21 February 2014

திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம்

இன்று 21.02.2014 திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் காணொளி காட்சி மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இப் பகுப்பாய்வகத்தினால்  திருச்சி,பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,திண்டுக்கல்,கரூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி மற்றும் அரசு நிறுவனங்களில் பொது மக்களூக்கு விநியோகிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை காலமுறை தோறும் நீர்மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இதனால் குடிநீரினால் பரவும் தொற்று நோய்களான வாந்திபேதி,காலரா போன்ற கொள்ளை நோய்கள் வராமல் பொது மக்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்..சென்னை கிங் நிலைய நோய்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இயங்கிவரும் தலைமை நீர் பகுப்பாய்வகத்தின் மற்றுமொரு கிளைதான் இது.

17 February 2014

Revised Guidelines for Hiring of Specialists - Obstetrician

Revised Guidelines for Hiring of Specialists - Obstetrician & Anaesthetists and Trained Medical Officers for the Family Welfare

Ref.No:2270/SHS/P/12, Dated :  4.12.2013
Sir,                 
                      
Sub:
SHS/TN-NRHM/RCHP- Revised Guidelines for Hiring of Specialists - Obstetrician & Anaesthetists and Trained Medical Officers for the Family Welfare procedures under MCH care -reg.
Ref:
Ref.No:4459/SHS/P/2012 dated 07.11.13
***

                       I have to state that in this office reference cited above, the revised Guidelines for Hiring of Specialists for the Family Welfare procedures under MCH care have been communicated. As per the request made by the DDHS during the recent review meetings and field visits, it has been decided to provide INCENTIVES FOR PS-TAT TRAINED MEDICAL OFFICERS  performing the Family Welfare procedures and the revised guideline added as B-1 is as follows:

(i)               Incentives for the PS –TAT trained Medical Officers performing Family Welfare procedures between 7 am – 7 pm in the same facility - Rs.200 per Family Planning Session.

(ii)              Incentives for the PS –TAT trained Medical Officers performing Family Welfare procedures between 7 am – 7 pm in the other Government Instituions  - Rs.200 per Family Planning Session + Rs.500 as Mobility Support.
(iii)           .

This guideline stands effective from 1.12.2013 onwards.for  Mission Director.

சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்.

திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம்

வரும் 21.02.2014 அன்று மான்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் .

15 February 2014

டேலி வேலு

                                   பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் கண்காணிப்பாளர்கள் ,கணக்கு உதவியாளர்கள் , மற்றும் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்கள் ஆகியோருக்கு 5 நாட்கள் டேலி பயிற்சி சென்னை எக்மோர் பயிற்சி நிலையத்தில்  அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பேட்ச்சாக 10.02.2014 முதல் 14.02.2014 வரை 5 தினங்கள் திருச்சி,புதுக்கோட்டை,காஞ்சிபுரம்,பெரம்பலூர்,அறந்தாங்கி,கள்ளக்குறிச்சி ஆகிய 6 சுகாதாரப்பகுதி மாவட்டத்தைச் சேர்ந்த வர்களுக்கு இப்யிற்சி வழங்கப்பட்டது. இதில் திருச்சி சார்பாக கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டியது.இப்பயிற்சி ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என சென்னைக்கு கிளம்பும் போது எதிர்பார்க்கவில்லை.பயிற்சி அளித்தவர்கள் ”சாய்சொலிஷன்” பயிற்சியாளர்கள் திரு,சாம்சன் ஜெயக்குமார், திரு.டேலி வேலு ஆகியோர்.வயது வித்தியாசமில்லாமல் 20 முதல் 57 வரை அனைத்து வயதுக்காரர்களும் பயிற்சியில் கலந்து கொண்டோம்.எளிமையாக யாவர்க்கும் புரியும் வகையில் துறைசார்ந்த விஷயங்களுடன் இக்குழுவினர் வகுப்பு எடுத்த விதம் அருமை.இடையிடையே கேள்விகேட்டு அதற்கான பதிலை வேறு ஒருவரைச் சொல்லச் செய்த திரு வேலு அவர்களின் சாதுரியம் அபாரம்.கொஞ்சம் கூட அசட்டையாக இருந்துவிட முடியாது எப்போது கேள்வி கேட்பார் எனத்தெரியாது.தவறான பதில் சொன்னால் கேலி செய்யாமல் மீண்டும் அந்தப்பகுதியை விரிவாக நடத்துவார். திரு.சாம்சன் அவர்களோ முழுக்க முழுக்க பாடம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார் , சில சமயம் நடுவில் சில விடுகதைகளை தொடுப்பார் கொஞ்சம் சொக்கிப்போயிருக்கும் வகுப்பு அப்போது நிமிர்ந்து உட்காரும். திடீரென உள்ளே நுழையும் ”கார்த்தி”யோ கேள்விக்கனைகளோடே உள்ளே வருவார்.இவரது கேள்வி நடைமுறையில் ஏற்படும் சிக்கல் தொடர்பானதாக இருக்கும்.மொத்தத்தில் ஒரு சிறந்த பயிற்சி.நம்மாலும் முடியும் என்கிற நம்பிக்கையை இதுவரை டேலி தெரியாதவர்களுக்கும், நாம் இனி தங்கு தடையின்றி டேலியை கையாளலாம் என்கிற நம்பிக்கையை முன்னமே டேலி தெரிந்த ஊழியர்களுக்கும்  ஏற்படுத்திய ஒரு பயிற்சி.இதில் குறிப்பிட வேண்டிய ஒரு அம்சம் எங்கள் மண்டையில் எப்படியாவது டேலியை ஏற்றிவிட வேண்டும் என்கிற இவர்களின் ஈடுபாடு, அதற்கான இவர்களின் பிரம்மப்பிரயத்தனம். இந்த பயிற்சி முடிவுநாளன்று 25 மதிப்பெண்களுக்கு தேர்வு.ஆச்சரியமான விஷயம் என்னவெனில் எல்லோருமே 18 க்கு மேல் தான் மதிப்பெணெடுத்தனர். முதல் மதிப்பெண் எடுத்தவர் 57 வயதாகும் இன்னும் 11 மாதங்களில் ஓய்வுபெறப்போகும் புதுக்கோட்டை மாவட்ட கன்காணிப்பாளர் திரு,கணேசன் அவர்கள். இடைவேளைகளில் கொடுக்கப்படட  ”அட்டு” டீ ,பிஸ்கெட், சுண்டல்  தவிர மற்ற அனைத்தும் அற்புதம். டேலி வேலு அவர்களுக்கு ..ஓ..ஓ..ஓ.

ஸ்ருதி

http://www.youtube.com/watch?v=LkqKbnJS8pg”திக்கித் தெனருது தேவதை “ இது உ திரைப்படத்தில் வரும் பாடல். பாடியிருப்பவர்கள் சூப்பர் சிங்கர் ஆஜித் மற்றும் ஸ்ருதி.இதற்கும் நம் துறைக்கும் என்ன சம்மந்தம் என நினைக்கிறீர்களா? இருக்கிறது ஸ்ருதி அறந்தாங்கி துணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் திரு.பால நாராயணன் அவர்கள் மகள்.

திக்கித் தெனருது தேவதை....
வெக்கப் படுதொரு பூமழை... - தானா
சிக்கி கெடக்குற ஆம்பளை...
நான் தான்... ஆ...ஆ...

அரிசி நெல்லுளையும்...
குத்தும் முல்லுளையும்...
உன் முகம் வந்து சிரிக்கும்
அந்த நிலா தோர்த்துப் போகும்...
உன்னை பார்க்க நேரா வாழ்த்த பிடிக்குதே.... எ. ஏ...

கட்டிக் கரும்புல தீப்பொறி...
என்னை நோருக்குது உன் முழி - நீதான்
புத்தம் புதுசா பூத்த பூச்செடி! ஒ.. ஒ...

ஆளைக் கொல்லுதே... ஆயுள் கேக்குதே...
நீ வரும் நேரம் கொழம்பும்
கெடிகாரம் கொஞ்சம் மறுக்கும்
வேலை முடிக்க மயங்கி செலையா நிக்குதே...

அணை கட்டித் தண்ணி போல நிக்குறே
அர்த்த ராத்திரி முழிச்சுக் கெடக்குதே..

ஒத்தை சிரிப்புல ஒரைஞ்சிக் கெடக்குறே...
கிட்ட நினைக்கையில் கெரங்கித் தவிக்கிறே...
ஆத்தாடி உசுருல ஒழுகித் துடிக்கிறே.

உறவாக உன்னை நான் கடவுள் கிட்ட கேட்டு வாங்குவேன்...

08 February 2014

தொகுப்பூதிய செவிலியர் ஊதிய உயர்வு

RCH தொகுப்பூதிய செவிலியர்களுக்கு 01.04.2013 முதல் திருத்தப்பட்ட ஊதியம் நிர்ணயிக்கப்படுள்ளது.(Procs.No.2709/SHS/E/2013  Dated.   06.02.14). இதன்படி கீழ்கண்டவாறு ஊதிய நிர்ணயம் இருக்கும். 01.04.2013 முதல் நிலுவை த்தொகை பெற்றுக்கொள்ளலாம்.


நடமாடும் மருத்துவக்குழு ஊர்தி பராமரிப்பாளர் ஊதியம்

                         பொது சுகாதாரத்துறையில் இயங்கிவரும் நடமாடும் மருத்துவக்குழு வில் ஊரிதி ஓட்டுனர்(Driver), ஊர்தி பராமரிப்பாளர்(Cleaner-cum-Attender) ஆகிய இரண்டு பணியிடங்களும் தொகுப்பூதியத்தில் இருந்து வந்தது.ஓட்டுனர்களுக்கு ரூ.4000 மற்றும் ஊர்தி பராமரிப்பாளர்களுக்கு ரூ.3000 என இருந்தது. 

                    மாநில நலவாழ்வுக்குழும இயக்குனர் அவர்களின் கடித எண் 5711/P/SHS/13, dt.29.7.13 படி இவ்வூதியம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கும் தினக்கூலியினடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது 29.07.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

                    தற்போது  மாநில நலவாழ்வுக்குழும இயக்குனர் அவர்களின் கடித எண் 5711/P/SHS/13,  dated 1.2.2014 படி ஊர்தி பராமரிப்பாளர்(Cleaner-cum-Attender) க்கும் இம்முறை நீட்டிக்கப்பட்டுள்ளது இதனால் ஒரு மாத்த்தில் 25 நாட்கள் பணிபுரியும் ஊர்தி பராமரிப்பாளர் ஒரு மாதத்திற்கு 1000 லிருந்து 2000 வரை கூடுதலாக ஊதியம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இது 01.02.2014 முதல் அமலுக்கு வருகிறது. (தினக்கூலி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடும்)


https://docs.google.com/document/d/12iVRosSA1OywigS2F-JlUss0eUmVG_LfMuXje9ypbTQ/edit?usp=sharing