30 August 2009

திருமணம்

இன்று 30.08.2009 தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைப் பணியாளராக பணிபுரியும் திரு.எஸ்.கண்ணன் அவரிகளின் திருமணம் திருச்சி காட்டூர் பரத் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம்.எங்களது குடும்பத்தின் புது வரவான மணப்பெண் ஜி.விஜயலட்சுமி அவர்களை வரவேற்கிறோம்.



27 August 2009

Pay authorization

August 09

23 August 2009

புதிய வருகை


கடந்த இரண்டு மாதங்களில் புதிதாக மூன்று நபர்கள் தோகமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்கள் 

1. செல்வி.ராஜலக்ஷ்மி செவிலி.நடமாடும் மருத்துவ குழு விற்கான செவிலியராக பணி யேற்றுள்ளார்.அரசுப்பணிக்கு புதியவர்.

2.மரு. திருமதி.நிறைமதி திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மாறுதலாகி தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியேற்றுள்ளார்.இவர் தண்டலை புத்தூர் ஆ.சு.நி ல் நடமாடும் மருத்துவ குழு விற்கான உதவி மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.
 
3. திரு.சந்தோஷம் நடமாடும் மருத்துவ குழு விற்கான ஊர்தி ஓட்டுனர். அரசுப்பணிக்கு புதியவர்.

மூவரையும் மனமுவந்து வரவேற்கிறோம்.


19 August 2009

PCA Clarification

Clarification 17 08 09

18 August 2009

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ்

"தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இம் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் 01.08.2009 முதல் அந்தந்த மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிது.இதற்காக ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்களை கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர்களாக நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.G.O.Ms.No.204, Health and Family Welfare (AB 2)Department, dated 15.07.2009.

துணை சுகாதார நிலையங்கள், அல்லது வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்களது வீடு தேடிச் சென்று பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.


இதனால் பிறப்புச் சான்றிதழ் பெறுவது மிகவும் எளிதாக்கப்படுகிறது.

மக்கள், நலத்திட்டங்களை பெற அலைந்த காலம் போய், மக்களை தேடி திட்ட உதவிகள் செல்லும் காலம்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இறப்பு நிகழ்ந்தால் அதற்கான சான்றிதழும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழங்கப்படும்.


15 August 2009

சுதந்திரதினம்

63வது சுதந்திரதின வாழ்த்துகள்.
இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
"ஜெய்ஹிந்த்"

06 August 2009

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?இப்படியெல்லாம்இருக்கிறது என்று?

ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நடைபெற்றுள்ள பிரசவ‌ங்களின் எண்ணிக்கை இதோ. 2006 -2007=82532

2007-2008 =153989

2008-2009 =259193  

கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை பன்மடங்கு கூடியுள்ளது.

இதற்கான காரணம் என்ன ?

   1.மகப்பேறு சமயத்தில் தாய்/சிசு மரணவிகிதம் அபரிமிதமாக குறைந்துள்ளது.

தாய், குழந்தை கவனிப்பு மக்களுக்கு திருப்தி அளிக்கிறது. 

   2. 24 மணி நேரமும் மருத்துவர்கள்,செவிலியர்கள் பணியில் உள்ளனர்.

   3. சிக்கலான பிரசவம் எனில் பக்கத்தில் உள்ள அரசு  மருத்துவமணைக்கு அழத்துச்செல்ல ஆம்புலன்ஸ் எப்போதும் உள்ளது.

   4.இரவு நேரங்களில் வீட்டில் பிரசவ வலி ஏற்பட்டு விட்டால், ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வருவதற்கு தனியார் வாகனத்திலும்(டாக்சி)வரலாம்.அதற்கான‌ வாடகையினை கிராமசுகாதார செவிலியரிடம் பெற்றுக்கொள்ளலாம்.

  5. பிரசவத்திற்கு பெண்ணுடன்வரும் ஆண்/பெண் துணை பிரசவத்தின்போது உடன்இருக்க அனுமதி உண்டு.   6.உடன் வரும் துணையாளருக்கு

 தங்கிக்கொள்ளஇடம்,

குளிக்கடவல்,சோப்பு,பேஸ்ட்,பிரஷ் 

அடங்கிய கிட்வழங்கப்படும்

  7.கர்பமான 7 வது மாதம் டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் மூலம்ரூ.3000/-காசோலைவழக்கப்படும்.

பிரசவம்முடித்து டிஸ்சார்ஜ் ஆகும்போது ரூ.3000/-க்கானகாசோலை யுடன் ஜனனிசுரக்ஷா யோஜனாதிட்டத்தின் மூலம்ரூ.700/-க்கானகாசோலையும்வழங்கப்படும். (முதலாவது முதல்இரண்டு கர்பத்திற்குமட்டும்,இரண்டாவதுமுதல் இரண்டுபிரசவத்திற்குமட்டும்.எனைய விதிகள்பொருந்தும்)

   8.பிரசவமான அன்றிலிருந்து இரண்டுநாட்களுக்கு ஆறு வேளைக்கும் உணவு வழங்கப்படும்.

   9.குடிக்க , குளிக்க சுடுநீர் வழங்கப்படும்.

   10.பிரசவத்திற்கு பின்குடும்ப நல அறுவைசிகிச்சைசெய்துகொள்ளும்தாய்மார்களுக்கு ரூ.600/- ரொக்கமாக வழங்கப்படும்.





டி.கல்லுப்பட்டி

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளதை கடந்த இரண்டு வருடங்களில் கண்டு வருகிறோம்.

12 மணி நேரத்தில் 10 பிரசவம் நடைபெருவது என்பது சாதாரணமானதல்ல.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

5 ஆண் குழந்தைகள் 5 பெண் குழந்தைகள்.அனைத்தும் சுகப்பிரசவம்.

கடந்த 28 ம் தேதி மாலை 3.00 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 3.00 மணி வரை இப் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

ஒரு குழந்தை பிறந்து அந்த மேசையையும் அறையையும் சுத்தம் செய்யக்கூட நேரம் இருந்திருக்காது.

இச் செய்தியின் பின்னால் இருக்கும் மருத்துவர்கள்,(medical officer) செவிலியர்கள்,(staff nurse)கிராம சுகாதார செவிலியர்கள்,(village health nurse)துப்புரவுப்பணியாளர்கள்,(sanitory worker) இதர உதவியாளர்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது.

வாழ்த்துவோம்,பெருமை கொள்வோம்,தலை வணங்குவோம்



05 August 2009

தொடர் கேள்விபதில்

அழைத்த

>மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்

அவர்களுக்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ? அம்மாவின் அப்பா பெயர் வேங்கட்ராமன்.அப்பாவின் அப்பா பெயர் சுப்ரமணியன்.இதன் காரணமாக தாத்தாவால் வைக்கப்பட்ட பெயர். சிறுவயதில் நீளமான பெயர் பிடிக்காமலிருந்தது.ஸ்,ஷ்..சேர்ந்த மூன்றெழுத்துப்பேர் ஸ்டெயிலாக இருந்திருக்கலாம் என நினைப்பேன். இப்போது அம்மா, அப்பா, மனைவி, மாதிரி என்னோடது என்பதில் சந்தோஷம் உண்டு.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
இது அடிக்கடி நிகழ்ந்து விடுகிறது.என் அப்பாவின் இளமைக்கால நெருக்கமான நண்பரை போனவாரம் தற்செயலாக சந்தித்தபோது.(1984 ல் எனது தகப்பனார் இறந்தார்.)அப்பாவையே நேரில் பார்த்தது போல இருந்தது.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ம்.ம்..ஹூம்.
4).பிடித்த மதிய உணவு என்ன?
சூடாக சாம்பார்,ரஸம்,மோர்
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இல்லை.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பயம் தனியாக ராட்டிணம் சுற்றுவது மாதிரி
அருவி சுகம் அப்பாவின் மடியில் உட்கார்ந்து ராட்டிணம் சுற்றுவது போல.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆணா? பெண்ணா?
பாடி லாங்வேஜ்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ? கர்வம்.இரண்டுக்கும் இது தான் பதில்
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : என் மீது அக்கறை
பிடிக்காத விஷயம் : என் மீது ஓவர் அக்கறை
10. யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?..
அப்பா. அவர் உயிரோடு இருக்கும் வரை உருப்படாத பிள்ளையாய் இருந்துவிட்டேன்.இப்போது இருந்தால் சந்தோஷப்படுவார். எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டு தான் இருப்பார்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இன்று ஆவணியாவிட்டம் பூனூல் மாற்றிக்கொண்ட கையோடு இருக்கிறேன்.சட்டை இல்லை .வேட்டி மட்டும்.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
பாட்டு எதுவும் இப்போது கேட்கவில்லை.
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை? வெள்ளை
14.பிடித்த மணம்?
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல?
அதிகாலை தலயணைசூட்டு மணம்
பசி நேரத்தில் சமயலரையிலிருந்து வரும் தாளிக்கும் வாசனை.
குளிகாலத்தில் போர்வைக்குள் அடுத்த உயிரின் சுவாசம்.
அலைச்சலில் வீடு திரும்பும் போது மனைவி செய்யும் பூஜை மணம்.
நிறைய....உள்ளது.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
1.R.P. ராஜ நாயஹம் http://rprajanayahem.blogspot.com/ அனுபவக் கடல் 2.அகநாழிகை வாசுதேவன்http://aganaazhigai.blogspot.com/ கவித்துவமான மனிதர் 3.லதானந்த் http://lathananthpakkam.blogspot.com/ சிங்கம்
4.சபாநாயகம் சார் .http://ninaivu.blogspot.com/ என் மண்ணின் மைந்தர்.குரு.
5.http://kanavukale.blogspot.com/
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ? http://www.payanangal.in/2008/10/blog-post_15.html http://www.payanangal.in/search/label/அரசு_ஊழியர் 17.
பிடித்த விளையாட்டு ?
கிரிக்கெட்,ஷெட்டில்,
18.கண்ணாடி அணிபவரா?
படிக்கும்போது
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
சேரன் படங்கள் மாதிரி
20.கடைசியாகப் பார்த்த படம்?
பொண்ணு ஊருக்குப் புதுசு.
(பி.கு.கிராம சுகாதார செவிலியின் கதை,நன்றி மோசர் பியர்)
21.பிடித்த பருவ காலம் எது?
பின் பனிக்காலம்.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
கீதை(சித்பவானந்தர் உரை தினமும் ஒரு பக்கமாவது)
கோயிலொழுகு 5ம் பாகம்
வடு (கே.ஏ.குணசேகரன்)
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எத்தனை மணி நேரத்திற் கென்று என் இளய மகன் விபின் சந்தரிடம் தான் கேட்கவேண்டும். 24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மழை பெய்யும் சத்தம் பிடிக்கும்
பெய்து ஓயும் சத்தம் பிடிக்காது.
(பெய்து கொண்டிருக்கும் போதே தூங்கிவிட வேண்டும் என நினைப்பேன்)
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
திருப்பதி
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தெரியவில்லை.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அவமதிப்பு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நான் எனும் கர்வம்.அகங்காரம்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மூணார்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
எழுத்தாளனா,சினிமா டைரக்டரா,பத்திரிக்கையாளரா,அரசியல்வாதியா, ஆன்மீக வாதியா, வயசுக்கு ஏத்த மாதிரி எப்படியெல்லாமோ இருக்க கனவு கண்டு, இப்போது இருப்பது சராசரி அரசு ஊழியனா.
31.கணவர்/மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
துணையின் பெருமை பற்றி அடுத்தவரிடம் சொல்வது.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பாசவலை.