Showing posts with label Dengue. Show all posts
Showing posts with label Dengue. Show all posts

24 December 2012

டெங்கு விழிப்புணர்வுக் குறும்படம்

11 December 2012

மக்கள் மொழியில் டெங்கு பாடல்


டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக மக்களுக்கு புரியும் மொழியில் அடித்தட்டு மக்களுக்காக பாடல் எழுதி தான் செல்லும் கிராமங்களில் பாடல் மூலமாக மக்களிடமும்,மாணவ மாணவிகளிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் திரு.ச.பூவராகன் அவர்கள்.அவரது

 பாடல் இங்கே.


டெங்கு, டெங்கு, காய்ச்சலுன்னு
தேசம் பூரா  பேசுறாங்க
தங்குமிடம் அழித்து விட்டால்
தடுத்திடலாம் டெங்கு காய்ச்சலை...

வண்ண ,  வண்ண ஏடிஸ்கொசு
வாட்டுதம்மா லேடிஸ்கொசு
சின்ன சின்ன முட்டையிட்டு
சீரழிக்கும் டைகர்கொசு...

தண்ணி ,தண்ணி தொட்டிகளில்
தலைகீழா துடித்து வாழும்
எண்ணி எண்ணி ஏழுநாளில்
எழுந்துவந்து கடிக்குதம்மா...

வீட்டைச்சுற்றி மழைநீரை
தேக்கிவைக்க கூடாதக்கா
டப்பா,டயர்,குடக்கல்லை
தலைகீழா கவிழ்த்திடக்கா...

நமது நலவாழ்வு
நம் கையில் இருக்குதண்ணே
கொசுப்புழுவை  ஒழித்துவிட்டால்
குறையில்லாமல் வாழலாண்ணே...


சுத்தம் சுகாதாரம் பேணிகாப்போம் ! டெங்குவை ஒழிக்க சபதம் ஏற்போம்   !  

ச. பூவராகன்
சுகாதார ஆய்வாளர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  ,  ஆவட்டி
மங்களூர் வட்டாரம்,கடலூர் மாவட்டம்.

26 October 2012

Dengue Practical Guide

https://docs.google.com/open?id=0B98TwrEkKgTPbGNfaGVvWVN3TEk

டெங்கு களப்பணி அனுபவங்கள்

டெங்கு தொடர்பான களப்பணியில் இருந்த நண்பர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது சில தகவல்களை பகிந்து கொண்டார்கள்.எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் தான்,

                1.ஒரு வீட்டில் சிமெண்ட் தொட்டி நிறைய நீர்பிடித்து ஸ்டோர் செய்து வைத்திருந்தார்களாம். தொட்டி நிறைய ஏராளமான கொசுப் புழுக்கள்.டாக்டர் சதீஷ்குமாரும் என்.எம்.எஸ்.திரு.மனோகரன் அவர்களும் நீரை காலிசெய்யும்படி வீட்டு பெண்மணியிடம் கூறினார்களாம்.இந்த புழுக்கள் எல்லாம் இன்னும் ஒரு வாரத்திற்குள் கொசுக்களாகிவிடும் என எடுத்துச் சொல்லியும் அந்த பெண்மணி தொட்டியை காலி செய்ய அனுமதிக்கவில்லை.அதோடில்லாமல் சொந்த பந்தங்களை எல்லாம் கூட்டி ரகளையே செய்துவிட்டார்களாம்.ஒருவழியாக எதிர்ப்பையும் மீறி தொட்டியை காலிசெய்துவிட்டு வர பெரும் பாடு ஆகிவிட்டதாம்.

            2. படித்த நடுத்தர மக்களிடையே கூட விழிப்புணர்வு இல்லாதது தெரிய வருகிறது. கொலு வைத்திருந்த ஒரு விட்டில் 10 நாட்களாக பார்க் செய்து குளம் செட் வைத்திருந்தார்கள். தினமும் நீரை மாற்றாமல் இருந்ததால் குளம் நிறைய கொசுப்புழுக்கள். எடுத்துச் சொன்னபிறகு அதனைக் காலி செய்தார்கள்.

           3.நீர் தேங்கியிருந்த ஒரு வீட்டுத் தொட்டியில் மருந்தினை ஊற்றிய ஒரு மஸ்தூரை வீட்டுக் காரர் சரமாரியாக திட்டியுள்ளார்.எடுத்துச் சொல்லி புரியவைக்க பெரும்பாடு பட்டுப் போனார்களாம்.

            4.எல்லா இடத்திலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததில் பள்ளி மாணவர்களிடம் செய்யப் பட்ட பிரச்சாரம் தான் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறதாம்.வீட்டை சுற்றி யுள்ள பிளாஸ்டிக் கப்,தேங்காய் சிரட்டை இவைகளை அப்புறப்படுத்துவதில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்கிறதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனராம்.

16 July 2012

டெங்கு தொடர்பான நோட்டீஸ்.


15 June 2012

டெங்கு

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க களப்பணி மற்றும் கிராம துப்புறவுக் குழுவினர் , மக்கள் பிரதிநிதிகள்,மஸ்தூர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிலரங்குகள், தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்றது.
    

குறிப்பு:
2010 ம் வருடம் தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை காண இங்கு கிளிக் செய்யவும்


 நீர் பிடிப்புத் தொட்டிகளில் லார்வா ( கொசுப் புழு) உள்ளதா என மருத்துவ அலுவலரும் சுகாதார ஆய்வாஆய்வாளரும் ஆய்வு செய்கின்றனர்.



 பணியில் பகுதி சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்



 மஸ்தூர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார மற்றும் துப்புரவுக் குழ்வினருக்கான விழிப்புணர்வு முகாம்.



மாவட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மரு.பிச்சைமுத்து அவர்களின் உரை.


ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மஸ்தூரகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிலரங்கம் நடத்தும் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரபாகரன்


 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ராஜன் அவர்களின் உரை

 களப்பணி