2012

AUDIT POINTS

AUDIT POINTS UNDER,AUTOMATED TREASURY BILL PASSING SYSTEM

https://docs.google.com/document/d/1UJY4DYkXVwtaOUemntv4vFynPdmX3Aa2EscyVhGH9YE/edit


15 March 2012

யார் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி?


13.03.2012 அன்று மைலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தினை கரூர் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் திரு.சம்பத்குமார் அவர்கள் நடத்தினார்.அமைச்சுப்பணியாளர்கள் சார்பாக நானும் கலந்து கொண்டேன்.கூட்டம் முடிந்து சாவகாசமாய் மரத்தடியில் பேருந்துக்காக காத்திருந்த போது கிராம சுகாதார் செவிலியர்,சமூக சுகாதார செவிலியர்,பகுதி சுகாதார செவிலியர் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்த போது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப் பற்றி பேச்சு திரும்பியது.அப்போது டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி பற்றி நானறிந்த சில விஷயங்களை கூறியபோது அனைவரும் ஆவலுடன் கேட்டதுடன்சார் அவுங்க அவ்வளவு பெரிய ஆளாஎன ஆச்சரியப்பட்டனர்.டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி பற்றிய சில தகவல்கள் கீழே. • புதுக்கோட்டையில் பிறாந்த இவர் முதன் முதல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்.
 • மருத்துவத்துறைக் கல்வியில் எம்.பி.சி.எம் என்கிற பட்டத்தை முதன் முதல் பெற்ற தமிழகப் பெண்மணி
 • இந்திய அரசின் உதவித்தொகை பெற்று பிரிட்டனுக்கு சென்று, பெண்கள் - குழந்தைகளின் நோய் பற்றி ஆராய்ச்சி செய்த முதல் பெண்.
 • தமிழக சட்டமன்றாத்தில் துணைத்தலைவர் என்ற பதவியை எதிர்ப்பில்லாமல் ஒரு மனதாகத் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
 • அன்னி பெசண்ட் அம்மையார் மற்றும் மார்கரெட் கசின்ஸ் அகியவர்களுடன் இணைந்து இந்திய மகளிர் மன்றம் என்ற அமைப்பை பெண்ணுரிமைகளுக்காகப் போராடுவதற்காக துவங்கியவர்.
 • பால்ய விவாகம் ஒழிய முக்கியக் காரணமாக இருந்தவர்.
 • நகராட்சி,சட்டமன்றம்,சட்டமேலவை ஆகியவைகளில் பெண்களுக்கும் உரிமைவேண்டும் என்பற்கு எடுத்துக் காட்டாக இவைகளில் உறுப்பினர்களாக இருந்தவர்.
 • தேவதாசி முறைகள் இருக்கக் கூடாது பெண்கள் தன்மானத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழவேண்டும் என்பதற்காக தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்.
 • அவ்வை பொதுநலப்பணி மருத்துவமணையை சென்னை அடையாறில் நிறுவியவர்.கிராம முன்னேற்றம், கிராம சுகாதாரம்,தண்ணீர்வசதி,கல்வி வசதி,நூலக வசதி ஆகியவைகளை அமைத்துத் தந்தவர்.
 • அவ்வை இல்லம் உறுவாக்கியவர். இங்குள்ள பெண்கள் மருத்துவ மணைகளில் நர்ஸ்களாகவும்,சுகாதார மேற்பார்வையாளர்களாகவும்,கிராம சேவகிகளாகவும்,சுகாதார செவிலியராகவும்,பெண்கள் நலத் தொண்டர்களாகவும் உறுவாக்கப் பட்டுள்ளனர்.
 • சென்னை புற்று நோய் ஆராய்ச்சி கழகத்தை நிறுவியவர்.
 • மகாத்மா காந்தியினிடத்தில் இவருக்கிருந்த செல்வாக்கினை பயன் படுத்தி 1945 ல் டாக்டர் ராமச்ச்சந்திரன் என்பவர் திண்டுக்கல் அருகே காந்திகிராமம் என்ற ஒரு கிராமம் அமைய பரிந்துரைச் செய்து , காந்தி கிராமம் நிறுவிடச் செயல்பட்டார்.
 • காந்தியடிகள் கைது செய்யப்பட்ட போது அதைக் கண்டித்து ஆங்கில கவர்னரால் நியமனம் செய்யப்பட்ட தனது சட்ட மன்ற மேலவை உறுப்பினர், துணைத்தலைவர்,பதவிகளை ராஜினாமா செய்தவர்.
 • 1933ல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்.
 • “மிஸ்மேயோவின்” புத்தகக் குறிப்புகள் இந்திய மருத்துவமணை நோயாளிகள் பற்றிய குறிப்புத்தானே தவிர இந்தியர்களின் வாழ்க்கைப் படப்பிடிப்பு அல்ல::” என அமெரிக்காவிலே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தவர்.
 • 1952 ல் ராஜாஜி முதல்வராக பதவி ஏற்றபோது இவரை மீண்டும் மேலவை உறுப்பினராக கேட்டுக் கொண்டார்.அதைவிட முக்கியமானது புற்று நோய் மருத்துவ மணை அமைப்பது என்று சொல்லி மேலவை உறுப்பினர் பதவியை நிராகரித்தார்.
 • மகாகவி பாரதியை நேரில் சந்தித்தவர்.பாரதியே இவரிடம் பெணுரிமை பற்றி அவர் ஆசிரியராக இருந்த இந்தியா பத்டிரிக்கையி எழுத கேட்டுக் கொண்டார்.
 • “எனது சட்டமன்ற அனுபவங்கள்” என்ற நூலை எழுதியவர்.
 • இவரது கணவர் திரு.சுந்தர ரெட்டி.இவரும் டாக்டர்.தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்.தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த சுப்பராய ரெட்டியாரின் தமக்கை மகன் இவர்.

08 March 2012

உலக மகளிர் தினம்

மார்ச் 8 உலக மகளிர் தினம் .பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைத்து  மகளிருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனத்து மகளிரும் இணைந்து இன்றைய தினம் எடுத்துக் கொண்ட புகைப்படம் கீழே.


06 March 2012

ஒரு அரசு ஊழியரின் பொது வாழ்வுப் பிரவேசம்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் நிலை 2 ஆக பணியாற்றிய திரு.ஏ.டி.பழனிச்சாமி அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் கடவூர் ஊர்ராட்சி ஒன்றியம் மாவத்துர்ர் ஊராட்சி தலைவராக போட்டியிடுவதற்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார்.1150 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அவருக்கு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


Re-constructive Surgery (RCS)

தோகைமலை முதன்மை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட காவல்காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பகுதியைச் சேர்ந்த நாவல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.அன்னாவி அவர்களுக்கு  திருச்சி பாத்திமாநகரில் ”ஹோலி பேமலி ஹேன்சனோரியம்” மையத்தில் (Re-constructive Surgery (RCS)) முடநீக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான உதவித்தொகை ரூ.5000 16.02.2012 அன்று காவல் காரன் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது.அது சமயம் மாவட்ட தொழுநோய் அலுவலகத்திலிருந்து திரு.பெருமாள்,ஹெல்த் எஜுகேட்டர், திரு.சந்திரசேகர் என்.எம்.எஸ் மற்றும் திரு.ஃப்ரான்சிஸ் என்.எம்.எஸ் ஆஹியோர் வந்திருந்தனர். நிகழ்சிக்கு தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.ஆர்.மனோகரன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்,


04 March 2012

“முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்”


Chief Minister's Comprehensive Health Insurance Scheme

இத்திட்டத்திற்கு “முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்”  என்று பெயர்.

 பொதுத் துறை நிறுவனமான, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

 இந்த காப்பீட்டுத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்துக்கு, ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதற்கான தொகையை, இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும்

 ஏற்கனவே இருந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, 1.34 கோடி குடும்பங்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
1.இத்திட்டத்தின் கீழ் அங்கிகரைக்கப்பட்ட மருத்துவமணைகளின் பெயர் பட்டியலைப் பார்க்க https://sites.google.com/a/healthsprint.com/tamilnadu_packages/
2.சிகிச்சை வாரியான தொகை விவரம் அறிய https://sites.google.com/a/healthsprint.com/tamilnadu_packages/packages


நோயாளிகள் மருத்துவ மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் நாளிலிருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதைகளுக்கான கட்டணம் மர்றும் இதர செலவீனங்களுக்கான தொகையும் இத்திட்டத்தில் அடங்கும்.

இதில் பச்சிளம் குழதைகளுக்கான சிக்கிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளும் 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் (follow-up procedures) வழி செய்யப்படுள்ளன..மேலும் 23 நோய் அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் அனுமதி உண்டு.சிகிச்சை தொடர்பான பரிசோதனைகளும் காப்பீடுக்காக வரயறுக்கப்பட்ட தொகையில் அடங்கும்.

அறுவை சிகிச்சை தேவைப்படாத பட்சத்தில் செலவழிக்கப்பட்ட கட்டணத்தொகையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாLiயின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும்


01 March 2012

டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை


 தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 173 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன. இவற்றை முழு அளவில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குனரும், அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி தலைவருமான டாக்டர் கே.செல்வராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் ஏ.சி.மோகன்தாஸ், பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ரத்த சேமிப்பு மையங்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிகளில் இருந்து ரத்தம் கொண்டு செல்லப்படும். அதற்காக, 10 முதல் 15 ரத்த சேமிப்பு மையங்களை, ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கியுடன் இணைத்துள்ளோம். இதை சிறப்பாக முழு அளவில் செயல்படுத்த, இவற்றில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 40 டாக்டர்கள் வீதம் 5 நாட்களுக்கு 200 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதனால், கிராமங்களில் போதுமான ரத்தம் கிடைக்காமல், பெண்கள் பிரசவ நேரத்தில் இறப்பது முழுமையாக தடுக்கப்படும். 

ரத்த சேமிப்பு குறித்து மேலாண்மை பயிற்சி முகாமை டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ் தொடங்கி வைத்து, டாக்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.கரூர் மாவட்டத்தில் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையமும் ரத்த சேமிப்பு மையமாகும்.