PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE -TamilNadu-India பொதுசுகாதாரத்துறை தொடர்பான,களப்பணிகள்,சிறப்புச்சேவைகள்,உள் கட்டமைப்பு வசதிகள்,துறையின் அவ்வப்போதய மாற்றங்கள்,அரசு ஆணைகள்,போன்றவைகளை வெளிப்படுத்துவதோடு பொதுசுகாதாரத்துறை தொடர்பான பதிவுகளை சேமிக்கும் நல்ல நோக்கில் மட்டுமே இவ் வலைத்தளம் அமைக்கப்படுகிறது.அரசு மற்றும் துறை பற்றிய எதிர்மறை விமரிசனங்கள் இதில் இடம் பெறாது.துறையின் செயல்பாடுகளை வலையகர்களுக்கும் தெரிவிக்கும் என் சொந்த முயற்சி இது.இதனை எனது பணியுடன் இணைத்துப்பார்க்கலாகாது.இது அதிகாரப்பூர்வமான வலைத்தளம் அல்ல.
23 May 2010
செவிலியர் சீருடைப்படி ( Staff Nurse uniform )
தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்று செவிலியர் என செவிலியர்கள் பணியமர்த்தப்ப்ட்டுள்ளனர்.இதில் பெரும்பான்மையோர் NRHM,RCH மூலம் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர்.மாதச் சம்பளம் 3500, ஓராண்டு பணி முடித்தவர்களுக்கு 4000,ஈராண்டு பணிமுடித்தவர்களுக்கு 5000, என ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த காலங்களில் இவர்களுக்கு மேற்கண்ட தொகைகளைத்தவிர ஒரு பிரசவத்திற்கு ரூ.25/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பணிநிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஒரு வருடத்திற்கு சீருடைபடியாக ரூ.1800/- வழங்கப்பட்டு வருகிறது.சலவைப்படியாக மாதம்தோறும் ரூ.60 வழங்கப்படுகிறது.ஆனால் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு சீருடைப்ப்டி வழங்கப்ப்டவில்லை.சலவைப்படியும் இல்லை.மேலும் Mobile Medical Unit ல் பணியாற்றும் செவிலியர்கள் தினமும் கிராமங்களுக்குச் செல்வதால் சீருடை பராமரிப்பு என்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது. எனவே NRHM , RCH லிருந்து அவர்களுக்கு சீருடைப்படிவருடத்திற்கு ரூ.1800ம் சலவைப்படி பிரதிமாதம் ரூ60/ம், வழங்கினால் தொகுப்பூதியம் பெறும் செவிலியர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.தொகுப்பூதியம் மற்றும் நிரந்தர செவிலியர்களுக்கிடையே ஊதிய வேறுபாடு ஏற்க்கக் கூடியதே, ஆனால் சீருடை அப்படியல்ல.நிர்வாகத்தின் பார்வைக்கு இதனை கொண்டு செல்வது நமது கடமை.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாடு
அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மற்றும் சலுகைகள் செலவினமாக கருதவேண்டியதில்லை. அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை, பணிகளை செய்து முடிப்பவர்கள். அவர்கள் இல்லையென்றால் அரசு இயந்திரம் இயங்காது. அரசு ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம் மூலதனமே என, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அரசு ஊழியர்கள் தான் அரசின் பணிகளை செய்து முடிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஓட்டுக்காக சலுகைகள் தரப்படுகின்றன என, கருதுவது தேவையற்றது.
அரசு ஊழியர்களும் தொழிலாளர்கள் தான். நாங்களும் தொழிலாளர்கள் தான். தொழிலாளர்களிடம் பாகுபாடு பார்க்க முடியாது. தொழிலாளர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றுவது அரசின் கடமை.
22.5.10 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய 57வது மாநில மாநாட்டில் தமிழக் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி.
12 May 2010
பதிவர்கள் குடும்பத்தினர் சந்திப்பு
வலைப்பதிவர்களை உரிமையுடன் "ஊட்டிக்கு வாங்க" என சில நிபந்தனைகளுடன் கோடையின் வெம்மையைச் சற்று மறந்து குடும்பத்துடன் சில நாட்களையாவது குளு குளு உதகையில் கழிக்க அழைத்திருந்தார் லதானந்த்.தொடர்ந்து வலைப்பதிவுகளில் படித்தும் எழுதியும் வருபவர்களுக்கு அவரைப்பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் நமது துறை நண்பர்களுக்கு அவரைப்ப்ற்றி கொஞசம் சொல்லவேண்டும்."திரு.லதானந்த்" அவர்கள் காட்டிலாக்கா அதிகாரி.பல்வேறுவிதமான மொழிநடைகளில் சுவாரசியமாக பதிவுகள் எழுதுபவர்.கோவை மாவட்டத்துக்காரர்.காடும் காடுசார்ந்த வாழ்வும் இவரது பத்திகளில் பளிச்சிடும்.சுட்டி விகடனில் ரேஞ்சர் மாமா வாக குழந்தைகளுக்கு நிறைய எழுதுபவர்.சிறுகதையாசிரியர் கூட."வனங்களில் வினோதம்" என்ற நூலின் ஆசிரியர்.(விகடன் பிரசூரம்).இவரது வலைப்பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும். தங்கும் இடம் மற்றும் சிறப்பு அனுமதி பெற வேண்டிய இடங்களுக்கு ஆவன செய்வது ஆகியன எனது பொறுப்பு என அவர் தெரிவிதிருந்ததாலும், மேலேகுறிப்பிட்ட சில நிபந்தனைகளும் 100 சதவீதம் ஒத்துப்போனதாலும், மின்னஞ்சல் மூலமாக நானும் வருகையை உறுதிசெய்தேன்.சனிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு குடும்பத்துடன் ஊட்டிக்குப் போய்சேர்ந்தேன்.முன்னமே லதானந்த் மற்றும் வலைச்சரம் சீனா,நிகழ்காலத்தில், ஆகியோரும் குடும்பத்துடன் வ்ந்திருந்தனர்.
மாலை தமிழ்மணம் காசியும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.லதானந்த் தம்பதியரின் கோவைக்கே உரித்தான மரியாதை கலந்த உபசரிப்பு கொஞ்சம் கூச்சம் தந்தது (அந்த அளவுக்கு நான் ஒர்த்தில்லய்யா).லண்டனிலிருந்து வந்திருந்த லதானந்த் அவர்களின் மூத்தமகன் பாலாஜி, எனது மகன்கள் வசந்த், விபின்,திரு காசி அவர்கள் மகன் சதீஷ் என ஒரு இளமைப்பட்டாளம் அந்த இடத்தை யூத்ஃபுல்லாக்கியது. திருப்பூரிலிருந்து வந்திருந்த நிகழ்காலத்தில் ( சிவ சுப்பிர மணியன்) அவர்களின் குழந்தைகள் அஸ்வதி, ரிதினி, மற்றும் காசி( காசிலிங்கம்) அவர்களின் குழந்தைகள் காயத்ரி , பவித்ரா, என பெண்குழந்தைகளால் அவ்விடம் களைகட்டியது.மாலை அனைவரையும் தேயிலை தொழிற்சாலைக்கு அழத்துச் சென்றார்.பிறகு நாய் கண்காட்சி.அடுத்து வேக்ஸ்ஹவுஸ்.இரவு விடுதிக்கு வந்த பிறகு காடுகள் தொடர்பான விலங்குகள் மற்றும் தாவரங்கள் பற்றிய சிலைடு ஷோவுடன் கூடிய வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.குழந்தைகள் பெரியவர் அனைவருக்கும் அது பயனுள்ள தகவலாக இருந்தது.(உ.ம்.1.தேசிய பறவை, தேசிய மரம்,தேசிய விலங்கு கேள்விப்பட்டிருக்கிறேன்.நம் மாநில பறவை, விலங்கு,மரம் என்ன?).
இரவு மேட்டுப்பளயத்தில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் சாலை போக்குவரத்து நெரிசலால் திரு கொல்லான்( ராம்பிரசாத்) அவர்கள் தாமதமாக வந்து சேர்ந்தார்.( என்னடா கொல்லான் , நிகழ்காலத்தில், சீனா என பெயர் இருக்கிறது என நினக்க வேண்டாம் இந்தப் பெயர்களில் தான் இவர்கள் வலைப்பதிவு வைத்துள்ளார்கள்.நான் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையம் என்ற பெயரில் எழுதுவது மாதிரி. வேறு நிறத்தில் தெரியும் அப்பெயர்களை சொடுக்கினால் அவர்களது வலைப்பதிவிற்கு செல்லலாம்)( பதிவுலக நண்பர்கள் இவர் இதையெல்லாம் விளக்கி எழுதிக்கிட்டிருக்காரே என முகம் சுளிக்க வேண்டாம். எனது வலைப்பதிவு வாசகர்கள் பெரும்பாலும் எனது துறையைச் சார்ந்தவர்கள்.அரசு ஊழியர்கள்.பின்னூட்டம் கூட போடாதவர்கள்.இத்தகவல்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்)
இரவு தங்குவதற்கு நல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியே அறை ஒதுக்கப்பட்டிருந்தது.காலை, சீனிஅவுல், ரவா உப்புமா ,சட்னி,ஊர்காய் சகிதம் வயிற்றை ரொப்பிக்கொண்டு லதானந்த் ஏற்பாடு செய்திருந்த ஸ்வராஜ் மாஸ்தா வேனில் கிளம்பினோம்.பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே சன்னலோரம் முன்னுரிமை என்ற லதானந்த்தின் கன்டிஷனுக்கு பெண்கள் குழந்தைகள் மத்தியில் ஏக வரவேற்பு.நூற்றாண்டு பெருமை வாய்ந்த ரோஸ்கார்டன் சென்றோம்.அது முடித்து அவலாஞ்சி தாண்டி " லக்கிடிகேட்" பகுதிக்கு சிறப்பு அனுமதி பெற்று அழைத்துச்சென்றார்.அது பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட பகுதி.பாதையெங்கும் பயமும் எங்களுடன் பயணம் செய்தது.சில இடங்களில் வாகனத்தில் மரக்கிளைகள் மோதும் சத்தம். அந்த சத்தம் வரும் போதெல்லாம் குழந்தைகளின் அலறல் என பயணம் சுவாரஸ்யமாயிருந்தது.காலையில் புறப்படும் போதே தனது ஹேண்டி கேமராவை திரு காசி அவர்களின் புதல்வன் சதீசிடம் ஒப்படைத்திருந்தார் லதானந்த்.சதீஷ் கே.வி.ஆனந்தாக மாறி அனைத்தையும் சுட்டுக் கொண்டிருந்தார்.ஒன்று விடாமல் அனத்தையும் பதிவு செய்ய வேண்டும் என லதானந்த் தெரியாத்தனமாக கூறிவிட, உக்காரும் போதும், எழுந்திருக்கும் போதும் எடுக்கவா அங்கிள்" என சதீஷ் கேட்கும் போதெல்லாம் சிரிப்பு பற்றிக்கொண்டது வாகனத்தில்.
வழியில் பவானி அம்மன் கோயில் தரிசனம்.அம்மனுக்கு இவ்வளவு தைரியம் வேண்டாம்.மலைச்சரிவில் வழிந்தோடும் அருவிக்கு அருகே கோயில் முகப்புக்கு கீழே இற்ங்கி அருவி வழியாகத் தான் போகவேண்டும்.கோயில் வாயிலிலிருந்து எட்டிப்பார்த்தால் அதளபாதாளம் . கொஞ்சமாக தண்ணீர் வரும் இப்போதே இப்படி யிருந்தால் மழைக்காலங்களில் எப்படி இருக்கும்? நினைத்துப்பார்க்கவே பயமாயிருந்தது.நீண்ட........பயண்த்திற்கு பின் லக்கிடிகேட் பகுதியை அடைந்தோம். அடடா...இப்படியும் பூமியில் நிலப்பரப்பா? நீண்ட புல்பரப்பு...ஆழமான நீர்தேக்கம். ஒரு ஓரத்தில் அருவி அந்நீர்பிடிப்பு பகுதிக்கு வரும் இடம் என அனைத்தும் கண்ணையும் மனதையும் நிறத்தது.கட்டவிழ்க்கப்பட்ட காளை போல மலைகளிள் ஏறியும் பள்ளத்தாக்கில் இறங்கியும் குடும்பத்தினர் சந்தோஷித்தனர்.அந்த திரில்லிங் அனுபவத்தைப்பெற சீனா அவர்களின் துணைவியாரை கைபிடித்து ஏற்றியும் இறக்கியும் அழைத்துச் சென்ற காட்சி இன்னும் கண்முன்னே இருக்கிறது.என்ன ஒரு தாம்பத்தியம்.கிரேட் சீனா சார்.
தண்ணீர் நிறைய இல்லாத்தால் அபாயம் குறைவு.நானும் பாலாஜியும் மலையின் உச்சியை தொடும் முயற்சியில் தோற்று பத்திரமாக இறங்கினால் போதும் என சரிவில் சருக்காமல் கீழே வந்து சேர்ந்தோம்.
மரத்தடியில் மதிய உணவு.மாம்பழம் சக்கரை சோம்பு என தடபுடல்.
முதல் நாளே எடுத்த முடிவின்படி ஆண்கள் மட்டுமே பரிமாறும் பணியிணை மேற்கொண்டனர்.உணவுக்கு பின். கொல்லானால் தயாரிக்கப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி இரண்டு குழுக்களாக பிரித்து வழங்கப்பட்டது.( அனைவருக்கும் எடுத்து வந்திருந்தார் வரும்போது வாகனத்திலிருந்து காற்றில் பறந்து விட்டது, எஞ்சியது இரண்டு தான்.)இரண்டு குழுக்களும் ஒரு தவறுடன் ஒரேமதிப்பெண் பெற்றது.
அடுத்து ஒவ்வொருவருக்கு ஒரு சீட்டு வழங்கப்பட்டது.அதில் உள்ளது போல் செய்யவேண்டும்.இதிலிருந்து சிரிக்கத் துவங்கியவர்கள் தான் எங்களது சிரிப்பலைகளால் அந்தப்பள்ளத்தாக்கே நிரம்பியது.
சீனாவுக்கு விஜயகாந்த்போல் நடிக்கவும்.
காசிக்கு காசி பட விக்ரம் போல் நடிக்கவேண்டும்.
எனக்கு நீச்சல் அடிக்கவும்.
லதானந்திற்கு ஆணிபிடுங்கவும்.
பாரதிக்கு இங்கிருப்பவர்கள் பெயர்களைச் சொல்லவும்.
நிகழ்காலத்திலுக்கு.. ஒரு அல்ஜீப்ரா கேள்வி.
அவரது மனைவிக்கு மேஜர் சுந்தர்ராஜனைப்போல்
நடிக்கவும்.(இவரது ஏனுங்கன்னா...என விளித்துப்பேசும் கொங்குத்தமிழ் இன்னும் காதிலேயே இருக்கிறது)
இப்படியே 21 பேர்களுக்கும் ( சீனா சார் எண்ணிக்கை கரெக்ட்டா?)
என்ன ஒரு சுகம் . என்ன ஒரு சிரிப்பு, என்ன ஒரு நிம்மதி..மீண்டும் குழந்தையான மகிழ்ச்சி. அந்த சந்தோசத்தை சுமந்தவாரே அங்கிருந்து கிளம்பி பொட்டானிக்கல் கார்டன் சென்று சுற்றிப்பார்த்துவிட்டு தங்குமிடத்துக்கு கிளம்பினோம்.இடையிடையே நிறைய தகவல்கள் பேச்சு வாக்கில் தெரிவித்துக்கொண்டுவந்தார் லதானந்த்.உதகமண்டலத்திற்கான பெயற்காரணம்,ஆங்கிலேயர்கள் தங்களது நேட்டிவிட்டி உணர்வுகளுக்காக அங்கிருந்து மரங்க்கன்றுகளை கொண்டுவந்து இங்கு பயிரிட்டது,நிலப்பரப்பின் பரிணாமவளர்ச்சியின் கடைசிக்கட்டம் கிராஸ்லேண்ட்,என தெரியாத தகவல்கள். நாளை தங்க நிணைப்பவர்கள் தங்கலாம் என லதானந்த் கூறியும் தங்க இயலாத நிலை.திங்கள் கிழமை ஆடிட். அங்காடித்தெரு படத்தில் ஒருபையனை அவனது அப்பா பரிச்சையில் மார்க் வாங்காததற்காக அடிக்கும் போது அவன் சொல்வான் " எவன்டா இந்த பரிட்சையை கண்டுபுடிச்சது நாசமாபோக" என்பான்.... ஆடிட்டையும் அப்படித்தான் சொல்ல வேண்டும் போல் இருந்தது.
இரவு சப்பாத்தி ரெடியாகும்வரை அனைவரும் வட்டவடிவமாக அமர்ந்து தங்களது சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம்.காசியின் புதல்விகளின் டான்ஸ் அரங்கேரியது.திறமை மிகுந்த பெண்கள்.முடிவில் லதானந்த் அவரது அழைப்பை ஏற்று குடும்பத்துடன் வந்நிருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.(அனுபவிச்சது நாங்க.நாங்கதான் நன்றிகூற வேண்டும்).இரவு கிளம்பி கோத்தகிரி வழியாக அதிகாலை 3.00 மணிக்கு திருச்சிவந்து சேர்ந்தோம்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் யாரும் வலைப்பதிவுகள் பற்றி பேசிக்கொள்ளவெ இல்லை.நினைவுகள் நிரந்தரமானவை.
பவானி கோயிலில் சாமி கும்பிடும் லதானந்த்
இந்தப் புன்னகை என்ன விலை?
11 May 2010
07 May 2010
பேறுகால பின் கவனிப்பு மையம்
Subscribe to:
Posts (Atom)