29 September 2011

Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம் அமல்படுத்துவது தொடர்பாக கீழ்கண்ட குறிப்புகள் செய்யாறு மாவட்ட உதவி இயக்குனர் (புள்ளியியல்) திரு.பாஸ்கர் அவர்கள் அவர்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.இது அரசு கடிதமா எனத் தெரியவில்லை.ஆரம்ப நிலையில் ஒரு புரிதலுக்குப் பயன்படும்.

Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme Scheme details


26 September 2011

மருத்துவத் தேர்வாணைய வாரியம்


மற்ற துறைகளைப் போல், சுகாதாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான்   இது நாள் வரை தேர்வு நடத்தி, டாக்டர்களையும் இதர மருத்துவத் துறை ஊழியர்களையும் தேர்வு செய்து வந்தது.ஆனால், கடும் பணிச் சுமை காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டாக்டர்களையும், மருத்துவ ஊழியர்களையும் தேர்வு செய்வதற்கு மிகவும் காலதாமதமானது. உதாரணமாக, இளநிலை உதவியாளர் பணிக்கு, 200 இடங்களுக்கு, 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால்,விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டாண்டுகள் ஆகிவிடுகிறது. இதுபோன்று, பல்வேறு துறை பணியிடங்களுக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்வதால், காலியாக மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகிறது. ஆனால், மருத்துவச் சேவை, அவசர, அத்தியாவசிய சேவை என்பதால், ஆள் பற்றாக்குறை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய தனி தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வாணையம் மூலம் தற்போது காலியாக உள்ள 15 ஆயிரத்து 689 இடங்களை நிரப்புவதோடு,அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கூடுதல் டாக்டர்களையும்,மருத்துவப் பணியாளர்களையும்,அமைச்சுப்பணியாளர்களும், தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.
            மொத்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் 385. துணை ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சேர்த்தால் மொத்தம் 1589 ஆரம்ப சுகாதார நிலையங்கள்.ஆனால் ஒரு வட்டாரத்திற்கு மூன்று அமைச்சுப் பணியாளர் என்கிற கணக்கில் தற்போது 1155 அமைச்சுப் பணியிடங்கள் மட்டுமே ஒப்பளிப்பில் உள்ளது.இது சேங்ஷன் நிலை மட்டுமே.பொசிஷன் வேறுபடும்.தற்போது புதிதாக துவக்கப்பட்டுள்ள 110 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 110 இளநிலை உதவியாளர் பணியிடம் ஒப்பளிக்கப் பட்டு தர்காலிக இளநிலை உதவியாளரகளைக் கொண்டு அப்பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன ஆக மொத்தம் 1155+110=1265 பணியிடங்கள் மட்டுமே உள்ளது.1589-1265=324 பணியிடம் ஒப்பளிக்கப் படவேண்டியுள்ளது.2000 ம் ஆண்டு வட்டார ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாக நிமாணிப்பு செய்யப் படும் போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு அமைச்சுப் பணியாளர் பணியிடம் இருந்தது.ஆனால் இன்றைய நிலைமை 1589 ஆரமப சுகாதார நிலையங்களுக்கு 1265 பணியிடமே உள்ளது.2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சிகள் இவைகள் அபாரமானது.ஆரம்ப சுகாதார நிலையப் பணியாலர்களின் ஊதியம் மற்றைய பணப் பயன்கள் பெற்றுதருவது என்கிற நிலைக்கே ஒரு கண்காணிப்பளர்,உதவியாளர்,இளநிலை உதவியாளர் பனியிடம் வழங்கப்பட்டது.இன்றைய நிலை என்ன?
1.NRHM
2.JSY
3.DR.MUTHULAKSHMI REDDY MET.BEN.SCHEME
4.UPGRADED PHC
இவைகளே ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெரும்பான்மையான பொழுதுகளை விழுங்குகின்றன.பல இலச்சக்கணக்கான பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆன் லைன் ரிப்போர்ட்,டபுள் எண்டிரி சிஸ்டம், டேலி,என் பல புதிய வடிவ அறிக்கை பணிகள் கூடுதலாக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு போடப்பட வேண்டிய 324 பணியிடங்களை நிர்வாக அலுவலர் பணியிடங்களாக ஒப்பளித்து அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார் நிலைய்த்திற்கும் ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் தோற்றுவித்தல் அவசியம்.

22 September 2011

ஒரு கதை கேளுங்கள்.

ஒரு அரசு ஊழியர் தனது குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போது அகால மரணமடந்துவிட்டார்.அவர் பணிபுரிந்த அலுவலகம் பொது சுகாதாரத்துறையைச் சேர்ந்த சிதம்பரம் யானைக்கால் நோய்தடுப்பு திட்ட அலுவலகம்.பணி - உதவியாளர் ( அமைச்சுப்பணி).பெயர் உத்திராபதி.இறந்தவருடம் 1992. பணிக்காலத்தில் சிறந்த முறையில் பணியாற்றி ஊழியர்களிடமும் அதிகாரிகளிடமும் நற்பெயர் எடுத்தவர்.காலத்தின் கோலம் அவரது குடும்பத்தை நிர்கதியாக்கியது.சபரிமலை சென்று வரும்போது மாரடைப்பால் கால்மானார்.குழந்தைகள் 3.மூவரும் பெண்கள்.அவர் இறந்த போது அவர்களுக்கு வயது முறையே 24,10,8.என்ன செய்வாள் அந்த தாய்?.முதல் பெண் திருமணம் ஆணவள்.இரண்டாம் பெண்னோ 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.மூன்றாவது பெண் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.1999ல் தான் இரண்டாவது பெண் 10ம் வகுப்பு முடிக்கிறாள்.அதுவரை தட்டு தடுமாறி குடும்பத்தினை நடத்திய அந்ததாய் 1999 ல் அரசுக்கு மனு சமர்ப்பிக்கிறார்.எனது மகள் தற்போது உரிய கல்வித்தகுதி முடித்துள்ளார்,அவருக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்கும் படி கேட்கிறார்.துறை கோப்பினை 2003 வரை பரிசீலித்தது? அதன் பிறகு மனு திருப்பப்படுகிறது.காரணம்-’கருணை அடிப்படையில் வேலை வழங்க அரசு தடை விதித்துள்ளது” -என்பதுதான்.2006 ல் அந்தத் தடையினை அரசு நீக்கியது.மீண்டும் அந்தத்தாய் மனு சமர்ப்பிக்கிறார்.இந்த மனுவை பரிசீலனை செய்த? துறை, ஊழியர் இறந்து 3 வருடங்களுக்குள் கருணை வேலை கேட்டு மனு கொடுக்க வேண்டும்,ஆனால் , நீங்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு மனு கொடுத்துள்ளதால் உங்களது மனு நிராகரிக்கப் படுகிறது என உத்தரவிட்டது.
என்ன செய்வாள் அந்தத்தாய்?.கணவன் இறந்து 14 வருடங்கள் வனவாசம் வாழ்ந்தாகிவிட்டது.இன்னும் நீதி கிடைத்த பாடில்லை? நீதி மன்றத்தினை நாடினாள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனபாலன் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

 தீர்ப்பின் சாராம்சம்.

1.ஒரு குடும்பத் தலைவர் இறந்தவுடன் அந்த குடும்பத்தினர் வாழ்வாதாரத்துக்காக கருணை வேலை கேட்கின்றனர்.அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனுதாரர் கொடுத்த மனு தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் சரியானது கிடையாது.

2.இது போன்ற நிகழ்வுகளில் அதிகாரிகள் மனுவினை கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்.

3.ம்னு தாரருக்கு கருணை வேலை வழங்க முடியாது என்று அரசு மறுக்க முடியாது.

4.அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

5.மனுதாரரின் தகுதிக்கேற்ப 2 மாதங்களுக்குள் வேலை வழங்க பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு உத்தரவிடப் படுகிறது.

அந்தத்தாயின் உள்ளம் எவ்வளவு மகிழும்.
சமீப காலமாக நீதிமன்றம் சென்றுதான் நீதியை பெறவேண்டும் என்கிற நிலை உள்ளது.இது மாற வேண்டும்.அதிகாரிகள் எந்த கோப்பிலும் நேரடியாக முடிவெடுப்பதில்லை.
அமைச்சுப்பணியாளர்களின் நேர்மையான ,மனசாட்சியுடனான ,நடவடிக்கைகளால் அதிகாரிகளை நல்லது செய்விக்க முடியும்.மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

(PICME) PREGNANCY AND INFANT COHORT MONITORING ENTRY

(PICME) PREGNANCY AND INFANT COHORT MONITORING ENTRY REVIEW COMDUCTED BY DEPUTY DIRECTOR OF HEALTH SERVICES AND FAMILYWELFARE AT THOGAMALAI PRIMARY HEALTH CENTER ON 15.09.2011



FSO postings

Food safety officers posted at urban areas
R.No.80849/FSSA/2011/S2 dt.20.09.211 of the Commissioner of food safety Officer Chennai 6

Rural areas
R.No.80849/FSSA/2011/S2 dt.20.09.211 of the Commissioner of food safety Officer Chennai 6

R.No.80849/FSSA/2011/S2 dt.20.09.211 of the Commissioner of food safety Officer Chennai 6

21 September 2011

FOOD SAFETY AND STANDARDS ACT


நன்றி:http://foodsafetynews.wordpress.com/

உணவுபாதுகாப்பு மற்றும் தர சட்டம், விதிகள் ,துணைவிதிகள் அடங்கிய புத்தகத்தை வாங்க கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
விலைRs600+70=670 ஆகும்
FOOD SAFETY AND STANDARDS ACT, RULES AND REGULATIONS
Containing:
• The Food and Safety Standards Act, 2006 • The Food Safety and Standards Rules, 2011 • The Food Safety and Standards (Licensing and Registration of Food Businesses) Regulations, 2011 • The Food Safety and Standards (Packaging and Labelling) Regulations, 2011 • The Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011 • The Food Safety and Standards (Contaminants, Toxins and Residues) Regulations, 2011 • The Food Safety and Standards (Laboratory and Sample Analysis) Regulations, 2011 • The Food Safety and Standards (Food Products Standards and Food Additives) Regulations, 2011
Rs. 600 Postage & forwarding Rs. 70 extra
Supply by Registered Post on receipt of full amount by DD/AT PAR Cheque payable at New Delhi in favour of AKalank Publications or by VPP
AKALANK PUBLICATIONS
3622 MORI GATE
DELHI-110006
Ph. 011-23915064, 9312715064 Toll free 1800115064
email info@akalank.com
அல்லது கீழ்கண்ட புத்தக விற்பனை வலைதளத்தில் online booking முறையில் வாங்கி கொள்ளலாம். புத்தகம் கூரியர் முலம் அனுப்பப்படும். புத்தகத்தை பெற்று கொண்டு பணம் செலுத்தலாம். விலை Rs540/ only.
டவுன் லோடு செய்ய கீழே லிங்க்.

DOWNLOAD FSSA ACT,RULES & REGULATION CLICK THE BELOW LINKS
DRAFT NOTIFICATION:

16 September 2011

2011-12 கொள்கை விளக்கக் குறிப்பு

2011-12 மக்கள் நல்வாழ்வுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு

Health Family Welfare t

நேரடி டவுண்லோடுக்கு இங்கே கிளிக்கவும்
https://docs.google.com/document/d/1wWo7Qfl9RAu8pX4XBXRtRpVflzOX2TjR2i-vLjoLfkQ/edit?hl=en_US

09 September 2011

புதிய மருத்துவர்கள்

செப்டம்பர் 6,7,8 ஆகிய தேதிகளில் உதவி மருத்துவர்களுக்கான  10 a(1) நேர்காணல் சென்னையில் நடந்துள்ளது.காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.மேற்படிப்பிற்கு செனறாதனால் ஏற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட்டுவிடும்.புதியவர்களை வரவேற்போம்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய இருக்கும் மருத்துவர்களுக்கான சில டிப்ஸ்.


அவ்வையாரின் ஆத்திச்சூடியிலிருந்து.

1.உடையது விளம்பேல்
2.ஓதுவது ஒழியேல்
3.ஙப்போல் வளை
4.இணக்கம் அறிந்து இணங்கு
 உரை: ஒருவரோடு நட்புக் கொள்ளுமுன் அவரைப் பற்றிய செய்திகளை ஆராய்ந்துஅறிந்து ( அவர் நற்குணத்தவர் என்றால் மாத்திரமே) அவரோடு நட்பும் தொடர்பும் கொள்க.
5.இயல்பலாதன செய்யேல்
உரை:இயற்கையோடு ஒத்திராத (வழக்கத்திற்கு விரோதமான) செயல்களை ஒரு போதும் செய்யற்க
6.அழகலாதன செயேல்
7.கேள்வி முயல்
8.சுளிக்கச் சொல்லேல்
9.சேரிடம் அறிந்து சேர்
10.தூக்கி வினை செய்
11.தோற்பன தொடரேல்.
12.நொய்ய உரையேல்
13.பெரியாரைத் துணைக்கொள்
உரை: நாம் தவறு செய்யுங்கால் இடித்துக் கூறித் திருத்தும் பண்புடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
14.மாற்றானுக்கு இடங்கொடேல்.
15.முனைமுகத்து நில்லேல்
16.மைவிழியார் மனையகல் ( ஆண்களுக்கு மட்டும்)
17வல்லமை பேசேல்
18ஒன்னாரைத் தேறேல்

மேலும் சில டிப்ஸ் க்கு இங்கே சொடுக்கவும்.

07 September 2011

முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்


நன்றி: http://tamilnadu-stg.com/ தளத்திலிருந்து பெறப்பட்ட செய்தி.

தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் தமிழ்நாடு 


சுகாதார திட்டம்
முறையான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டி நூல்
முகப்பு பக்கத்திற்கு
உங்களை கனிவுடன் வரவேற்கிறோம்