ஒரு தவறான செய்தி வதந்தியாக பரவி கானக நெருப்பாய் மருத்துவமணைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூடவும் பதற்றம் ஏற்படவும் காரண்மாகியுள்ளது.
முதல் நாள் இரவே ஆரம்பசுகாதார நிலையத்திற்கு வந்து தங்கி போலியோ சொட்டுமருந்து கேரியர்களை தயார்செய்வது போன்ற் பல பணிகளைச் செய்துவிட்டு விடியற்காலை 5.00 மணிக்கே எழுந்து அனைத்து பூத்துகளுக்கும் பணியாள்ர்களையும் ஊர்திகளில் கொண்டு விட்டு சொட்டு மருந்து பெட்டிகளை வினியோகம் செய்து ஐந்து வயதுக்குட்பட்ட ஒரு குழந்தைகள் கூட விடுபடாமல் சொட்டுமருந்து போடப்பட்டுள்ளதா?என ஆய்வு செய்து மருத்துவ அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் ஒரு மாபெரும் நோய்தடுப்புப் பணிநடத்தி முடிக்கப் பட்டுள்ளது.
ஒரு தவறான செய்தியினால் பரவிய வதந்தி இப் பணியில் ஈடுபட்டுள்ள அனத்துப் பணியாளர்களயும் குழந்தைகளின் பெற்றோர்களையும் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதித்துள்ளது.
சிறு குழந்தைகளை கையில் சுமந்து கொண்டு உண்மையிலேயே நம் குழந்தக்கு இந்த சொட்டு மருந்தினால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ? என்கிற பதைபதைப்புடன் கண்களில் மிரட்சியுடன் ஆரம்பசுகாதார நிலயங்களுக்கு வந்துள்ள பெற்றோர் களுக்கு மருத்துவர்களும் ஏனய பணியாளர்களும் தக்க பதிலளித்து வதந்திதான் தைரியமாக இருங்கள் உங்கள் குழந்தைக்கு ஒனறும் ஆகாது என நம்பிக்கை அளித்து அவர்களை ஆற்றுப்படுத்தி வருகிறார்கள்.அரசும் இது தொடர்பாக ஊடகங்கள் மூலமாக விளக்கங்கள் அளித்து வருகிறது.இந்த நிமிடம் வரை(10.15.Pஆ 21.12.2008) ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் மருத்துவர்களும் பணியாளர்களும் பெற்றோர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.உண்மையில் ஒரு குழந்தைக்கு கூட போலியோ சொட்டுமருந்தினால் பாதிப்பு ஏற்படாதபோது இது போன்ற வதந்திகளுக்கு மக்களும் ஊடகங்களும் மதிப்பளிக்காமல் பொறுப்புடன் செயல்பட்டு போலியோ ஒழிப்பு என்கிற மாபெரும் பணி சிறக்க உதவ வேண்டும்.
No comments:
Post a Comment