27 August 2011

கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?

31.08.11 ஆனந்தவிகடனின் இணைப்பிதழான என்விகடன் ( திருச்சி,தஞ்சை,கரூர் பதிப்பு) இதழில் ஒரு கேள்வி பலரிடம் கேட்கப்பட்டு அதற்கான பதில் பெறப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

                         ( படத்தை கிளிக் செய்து செய்தியை படியுங்கள்)


கேள்வி:கடவுளை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள்?
பதில் :( மலர்ச்செல்வி ஆசிரியை கும்பகோணம்)
“சமீபத்தில் எங்க பள்ளிகூடத்துக்கு பார்வைப் பரிசோதனைக்கு வந்த மருத்துவர்கள் எல்லாம் ரொம்ப அர்ப்பணிப்பா வேலை பார்த்தாங்க.எங்களைப்போல ஆசிரியர்களுக்கும் பிள்ளைங்க கிட்ட உள்ள பார்வை குறைபாடுகளை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு சொல்லித்தந்தாங்க.அதனால் நிறைய பசங்களோட பிரச்சனைகளைக் கண்டுபிடிச்சு பெற்றோர்கிட்ட தெரியப்படுத்தினோம்.இந்த மாதிரியே எல்லா மருத்துவர்களும் இருந்தா நம்ம நாடு எவ்வளவு சுகாதாரமா இருக்கும்கிற எண்ணத்தை அவங்க உருவாக்கிட்டாங்க.மருத்துவத்தைத் தொழிலாகப் பார்க்காமல் சேவையாகப் பார்க்குற மனசு உள்ள நிறையபேர் மருத்துவத்துறைக்கு வரணும்னு கடவுள் கிட்ட நான் கேட்பேன்”
இது பொதுசுகாதாரத்துறையின் சாதனை என்றே சொல்லவேண்டும்.மனமாற வாழ்த்திய ஆசிரியைக்கும் மனங்குளிர பணியாற்றிய கும்பகோணம் கண்மருத்துவ உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் வாழ்த்துக்கள்

13 August 2011

என்ன உலகமடாசாமி.

http://tamilnadu-stg.com/healthmail/

மேலே கண்ட லிங்ல் எனது எல்லா பதிவுகளும் ஸ்டோர்செய்யப்பட்டுள்ளது.எனது அனுமதிவாங்கப்படவில்லை.மேலும் இப் பதிவுகளுக்கான லிங்க் ம் கொடுக்கப்படவில்லை.
என்ன உலகமடாசாமி.

சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' HI.Gr.1b


சென்னை : கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுகாதாரத் துறை செயலர் 15.07.2011 அன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். தொழுநோய் ஆய்வாளர்களாக 1987ம் ஆண்டு நூற்றுக்கணக்கான பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களை பொது சுகாதாரத் துறையில் இணைத்து, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' என அழைக்கப்பட்டனர். 1997ம் ஆண்டு இது நடந்தது.
தங்களுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு -1 "ஏ'க்கும் இடையே சம்பள வேறுபாடு உள்ளது; ஆனால், இருவரும் ஒரே பணியை தான் செய்கிறோம் என அரசிடம் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' முறையிட்டனர். இதையடுத்து, கிரேடு-1 "ஏ'க்கு இணையாக கிரேடு-1 "பி' ஆய்வாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால், தங்களது சீனியாரிட்டி பாதிக்கப்படும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், இளங்கோ மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', "1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களாக சேர்க்கப்பட்ட தொழுநோய் ஆய்வாளர்களை, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 என கருத வேண்டும். அவர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் டெக்னிக்கல் தனி உதவியாளர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். இவர்களின் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட தேதியில் இருந்து சம்பள பலன்களுடன் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அப்போதைய சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியனுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசத்தை, "டிவிஷன் பெஞ்ச்' வழங்கியது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சுரேந்தர் சிங் நிஜார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட்-ஜெனரல் கோமதிநாயகம் ஆஜரானார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பதவி உயர்வு ஏதும் அளிக்கப்பட்டால், அது அப்பீல் மனுவின் மீதான இறுதி முடிவைப் பொறுத்தது. ஐகோர்ட்டில் உள்ள கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

04 August 2011

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின்

கிராமப்புற பெண்களுக்கு இலவச நாப்கின் வ்ழங்க இருப்பதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த இலவசம் தேவையானது தான்.நடுத்தர குடும்பங்களிளேயே இது ஆடம்பரம் என்றும் அவசியமற்றது எனவும் கருதும் குடும்பப் பெருசுகளும், ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.கிராமப் புறத்தில் கேட்கவே வேண்டாம்.வரவேற்போம்.

தேசிய ஊரக சுகாதார திட்டம் (என்।ஆர்।ஹெச்.எம்.)NRHM மூலம் குறைந்த விலை அளவில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மேமாதமே அறிவிப்பு வந்தது..மத்திய அரசின் அறிவிப்பின் படி வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள பெண்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு பொட்டலம் வழங்குவதாக உத்தேசம்.ஒரு பாக்கெட்டில் 6 நாப்கின் இருக்கும்.ஆனால் தமிழக அரசு இலவசமாக வழங்கப்போவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதற்காக மத்திய அரசு 150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இந்திய அளவில் 235 மாவட்டங்களில் இத்திட்டம் முதலில் நடைமுறை படுத்தப்பட உள்ளது.கர்நாடகா,ஆந்திரா,கேரளா,தமிழ்நாடு,மராட்டியம், குஜராதில் 30 மாவட்ட பெண்கள் பயனடைவர் என NRHM அறிவிதிருந்தது.NRHM வழங்க உள்ள இதன் brand Name " freedays"