12 April 2012

நக்கீரா நன்றாக எம்மைப் பாரும்.

மகப்பேறு திட்டம் 400 கோடி முடக்கம் என்ற தலைப்பில் நக்கீரன் ஏப் 11-13 ல் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.இந்தக்கட்டுரை தொடர்பாக சில தகவல்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.ஒட்டு ,மொத்தமாக இத்திட்டத்தினை குறை கூறுவது மட்டுமே செய்தியாளரின் நோக்கமாக தெரிகிறது.

1.இத்திட்டம் மூலம் தொகை முழுதும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாக பயனாளருக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2.கர்ப்பமான நான்காவது மாதம் கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்வது அவசியம்.அவ்வாறு பதிவு செய்யாமல் பிரசவ நேரத்தில் வந்து உதவித்தொகை கேட்பவர்க்கு இத்தொகை வழங்க இயலாது.(தாய் மற்றும் சேயின் ஆரோக்கியம் தொடர்பாகவே இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது.)

3.கிராமப்புறங்களில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தொகை பயனாளர் கணக்குக்கு நேரடியாக ஈ.சி.எஸ் முறையில் பணம் வரவு வைக்கப் படுகிறது.

4.செக்காகவோ,பணமாகவோ வழங்கப்படும் போது கையூட்டலுக்கு காரணமாக அமையும் என்பதாலேயே வங்கி கணக்கு துவங்க வற்புறுத்தப்படுகிறது.

5. நக்கீரன் குறிப்பிடுவது போல 500 டெபாசிட் எந்த வங்கியும் கேட்பதில்லை.அந்த அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 0 கணக்கு துவங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு வழங்கியுள்ளனர்.

6 நக்கீரன் குறிப்பிடுவது போல்.விண்ணப்பத்தில் 206 கேள்விகள் கேட்கப் படுவதில்லை( மாதிரி விண்ணப்படிவம் பார்க்க).விண்ணப்பம் மிக எளிமையானது, பயனாளர் தொடர்பான விவரங்களை கிராம சுகாதார செவிலியர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போதுதான்(picme) அனைத்து விவரங்களும் ஏற்றப்பட வேண்டும்.இவ்விவரங்கள் அனைத்தும் கிராம சுகாதார செவிலியர் வசம் எப்போதும் இருக்கும்.இது தொடர்பான விரிவான பயிற்சிகள் ( பயிற்சி  காட்சி) புரஜக்டர் மூலம் எளிமையாகவும் விரிவாகவும்  அளிக்கப் பட்டுள்ளது.

7.ஜாதி, படிப்பு,பிளட் டெஸ்ட்,எச்.ஐ.வி, டெஸ்ட், தடுப்பூசி,உடல் எடை,ஸ்கேன், இதையெல்லாம் ”அப்புடி...இப்புடின்னு ஒரு 206 கேள்வி “ என குறிப்பிடுவது  எவ்வளவு அறியாமை.? இதெல்லாம் கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு கிடைக்கிறதே என நக்கீரன் மகிழ்ச்சியடைய வேண்டாமா?

8.கம்ப்யூட்டர் பணிக்கு டேட்டா எண்டிரி ஆப்பரேட்டர் பணியமர்த்தப் படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.ஆனால் இடைக்கால மாக ஒரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.5000 வீதம் ”அவுட்ஸோர்ஸில் “ ஆன் லைன் வேலைகள் செய்ய ஒரு நபரை வட்டார அளவிலேயே மருத்துவ அக்லுவலர்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்து அதற்கான தொகை டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரயிலான காலங்களுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ20,000/- வழங்கியுள்ளது.(மொத்தம் 385 x 20000  = 77,00,000).

9.மொத்தத்தில் தாமதம் என்பது ஏதுமில்லை.அப்படி இருந்தாலும் வங்கி கணக்கு துவங்குவது மாதிரியான பயனாளர்களின் பாதுகாப்பு கருதியே இத்தாமதம் ஏற்படுகிறது.

10. ஒட்டு மொத்தத்தில் ஒரு நல்ல திட்டம் மிக நல்ல நிலையில் மக்களை சென்றடையும் வேளையில் முழுமையான தகவல் அறியாமல் இதிலும் அரசியல் பார்ப்பது வருந்தத்தக்கது.

மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் “ நக்கீரா நன்றாக எம்மை பாரும்”

4 comments:

Bruno-Mascarenhas JMA said...

அருமையான விளக்கம் சார்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி சார்

seenu said...

நெத்தி அடி

சே.வேங்கடசுப்ரமணியன் said...

நன்றி சீனு சார்.