மற்ற துறைகளைப் போல் , சுகாதாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் இது நாள் வரை தேர்வு நடத்தி , டாக்டர்களையும் இதர மருத்துவத் துறை ஊழியர்களையும் தேர்வு செய்து வந்தது . ஆனால் , கடும் பணிச் சுமை காரணமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் டாக்டர்களையும் , மருத்துவ ஊழியர்களையும் தேர்வு செய்வதற்கு மிகவும் காலதாமதமானது . உதாரணமாக , இளநிலை உதவியாளர் பணிக்கு , 200 இடங்களுக்கு , 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் , விண்ணப்பங்களைப் பரிசீலித்து , தேர்வு நடத்தி , பணி நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டாண்டுகள் ஆகிவிடுகிறது . இதுபோன்று , பல்வேறு துறை பணியிடங்களுக்கும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்வதால் , காலியாக மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தை நிரப்ப நீண்ட காலம் ஆகிறது . ஆனால் , மருத்துவச் சேவை , அவசர , அத்தியாவசிய சேவை என்பதால் , ஆள் பற்றாக்குறை மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது . இந்த நிலையில் தான் , மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய தனி தேர்வாணையம் அமைக்கப்பட்டுள்ளது . புதிய தேர்வாணையம் மூலம் தற்போது காலியாக உள்ள 15 ஆயிரத்து 689 இடங்களை நிரப்புவதோடு , அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு , கூடுதல் டாக்டர்களையும் , மருத்துவப் பணியாளர்களையும்,அமைச்சுப்பணியாளர்களும், தேர்வு செய்து நியமிக்க வேண்டும்.
மொத்த வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் 385. துணை ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சேர்த்தால் மொத்தம் 1589 ஆரம்ப சுகாதார நிலையங்கள்.ஆனால் ஒரு வட்டாரத்திற்கு மூன்று அமைச்சுப் பணியாளர் என்கிற கணக்கில் தற்போது 1155 அமைச்சுப் பணியிடங்கள் மட்டுமே ஒப்பளிப்பில் உள்ளது.இது சேங்ஷன் நிலை மட்டுமே.பொசிஷன் வேறுபடும்.தற்போது புதிதாக துவக்கப்பட்டுள்ள 110 கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 110 இளநிலை உதவியாளர் பணியிடம் ஒப்பளிக்கப் பட்டு தர்காலிக இளநிலை உதவியாளரகளைக் கொண்டு அப்பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன ஆக மொத்தம் 1155+110=1265 பணியிடங்கள் மட்டுமே உள்ளது.1589-1265=324 பணியிடம் ஒப்பளிக்கப் படவேண்டியுள்ளது.2000 ம் ஆண்டு வட்டார ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாக நிமாணிப்பு செய்யப் படும் போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு அமைச்சுப் பணியாளர் பணியிடம் இருந்தது.ஆனால் இன்றைய நிலைமை 1589 ஆரமப சுகாதார நிலையங்களுக்கு 1265 பணியிடமே உள்ளது.2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் வளர்ச்சிகள் இவைகள் அபாரமானது.ஆரம்ப சுகாதார நிலையப் பணியாலர்களின் ஊதியம் மற்றைய பணப் பயன்கள் பெற்றுதருவது என்கிற நிலைக்கே ஒரு கண்காணிப்பளர்,உதவியாளர்,இளநிலை உதவியாளர் பனியிடம் வழங்கப்பட்டது.இன்றைய நிலை என்ன?
1.NRHM
2.JSY
3.DR.MUTHULAKSHMI REDDY MET.BEN.SCHEME
4.UPGRADED PHC
இவைகளே ஆரம்ப சுகாதார நிலையத்தின் பெரும்பான்மையான பொழுதுகளை விழுங்குகின்றன.பல இலச்சக்கணக்கான பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆன் லைன் ரிப்போர்ட்,டபுள் எண்டிரி சிஸ்டம், டேலி,என் பல புதிய வடிவ அறிக்கை பணிகள் கூடுதலாக உள்ளது.இதனை கருத்தில் கொண்டு போடப்பட வேண்டிய 324 பணியிடங்களை நிர்வாக அலுவலர் பணியிடங்களாக ஒப்பளித்து அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார் நிலைய்த்திற்கும் ஒரு நிர்வாக அலுவலர் பணியிடம் தோற்றுவித்தல் அவசியம்.
4 comments:
To welcome in this site. More than 15,000 staff to be post this recruitment board. when will start this Medical service recruitment board, Tamil Nadu.I am one of the pharmacist eagerly know when will I get the change to join Government pharmacist.
Welcome in this site. More than 15,000 vacancies to fill in this Medical service recruitment board. May I know when will start this Medical service recruitment board, How to fill these type of vacancies. it will be the competitive exam type like Tamil Nadu public service commission, or Employment seniority? I am one of the pharmacist when will I get {Government} Pharmacist? when will I get Government Job?
Welcome in this site. More than 15,000 vacancies to fill in this Medical service recruitment board. May I know when will start this Medical service recruitment board, How to fill these type of vacancies. it will be the competitive exam type like Tamil Nadu public service commission, or Employment seniority? I am one of the pharmacist when will I get {Government} Pharmacist? when will I get Government Job?
referral hospital - இதற்குத் தமிழ் வார்த்தை என்ன? தயவுசெயது தெரிவிக்கவும். மொழிபெயர்ப்புப் பணிக்காக.
Post a Comment