15 June 2012

டெங்கு

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க களப்பணி மற்றும் கிராம துப்புறவுக் குழுவினர் , மக்கள் பிரதிநிதிகள்,மஸ்தூர்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள்,பயிலரங்குகள், தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்றது.
    

குறிப்பு:
2010 ம் வருடம் தோகைமலை வட்டாரத்தில் நடத்தப் பெற்ற டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை காண இங்கு கிளிக் செய்யவும்


 நீர் பிடிப்புத் தொட்டிகளில் லார்வா ( கொசுப் புழு) உள்ளதா என மருத்துவ அலுவலரும் சுகாதார ஆய்வாஆய்வாளரும் ஆய்வு செய்கின்றனர்.



 பணியில் பகுதி சுகாதார செவிலியர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்



 மஸ்தூர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் கிராம சுகாதார மற்றும் துப்புரவுக் குழ்வினருக்கான விழிப்புணர்வு முகாம்.



மாவட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட மரு.பிச்சைமுத்து அவர்களின் உரை.


ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மஸ்தூரகள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான பயிலரங்கம் நடத்தும் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரபாகரன்


 வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.ராஜன் அவர்களின் உரை

 களப்பணி


திருமதி.ஆர்.ஜெயலட்சுமி பணி ஓய்வு

தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சேப்ளாப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் சிறப்புநிலை கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரிந்து 30.04.2012 அன்று வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்ற திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களுக்கு தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சார்பாக பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.

விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் திரு.சா.பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்றார்.மரு.மணிமேகலை,மரு.நிருபா,மரு.சுதாகர் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்களின் குடும்பத்தினரும் விழாவில் கல்ந்து கொண்டனர்.முன்னதாக திருமதி.ஆர்.ஜெயலட்சுமி அவர்கள் நல்லதொரு சைவ விருந்து படைத்தார்.விழாவிற்கு பிறகு உரிய மரியாதைகளுடன் அவரது இல்லத்திற்கு அரசு வாகனத்தில் கொண்டு விட்டு வந்தோம்.

இவரது பணிக்காலத்திற்குள் பகுதி சுகாதார செவிலியராக பதவி உயர்வு பெற்றுவிட வேண்டும் என்கிற இவரது கனவு கனவாகவே போய்விட்டது தான் வருத்தமான ஒன்று.மாநில அளவில் நிறைய பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக இருந்தும் இவ்வாறு ஒரே பதவியில் இறுதி வரை பணியாற்றி ஓய்வு பெறும் அவலம் இனியும் தொடராமல் இருக்க வேண்டும்.




திருமதி.ஆர்.ஜெயலட்சுமி


  மரு.நிருபா அவர்கள் சந்தன மாலை அணிவித்தார்

 மரு.மணிமேகலை அவர்கள் பொன்னாடை போர்த்தினார்

 வட்டார மருத்துவ அலுவலர் மரு.சாபிரபாகரன் மற்றும் சேப்ளாபட்டி ஆ.சு.நி. மருத்துவ அலுவலர் திரு.சுதாகர் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினார்கள்.


 தோழிகளுடன்

 மரு.சுதாகர் அவர்களின் வாழ்த்துரை


 டி.கிறிஸ்டி கி.சு.செ அவர்கள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்


 விழாவில் கலந்து கொண்டோர்


 கண்மருத்துவ உதவியாளர் திரு.சி.செல்வமோககுமாருடன்

 கண்காணிப்பாளர்.சே.வேங்கடசுரமணியன் நன்றியுரை

மருத்துவமல்லா மேற்பார்வையாளர் திரு.மனோகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.முத்தையனுடன்.

05 June 2012

அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் தோழர் எம்.ஆர். அப்பன்


முதன் முதலாக 31.01.1920 NGO யூனியன் உருவாக்கப்பட்டது முதல், வளர்ச்சிப் போராட்டம், காலவரிசைப்படி கூட்டம், இயக்கம், அதனுடைய பலம், பலகீனம், சந்தித்த துரோகம் பெற்ற படிப்பினைகள், பங்கெடுத்தவர் பட்டியல் என முழு விபரங்களோடு அரசு ஊழியர் சங்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இப்புத்தகத்தை படித்தால் போதுமானது.
அதேபோல் ஆளுகிற கட்சி, ஆட்சிக்கு வருமுன் என்ன சொல்கின்றன. வந்த பின் எப்படி நடந்து கொள்கின்றன என காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள், அரசு ஊழியர்கள் பிரச்சனையிலும், தொழிற் சங்கத்தை அணுகும் முறையிலும், நடந்து கொண்ட விதம் பற்றி தக்க ஆதாரத்தோடு அவர்களின் வர்க்க ‘‘முகங்களை’’ அம்பலப்படுத்தியுள்ளது.
16.10.1947 உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி. சுப்பராயன் அரசு ஊழியர்கள் பற்றி விவாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் வாதாடியது. 15.12.1947 இல் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை காங்கிரஸ் அரசு கடுமையாக கையாண்டது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கே. காமராஜ் அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என 1968 காலகட்டத்தில் கோரிக்கை வந்தபோது என்னிடம் கருணை இருக்கிறது. நிதிதான் இல்லை என்று கருணாநிதி அவர்கள் நிராகரித்தது.
1982_இல் NGO போராட்டம் நடத்தினால் பதவியை விட்டு விலகி எதிர்போராட்டம் நடத்துவேன், இனியும் என்னை பயமுறுத்த முடியாது என திரு. எம்.ஜி.ஆர். எச்சரிக்கை செய்தது.

1 1/2 வருடமாக MGRஐ பார்க்க முடியாத நிலைமையில் தமிழகத்திலிருந்து சென்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர்களை 8 நிமிடத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா சந்தித்தது.

இப்படி ஏராளமான ஆதாரங்களோடு இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.

இதன் மூலம் தெரிய வந்த ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் ஆசிரியர்களைவிட அதிகம் ஊதியம் பெற்று வந்த அமைச்சுப்பணியாளர்கள் ஒரு கட்டத்தில் ஆசிரியர்களைவிட குறைவாக ஊதியம் பெறுவது தெரிந்தும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக தோழர் எம்.ஆர்.அப்பன் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு அமைச்சுப்பணியாளர்களின் மிகக்குறைவான ஊதியத்திற்கு அவர் ஒரு காரணமாக இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. மேலும் அமைச்சுப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பாக அப்போது கோரிக்கைகள் எழுப்பி வந்த என்.ஜி.ஓ , பணியாளர் சங்கம் ஆகியவைகளை அந்த கோரிக்கையை எழுப்பியதற்காகவே கேலிசெய்யும் பாங்கு சில இடங்களில் தெரிய வருகிறது. 

அமைச்சுப்பணியாளர்களின் குறைவான ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைகளை களைய மட்டுமே போராட்டத்தை முன்னெடுக்க சிவஇளங்கோ மற்றும் பணியாளர் சங்கங்கள் முயற்சி செய்த போது இதர தரப்பு ஊழியர்களின் கோரிக்கைகளையும் அதில் சேர்த்து பிரச்சினையை நீர்க்கச் செய்து அவர்தம் நிலையில் உள்ள அனைவருக்கும் 5% தனிஊதியம் என்ற நிறைவில்லாத சலுகையினை அமைச்சுபணியாளர்கள் பெற அரசு ஊழியர் சங்கத்தினர் காரணமாக இருந்த வரலாற்றுப் பிழையினை இப்புத்தகம் மூலம் உணர முடிகிறது.இதன் தாக்கம் இன்றுவரை அமைச்சுப்பணியாளர்கள் ஊதிய அளவில் நிமிர முடியாமல் உள்ளனர் என்பது நிதர்சனம்.

ஒட்டு மொத்தத்தில் ஒரு மாவீரனின் வாழ்க்கையினை படித்த திருப்தி.ஒரு இயக்கத்தின் வரலாற்று ஆவணப்படம் பார்த்த மாதிரியான உணர்வு.நிறைய எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாம்.பாகம் இரண்டு விரைவில் வெளிவரவேண்டும்.