08 April 2015

                                              இந்திரதனுஷ்- தடுப்பூசி முகாம்
( ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது.)
தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் ஏப்ரல் 07 முதல் 13 வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இம்முகாமுக்கு தவறாமல் வந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் 07-4-2015 அன்று முதல் 13.04.2015 வரை முதல் கட்டமாக கோயம்புத்தூர், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மாவட்டங்களில் தடுப்பு மருந்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக நிறுவப்பட்டு தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
1. இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் 07.04.2015 முதல் 13.04.215 வரை தடுப்பூசி வழங்கப்படும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும்.
4. 0-2 வயதுள்ள தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம்.
5. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி மருந்து வழங்கப்படும்.
தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது.






தடுப்பூசி மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் 07.04.2015 – 13.04.2015 அன்று இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாமில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள்(கிராம சுகாதார தன்னார்வலர்கள்) மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாட்டில் போலியோ, தொண்டை அடைப்பான், இரணஜன்னி போன்ற நோய்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த பூமியிலிருந்து காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”