15.10.2009 சர்வதேச கைகள் கழுவும் தினம் 2009
உலகில் இறக்கும் குழந்தைகளில் மூன்றில் இருவர் வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச நோய்களால் இறக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் அறிவித் துள்ளது. 1 முதல் 5 வயது வரையுள்ள 10ல் 5 குழந்தைகள் இந்த நோயால் இறக்கின்றனர். இந்தியாவில் தினமும் 1000 குழந்தைகள் வயிற்று போக்கால் இறக்கின்றனர்.பாக்டீரியா, வைரஸ்கள், ஓட்டுண்ணிகள் ஆகியவைதான் நோய்களுக்கான முக்கிய காரணம். இவற்றை நாம் கண்களால் காண முடியாது.
இவை வாய் அல்லது தோல் மூலமாக நமது உடலுக்குள் நுழைகின்றன. இந்த கிருமிகள் பரவ மலம் ஒரு முக்கிய காரணம். ஒரு கிராம் மனித மலத்தில் 1 கோடி வைரஸ்களும், 10 லட்சம் பாக்டீரியாக்களும் உள்ளன. மலத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிட்டால் அவை ஈக்கள், கை வில்கள், திரவங்கள், விளை நிலங்கள் மூலமாக பரவி பல்வேறு நோய்களை பரப்புகின்றன.
இதற்கு முதற்கட்ட தடை நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிப்பதும், கைகளை சுத்தமாக கைழுவுவதும்தான். இந்த நோய் கிருமிகள் நமது வீட்டு சூலில் நுழையாமல் தடுக்க வேண்டும். இதற்கு கை கழுவுவது முக்கியத்துவம் வாய்ந்தது. கைகளை சுத்தமாக கழுவினால் நோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படுகிறது. வயிற்று போக்கு, சுவாச தொற்று, தோல் தொற்றுகள் போன்றவற்றை இந்த பழக்கும் குறைத்துவிடும். சோப்பினால் கைகளை கழுவினால் 42 முதல் 47 சதவீதம் வயிற்று போக்கு ஏற்படுவதை குறைக்கலாம் என ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 சதவீதம் சுவாச தொற்றுகளும் குறைகிறது எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சுத்தமாக காணப்படும் கைகளில் கூட லட்சக்கணக்கான நோய்கிருமிகம் இருக்க கூடும். நுண்நோக்கியில் பார்ப்பதன் மூலம் இதை அறியமுடியும். உணவை கையாள்வது, கை குலுக்குவது, கழிப்பறை கதவுகளை தொடுவது போன்ற தினசரி செயல்களின் மூலம் இந்த கிருமிகள் பரவுகின்றன. கைகளை கழுவுவதன் மூலம் பலவிதமான நோய் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும் என்பதால் இந்த பழக்கம் அதிகமாக பயனளிக்கிறது.
வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.சவுமியா, உதவிமருத்துவர் திரு.பிரபாகரன்,திருமதி.நர்மதா,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ராஜலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் திரு.பொன்னுசாமி,திரு.ஏ.டி.பழநிச்சாமி ஆகியோர் கைகள் கழுவுவதின் அவசியம் குறித்து விளக்கி பேசினர்.
கைகள் கழுவுதல் தொடர்பான செயல் விளக்கத்தினை திருமதி.லட்சுமி செவிலி, மற்றும் திருமதி.நாகராணி சமூக சுகாதார செவிலி ஆகியோர் நிகழ்த்திக் காட்டினர். பள்ளி மாணவர்களும், பெண்கள், சுயவுதவிக்குழுக்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த நோயாளிகள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடந்தனர்.இறுதியில் பள்ளி மாணவர்களைக்கொண்டு விழிப்புணர்வுப் பேரணி நிகழ்த்தப்பட்டது
கலந்துகொண்ட மாணவர்களில் ஒரு பகுதி
3 comments:
நல்ல பதிவு
பயனுள்ள தகவல், மிக நல்ல காரியம்.
சுய சுகாதாரம் மிகவும் அவசியம் ஏனெனில் இது வியாதிகளை குணமாக்குவதை பற்றி அல்லாமல் வியாதிகள் வருவதை தடுப்பதை பற்றி பேசுகிறது.
கண்டிப்பாக கை கழுவியே ஆக வேண்டிய சூழ்நிலைகள் சில கீழே தருகிறேன் -
பச்சை உணவு வகைகளை (உதாரணமாக அதிலும் முக்கியமாக இறைச்சி, மீன், கோழி, பறவை, பண்ணைகளில் வேலை) பயன்படுத்தும் முன்பும் பின்பும்
கழிவறைகலை பயன்படுத்திய பிறகு
இருமல், தும்மல் மற்றும் மூக்கை உறிஞ்சிய பிறகு
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும்
குப்பைகளை கையாண்ட பிறகு
குழந்தைகளின் சிறுநீர் மாற்று ஆடையை (பேம்பர்ஸ்) மாற்றிய பிறகும் குழந்தைகளின் கழிவுகளை சுத்தம் செய்த பிறகும்
(மருத்துவமனையில்) நோயாளிகளை கவனிப்பதற்கு முன்பும் பின்பும்
மிருகங்களையோ அல்லது மிருக கழிவுகளையோ கையாண்ட பிறகு
அடுத்து மிக முக்கியமாக
பணம், காசை கையாண்ட பிறகு
பதிவிற்கு பாராட்டுகளும் நன்றிகளும்
நாகூர் இஸ்மாயில்
வேலையிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய பயிற்றுவிப்பாளர்
எளிமையான அருமையான சுகாதார கருத்துக்கள் அடங்கிய தங்களின் வலைப்பதிவுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Kathiravan.R, HI
Post a Comment