22 June 2010

அரசு ஊழியர்கள் இனி கையெழுத்து இடவேண்டாம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலும் ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயண்கள் கருவூலத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்டு நேரடியாக பணியாளர்களது வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.அதற்கான பற்றொப்பப் பதிவேட்டில் (acquittance) அவர்களது கையொப்பம் பெறுவது நடைமுறையில் மிகுந்த சிக்கல் உடையதாக இருந்தது.அவர்கள் பணியாற்றுவது ஒரு இடம் acquittance இருப்பது ஒருஇடம், கையெழுத்து இடுவதற்காக பேருந்து பிடித்து அரைநாள் செலவு செய்ய வேண்டியிருந்தது.ஆனால், தணிக்கையின் போது இவ்வாறு கையொப்பம் இல்லாத குறைகளை சுட்டிக்காட்டும் பத்திகளே பெரும்பாலும் இருக்கும். ஊழியர்கள் மாறுதலாகிச் சென்றுவிட்டாலோ,அக்கையொப்பம் பெறுவட்தும் அந்த தணிக்கைத்தடையை நீக்குவதும் பெரும் பாடாகிவிடும்.தற்போது அரசு ஆணை எண்.G.O.No.175 fin(salaries) 18.06.2010 ன் படி ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயன்கள் ECS முறையில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டால் அதற்கான கையொப்பம் வாங்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலவிரயம் மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அனால் ECS copy அலுவலக நகலில் ஒட்டி வைக்கப்பட வேண்டும்.

19 June 2010

செவிலியர் திறன் ஆய்வு மதிப்பீடு

தமிழ்நாட்டில் செவிலியர்களின் நிர்வாகமேலாண்மைதிறன் தொடர்பான ஒர் ஆய்வு மதிப்பீடு இது.இதை படித்து முடித்த போது இது மேசையில் அமர்ந்தவாறு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையாகத் தெரியவில்லை கடினமான களப்பணியின் வெளிப்பாடு இது.சிற்சில தகவல் குறை பாடு இருந்தாலும் இவ்வக்கறை பாராட்டப் படவேண்டியதே.
Assessment of Nursing Management capacity in Tamilnadu.
Tamil Nadu Report

18 June 2010

புதிய ஓய்வூதியத்திட்டம்

01.4.2003-க்குப் பின் தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்தத் திட்டத்தின்படி, ஒவ்வொரு மாதமும் பணியாளர்களது அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அதற்கு சமமான தொகையை அரசு வழங்கும். இவ்வாறு எல்லா ஊழியர்களிடம் இருந்தும் பிடித்தம் செய்யப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2004 முதல் இந்தத் திட்டம் அமலானது. தமிழகத்தில் அப்போதைய அரசால் 1.4.2003-ல் அமல்படுத்தப்பட்டது.
கீழே கொடுத்துள்ளகடித்த்தின்படி17786 / Finance (PGC) Department / 2010-1, Date: 21.05.2010 பணியில் சேர்ந்து ஒரு மாதத்திற்குள் CPS Index Number மாநில கனக்காயரிடமிருந்து பெறவேண்டும் எனவும் பணிவரன் முறைக்காக காத்திருக்கத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Contributory Pension

07 June 2010

15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள்

குழுமணி ஆ.சு.நி.ன் எழில் மிகு தோற்றம்.

(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)The Hindu செய்தி 06.06.2010 திருச்சி பதிப்பு
(பெரிதாக பார்க்க படத்தின்மேல் கிளிக் செய்யுங்கள்.)
06.06.2010 Hindu நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி .திருச்சிமாவட்டம் குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 மணி நேர இடைவெளியில் 7 பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.அனைத்தும் சுகப்பிரசவம்.மக்கள் நலனில் பொதுசுகாதாரத்துறையின் மகத்தான பங்களிப்பு இது.இந்த சாதனையின் பின் உள்ள துணை இயக்குனர்,மருத்துவர்கள்,செவிலியர்கள்,கிராம சுகாதார செவிலியர்கள்,மருதுவமணைப் பணியாளர்கள், இவர்களுக்கான பணிகளை செய்யும் அமைச்சுப்பணியாளர்கள்,ஊர்தி ஓட்டுனர்கள்,அனைவருக்கும் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்வோம். மேலும் பல சாதனைகளை படைப்போம்.

05 June 2010

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் Tamilnadu Government Doctors

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள்( Doctors) சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று அரசு வெளியிட்ட அரசு ஆணை எண்.G.O.Ms.No.354 Health and Family welfare Department dt.23.10.2009 இங்கே ஆவணப்படுத்தும் நோக்கில் இணைக்கப்படுகிறது.

03 June 2010

ஓய்வூதியப்படிவம் TN Government Pension form

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு நான்கு மாதத்திற்கு முன்னதாக ஓய்வூதியக் கருத்துருவினை மாநில கணக்காய்வுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைக்குப் பிறகு புதிய ஓய்வூதியப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்துடன் பொது வருங்கால வைப்புநிதிக்கான (GPF Final closer) மனுவும் ஒருங்கினைக்கப்பட்டு இப்படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.