31 December 2012

ஆர்.பொன்மேனி கிராம சுகாதார செவிலியர்

தாமதமான பதிவு. புகைப்படங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட தாம்தம் காரணம்.தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின்கீழ் உள்ள சேப்ப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலைய்த்தில் கிராம சுகாதார செவிலியராக பணிபுரிந்து 30.09.2012 அன்று பணி ஓய்வு பெற்ற திருமதி.ஆர்.பொன்மேனி அவர்களுக்கு 30.09.2012 அன்று பிரிவு உபசார விழா தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.அவரின் பணித்திறமை மற்றும் நேர்த்தி பற்றி அனைவரும் பேசினர்.இறுதியில் ஏற்புரையாக பேசிய திருமதி.ஆர்.பொன்மேனி அவர்கள் தனது வெற்றிக்கான காரணங்களை விளக்கிப் பேசினார்.நான் எங்கு பணிபுரிந்தாலும் அவ்வூர் மக்களுடன் இரண்டரக் கலந்து விடுவேன்.எல்லோர் வீட்டு நல்லது கெட்டதுகளும் எனக்குத் தெரியும்.ஒவ்வொரு வீட்டுப் பெண்களையும் பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு பரிச்சயம் செய்துகொள்வேன் என கூறினார்.















24 December 2012

டெங்கு விழிப்புணர்வுக் குறும்படம்

Seplapatty PHC

14 December 2012

பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா


பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காகவும் நீரினால் பரவும் நோய்கள் மற்றும் நோய்களை கண்டறியவும் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் சென்னையில் உள்ள மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.75 கோடி மதிப்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்தது.

பொது சுகாதாரத்துறையின் தலைமை அலுவலகத்திற்காக கட்டப்படும், இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன், பகல் பொழுதில் மின்சார சிக்கனத்திற்காக அலுவலகத்திற்குள் சூரியஒளி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி திட்டத்தின் கீழ் ஆறு மாடி கட்டிடம் கட்ட பொது சுகாதாரத்துறை முடிவெடுத்துள்ளது.

இதுவரை பொது சுகாதாரத்துறைக்கு என்று தனியாக கட்டிடம் இல்லாத நிலை இருந்துவந்தது. பொது சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பிரிவுகள் தற்போது மருத்துவத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.

புதிய கட்டிடம் கட்டிமுடித்த உடன், அனைத்து அலுவலகங்களும் ஒருங்கிணைத்து புதிய கட்டிடத்தில் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. வரும் நிதியாண்டில் முதல் தளம் கட்டும் பணி தொடங்க உள்ளது.பொது சுகாதாரத்துறையில் மட்டும் 40 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நேற்று டிச.9.தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்குநரக வளாகத்தில் நடந்தது. தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் இரா.தி.பொற்கைபாண்டியன், கூடுதல் இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி ஆகியோர் கலந்து கொண்டு அடிகல் நாட்டி பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். விழாவில் பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குனர்கள் உள்பட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


படம் உதவி Jagadeswaren Murugesan 


( குறிப்பு: பொது சுகாதாரத்துறை தமிழக அரசுத்துறைகளிலேயே மிகப்பழமை வாய்ந்த துறையாகும். 1924–ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. தென்னிந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே இயக்குநராக டாக்டர். கிங் செயல்பட்டுவந்தார். இவரது களப்பணி அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக அந்நாளில் கருதப்பட்டது.துறையின் வரலாறு தொகுக்கப் பட வேண்டியது அவசியம்.)


13 December 2012

Primary Health Centre Allowance

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ”ஊரகப் படி”(Rural Allowance)  ”ஆரம்ப சுகாதார நிலையப் படி” (Primary Health Centre Allowaance" பெயர் இடப்பெற்றதற்கான (nomenclature) பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசு ஆணை கீழே.
டவுன்லோடு செய்ய இங்கே சொடுக்கவும்.

12 December 2012

பள்ளி ஆசிரியர்களுக்கு பல் பரிசோதனை பயிற்சி பவர்பாயிண்ட் ஷோ

பள்ளி ஆசிரியர்களுக்கான பல் சிகிச்சை பற்றிய பயிற்சி கரூர் மாவட்டத்தில் 13.12.2012 அன்று நடை பெற உள்ளது.தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தி குளித்தலை மர்றும் தோகைமலை வட்டார பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற உள்ளது. அது சமயம் காட்டப்பட இருக்கும் பவர்பாயிண்ட் ஷோ இங்கே

11 December 2012

இயக்குனர்,திட்ட இயக்குனர்,வருகை

கரூர் மாவட்டத்திற்கு திட்ட இயக்குனர் திரு.பங்கஜ்குமார் பன்சால் அவர்கள் தலைமையின் கீழ் பொது சுகாதாரத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அலுவலரின் ஆய்வு 07.12.2012 அன்று நடை பெற்றது

அய்யர்மலை ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை இயக்குனர் திரு.பொற்கைப்பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்தார்.

இயக்குனர் பிரசவமான ஒரு தாய்க்கு ஜேஎஸ் ஒய் காசோலை வழங்குகிறார் அருகில் உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்கள்



இயக்குனர் அவர்கள் பிறந்த குழந்தையினை பார்வையிடுகிறார் அருகில் துணைஇயக்குனர் திரு.சம்பத்குமார் அவர்கள்




மாலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் ,கண்காணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்,



படங்கள் உதவி திரு.கருப்பசாமி 




மக்கள் மொழியில் டெங்கு பாடல்


டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக மக்களுக்கு புரியும் மொழியில் அடித்தட்டு மக்களுக்காக பாடல் எழுதி தான் செல்லும் கிராமங்களில் பாடல் மூலமாக மக்களிடமும்,மாணவ மாணவிகளிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் திரு.ச.பூவராகன் அவர்கள்.அவரது

 பாடல் இங்கே.


டெங்கு, டெங்கு, காய்ச்சலுன்னு
தேசம் பூரா  பேசுறாங்க
தங்குமிடம் அழித்து விட்டால்
தடுத்திடலாம் டெங்கு காய்ச்சலை...

வண்ண ,  வண்ண ஏடிஸ்கொசு
வாட்டுதம்மா லேடிஸ்கொசு
சின்ன சின்ன முட்டையிட்டு
சீரழிக்கும் டைகர்கொசு...

தண்ணி ,தண்ணி தொட்டிகளில்
தலைகீழா துடித்து வாழும்
எண்ணி எண்ணி ஏழுநாளில்
எழுந்துவந்து கடிக்குதம்மா...

வீட்டைச்சுற்றி மழைநீரை
தேக்கிவைக்க கூடாதக்கா
டப்பா,டயர்,குடக்கல்லை
தலைகீழா கவிழ்த்திடக்கா...

நமது நலவாழ்வு
நம் கையில் இருக்குதண்ணே
கொசுப்புழுவை  ஒழித்துவிட்டால்
குறையில்லாமல் வாழலாண்ணே...


சுத்தம் சுகாதாரம் பேணிகாப்போம் ! டெங்குவை ஒழிக்க சபதம் ஏற்போம்   !  

ச. பூவராகன்
சுகாதார ஆய்வாளர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  ,  ஆவட்டி
மங்களூர் வட்டாரம்,கடலூர் மாவட்டம்.

10 December 2012

பள்ளி ஆசிரியர்களுக்கு பல் பரிசோதனை பயிற்சி

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து - பள்ளி பல் பரிசோதனை மற்றும் சிகிச்சை திட்டம் செயல்படுத்துவது குறித்த பயிற்சி 413 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு 20(BRT&TRAINEES) பேருக்கு 07.12.2012 தொகுதி அளவில் முக்கிய ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி அளிக்க உத்தரவு.

டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும் 

09 December 2012

JSSK

                                     ஜனனி சிசு சுரக்‌ஷா காரியக்ரம்
                    janani shishu suraksha karyakram
                           Guidlines 

பிரசவ இறப்புக்களைத் தடுக்கும் முயற்சியாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பிரசவத்தின்போது 67 ஆயிரம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பிறந்த ஒரு மாதத்தில் 9 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன.

இந்தத் திட்டம் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அரசு மருத்துவ நிறுவனங்களில் இலவச பிரவசத்துக்கான உரிமையை வழங்குகிறது

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து மருந்துகளும், மருத்துவப் பரிசோதனைகளும் இலவசமாகவே ஏற்பாடு செய்யப்படும்

பெரிய மருத்துவமனைக்கு கர்ப்பிணிகள் பரிந்துரைக்கப்பட்டால் அவர்களுக்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளும்

குழந்தை பிறந்த 30 நாட்களில் அதற்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கான செலவையும் இந்தத் திட்டத்தின் மூலம் பெறலாம்

விளக்கமாக அறிந்துகொள்ள கீழ்கண்ட வெளியீட்டினை படிக்கவும்
டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்




(டவுன்லோடு செய்ய வலது மேல் மூலையில் உள்ள

என்ற பட்டனை கிளிக் செய்தால் வேறு ஒரு புதிய விண்டோவில் இந்த டாக்குமெண்ட் திறக்கும் அதில் File கிளிக் செய்து Download ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்தலாம்)
தமிழ்நாடு மாநிலத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு விவரம் கீழே.ஓட்டுனருக்கான மாத ஊதியம் ரூ.4000 என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் அந்தந்த மாவட்ட ஆட்சியரால் நிர்ணயிக்கப்பட்ட தொகையினை வழங்கலாம் கூடுதலாக தொகை தேவைப்படின் எழுதி கேட்டுப் பெறலாம். எனவே ரூ 4000 மாத ஊதியத்திற்கு மேலாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தொகை வந்தாலும் வழங்கலாம்.

06 December 2012

கல்வெட்டு

முதன் முதலில் தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையம் பஞ்சாயத்யூனியன் டிஸ்பென்சரியாக இருந்தது.1931 ஏப்ரல் 20 ம் தேதி இக்கட்டிடம் திறந்து வைக்கப் பட்டுள்ளது.


இதன் பின்னர் 1988 ல் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டது.
07.03.2003 ல் 30 படுக்கைகள் மற்றும் ஊடுகதிர் வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மேம்படுத்தப்பட்டது.

தகவல்களும் விளம்பரங்களூம்

தோகைமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மற்றும் தகவல் வெளியீடுகள் சில

                                      ஆரம்ப சுகாதார நிலைய பகுதி வரைபடம்



அயோடின் உப்பு


                                                        மக்கள் சாசனம் (சில மாற்றங்களும் தொலைபேசி எண்களும் இன்னும் எழுதப்பட வேண்டும்)

சர்க்கரை நோயாளிகளுக்கு



வருமுன் தடுக்க


சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுப் பட்டியல்


டெங்கு
பப்பாளிச்சாறு மற்றும் நிலவேம்புக் குடிநீர்
  




NRHM களவிளம்பரம் புதுவாழ்வுத்திட்டம்

தோகைமலை வட்டாரம் நாகனூர் கிராமத்தில் இன்று நிகழ்ந்த மத்திய அரசு களவிளம்பரத்துறையினரின் மக்களுக்கான நிகழ்ச்சி புதுவாழ்வுத்திட்டம் இன்று நடைபெற்றது.பங்கு கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஓவர் கோட் வழங்கப் பட்டது.NRHM பற்றிய விரிவான தகவல்கள் அம்மளுக்கு தெரிவிக்கப் பட்டது.பின்னர் விளக்கப்பட்ட நலத்திட்டங்கள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு பரிசுகள் வழங்கப் பட்டது.வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் Dr.Prabagaran அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.நேற்று பாதிரிப்பட்டி கிராமத்தில் இதே நிகழ்வு நடைபெற்றது. நாளை சேப்ளாபட்டிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ளது.










கலைக்குழு வருகை

குடும்பக் கட்டுப்பாடு மற்றும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு கலைக்குழு தோகைமலை வட்டாரம் வந்தது.பேருந்து நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக இருந்தது.



01 December 2012

Special Polio camp for Migrant children

ஒரு குழந்தை கூட போலியோ சொட்டு மருந்து போடாமல் விடுபடக் 
கூடாது என்பதற்காக,22.12.2012 அன்று இடம் பெயர் குழந்தைகளுக்கான சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம் (Special Polio camp for Migrant children ) நடைபெற உள்ளது.பொது சுகாதாரத்துறையினரின் கடின உழைப்பின் பேரில் போலியோ இல்லாத நாடாக இந்தியா மிளிரும் நாள் தொலைவில் இல்லை. மாறாக நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றி தெரிய வரக் கூடிய தகவல் அபாயகரமாக இருக்கிறது.


நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாடுகளில் போலியோ ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச அளவில் போலியோ ஒழிப்பை கண்காணிக்கும் அமைப்பானகுளோபல் போலியோ எராடிகேஷன் இம்மூன்று நாடுகளில் இருந்தும் யாராவது ஒருவர் பயணம் மேற்கொண்டால், அதன் மூலம் போலியோ கிருமி ஏற்றுமதியாகு அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இனி, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எல்லையை கடக்கும் முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.




30 November 2012

டெங்கு களப்பணி அனுபவங்கள்-2

கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம் மாவட்ட மலேரியா அலுவலர் பழனிச்சமி சொக்கலிங்கம் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளஒர் விஷயம்.
ஒரு கிராமத்தில் கோவில் உண்டியலாக ஒரு எவர்சில்வர் குடத்தினை வெட்டவெளியில்பூமியில் புதைத்து வைத்துள்ளார்கள்.மழை பெய்து உண்டியல் ஓட்டை வழியாக நீர் சேர்ந்து கொசுபுழுக்கள் உறுவாகியுள்ளது.அதனை கண்டறிந்த களப்பணியாளர்கள் உண்டியலை அகற்றச்சொல்லி ஊர் மக்களிடம் கேட்டுள்ளனர்.மக்களோ “சாமி குத்தம்” அயிடும் என பயந்து உண்டியலை அகற்ற மறுத்துள்ளனர்.பிறகு சாதுரியமாக சாமிகுத்தமும் ஆகாமல்,கொழுப்புழுவும் வளராமல் இருக்க மண் கொண்டு உண்டியல் வாயை பூசி மூடியுள்ளனர்.
படிப்பினை:
இனி,டயர்,கப்,தேங்காய் சிரட்டய்,பூந்தொட்டி...இவைகளுடன் ஓபன் உண்டியலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

                                               சிகிச்சைக்கு முன்?

சிகிச்சைக்குப் பின்




26 November 2012

நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல்

ஒவ்வொரு மருத்துவ மணைகளிலும் நோயாளிகள் கவனிக்க வைக்க வேண்டிய தகவல் நன்றி http://hainallama.blogspot.in/

22 November 2012

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்ட பிரச்சினைகள்


முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் இந்த வருடம் 2012-13 செப்டம்பர் வரை பயனாளர்கள்  அனைவருக்கும் தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலமாக ரூ.46,72,000  தொகைகள் வங்கிகள் மூலமாக அவர்களது கணக்கில் வரவு வைக்கப் பட்டுவிட்டன.ஆன் லைனில் ஏற்றப்பட்ட வங்கி கணக்கு எண்களின் தவறுகளின் காரணமாக அனுப்பப்பட்ட தொகைகள் திரும்ப மருத்துவ அலுவலர்களின் கணக்கிற்கே வருவது தொடர்க்கதையாக இருந்தது.20.11.2012 உடன் மிகுந்த சிரமத்திற்கிடையில் சரியான கணக்கு எண்களை கண்டுபிடித்து தொகை அனுப்பப்பட்டு விட்டது,

         தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இத்திட்டத்திற்கான முழு ஒத்துழைப்பை வழங்காதது வருந்தத்தக்கது.
        கணக்கு எண் சரியில்லை என திருப்பி அனுப்பும் தொகைகளுக்கான விவரங்களை சரியாக அனுப்பாததனால் மட்டுமே மருத்துவ அலுவலரின் கணக்கிலிருந்து பயனாளர்களுக்கு பணம் பட்டுவாடா ஆகாத நிலை, பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளது.
      திரும்பிய பணம் யாருடையது? என கண்டுபிடித்து அந்த மனுவிற்குரிய சரியான கணக்கு எண்ணை தருமாறு கிராம சுகாதார செவிலியரிடம் picme எண்னுடன் கோரினால் மட்டுமே சரியான கணக்கு எண்களை பெறமுடியும்.
          மேலும் மனுக்களை ஆன் லைனில் ஏற்றும் பணிக்கென்று தனியாக டேட்டா எண்டிரி ஆப்ரேட்டர்கள் நியகிக்கப் ப்டாத்தால் பல இடங்களில் அவுட் சோர்சிங் முறையில் வெளியாட்களை கொண்டு டேட்டாக்கள் பதிவு செய்யப் படுகின்றன.
                                            பதிவு செய்யப்பட்ட மனுக்களின் விவரங்களை ஆய்வுசெய்வதுமில்லை.50 வயதுக்கு மேலானவர்களே பெரும்பாலும் பகுதி சுகாதார செவிலியர்களாக உள்ளனர்.அவர்களுக்கு கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாததால் அவர்களால் ஆய்வு செய்ய முடிவதில்லை.
                                          இந்நிலையில் ஏனோ தானோ வென்று ஏற்றப்பட்ட கணக்கு எண்கள் தப்பாக வங்கிக்கு செல்லும் போது அவைகள் திருப்பி அனுப்பப் படுகிறன.அவ்வாறு திருப்பி அனுப்பும் போது மருத்துவ அலுவலர் அளித்த இசிஎஸ் படி முழு விவரங்களுடன் திருப்பி அனுப்பப் படுவதில்லை..
இதனால் திரும்பிய பயனாளர்கள் யார் என கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.
இதில் பாதிக்கப் படுவது அமைச்சுப் பணியாளர்களூம்,பயனாளர்களும் தான்.
ஏன் இவ்வளவுத் தொகை மருத்துவ அலுவலரின் கணக்கில் இருக்கிறது என உயர் அதிகாரிகள் கேள்விக்கு பதில்சொல்ல முடியாமல் பல இடங்களில் அமைச்சுப் பணியாளர்கள் திணறுகிறார்கள்.பயனாளர்களும், குழந்தையே பிறந்துவிட்டது இன்னும் பணம் வரவில்லை என வருத்தத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது.
1.அரசு பணம் கொடுத்துவிட்டது
2.அமைச்சுப் பணியாளர்கள் பட்டியல் தயாரித்து பணமாக்கி விட்டார்கள்
3.வங்கிக்கு இசிஎஸ் அனுப்பியாகி விட்டது.
இதுவரை சரியாக செல்கிறது.
1.வங்கியிலிருந்து உடனடியாக லிஸ்ட் வருவதில்லை.
2.வங்கியில் மொத்தமாக மட்டுமெ பணம் கழிக்கப் படுகிறது.
3. உதாரணமாக ரூ.15,00,000 இலட்சம் வங்கிக்கு .சிஎஸ் மூலம் அனுப்பப் பட்டால் ஒரே நாளில் 12,00,000 இருப்பில் கழிக்கப் படுகிறது(Debit).யார்யார் கணக்கில் வரவு வைக்கப் பட்டது என்பதற்கான பட்டியலை தேசிய வங்கிகள் தருவதில்ல,
4.வேறு ஒரு நாளில் ரூ.3,00,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படுகிறது இது யார் பணம் என கேட்டால் அதற்கான முழு விவரங்களையும் வங்கி தருவதில்லை.”இதெல்லாம் கணக்கு எண் தப்பு அதனால் திரும்பிடுச்சு என வங்கி தெரிவிக்கிறது..
5.ரொம்ப வற்புறுத்தி கேட்டால் நேம் லிஸ்ட் மட்டும் தருவார்கள் அதில் உதாரணமாகபோதும்பொண்ணு 4,000 என இருக்கும் அதே பெயரில் 40 பேர் இருப்பார்கள் இது யாருடையது அவர்கள் picme எண் என்ன? என கண்டறிவது பிரம்மப் பிரயத்தனம்.


டெங்கு தடுப்பு: சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆட்சியர் அழைப்பு


திருச்சி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட கிராமப்புறங்களில் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் 7 பேர் மற்றும் 35 சுகாதார ஆய்வாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்படவுள்ளனர்.
 
வட்டார சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 500, சுகாதார ஆய்வாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 400 வழங்கப்படும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, விருப்பமுள்ளவர்கள் துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் மற்றும் குடும்ப நல அலுவலகத்தை அணுகலாம்.

குறிப்பு:

இது மாதிரியான பணியமர்த்தல்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உண்டு

30 October 2012

உணவு - கர்பிணிகள்,பிரசவித்ததாய்மார்களுக்கு


தோகைமலை ஆரம்ப சுகாதார நிலைத்தில் - கர்பிணிபெண்கள் / பிரசவமான தாய்மார்கள்/ குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட பயனாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவுப் பட்டியல்.


காலை சிற்றுண்டி (7.00 மு.ப)
பால் 200 மி + வேகவைத்த முட்டை1(50 கி) உடன்
கீழ்கண்ட ஏதேனும் ஒன்று

அ) பிரட் துண்டுகள் (4லிருந்து 5) 300 கிராம்
(அல்லது)
ஆ) பொங்கல்/ சாம்பார் அ சட்னியுடன்
(அல்லது)

இ) கிச்சடி / சாம்பார் அ சட்னியுடன்
(அல்லது)

ஈ) இட்லி (4-5) சாம்பாருடன்

மதிய உணவு (11.30 மு.ப 12.00)

அ) சாதம்
ஆ) சாம்பார்/புளிகுழம்பு/மோர்குழம்பு (ஏதேனும் ஒன்று)
இ) கூட்டு
உ) பொறியல்
ஊ) தயிர்/ மோர்
எ) வேகவத்த முட்டை 1( 50 கி எடையுடன்)

3.00 பி.ப
பால் 200 மிலி

6.30 பி.ப
அ) 200 மி பாலுடன் பிரட் (4-5)
அல்லது
ஆ) பால் மற்றும் இட்லி (4-5) சாம்பாருடன்