முதன் முதலாக 31.01.1920 NGO யூனியன் உருவாக்கப்பட்டது முதல், வளர்ச்சிப் போராட்டம், காலவரிசைப்படி கூட்டம்,
இயக்கம், அதனுடைய பலம், பலகீனம், சந்தித்த துரோகம் பெற்ற படிப்பினைகள்,
பங்கெடுத்தவர் பட்டியல்
என முழு விபரங்களோடு அரசு ஊழியர் சங்க வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால்
இப்புத்தகத்தை படித்தால் போதுமானது.
அதேபோல் ஆளுகிற கட்சி, ஆட்சிக்கு வருமுன் என்ன சொல்கின்றன. வந்த பின் எப்படி நடந்து
கொள்கின்றன என காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள், அரசு ஊழியர்கள் பிரச்சனையிலும்,
தொழிற் சங்கத்தை அணுகும்
முறையிலும், நடந்து கொண்ட விதம் பற்றி தக்க ஆதாரத்தோடு அவர்களின் வர்க்க ‘‘முகங்களை’’ அம்பலப்படுத்தியுள்ளது.
16.10.1947 உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் பி. சுப்பராயன் அரசு ஊழியர்கள் பற்றி விவாதிக்க
அனுமதிக்கக்கூடாது என்று சட்டமன்றத்தில் வாதாடியது. 15.12.1947 இல் அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தை
காங்கிரஸ் அரசு கடுமையாக கையாண்டது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. கே. காமராஜ்
அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
மத்திய அரசிற்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என 1968 காலகட்டத்தில் கோரிக்கை வந்தபோது
என்னிடம் கருணை இருக்கிறது. நிதிதான் இல்லை என்று கருணாநிதி அவர்கள் நிராகரித்தது.
1982_இல் NGO போராட்டம் நடத்தினால் பதவியை விட்டு விலகி எதிர்போராட்டம் நடத்துவேன், இனியும் என்னை பயமுறுத்த முடியாது
என திரு. எம்.ஜி.ஆர். எச்சரிக்கை செய்தது.
1 1/2 வருடமாக MGRஐ பார்க்க முடியாத நிலைமையில் தமிழகத்திலிருந்து சென்ற அரசு ஊழியர் சங்கத் தலைவர்களை
8 நிமிடத்தில்
மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா சந்தித்தது.
இப்படி ஏராளமான ஆதாரங்களோடு இவ்வரலாற்று நூல் எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் தெரிய வந்த ஒரு வருத்தத்திற்குரிய விஷயம் ஆசிரியர்களைவிட அதிகம் ஊதியம்
பெற்று வந்த அமைச்சுப்பணியாளர்கள் ஒரு கட்டத்தில் ஆசிரியர்களைவிட குறைவாக ஊதியம் பெறுவது
தெரிந்தும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக தோழர் எம்.ஆர்.அப்பன் அதனை கண்டுகொள்ளாமல் இருந்தது
வேதனையாக இருக்கிறது. இன்றைக்கு அமைச்சுப்பணியாளர்களின் மிகக்குறைவான ஊதியத்திற்கு
அவர் ஒரு காரணமாக இருந்துவிட்டாரோ எனத் தோன்றுகிறது. மேலும் அமைச்சுப் பணியாளர்களின்
ஊதியம் தொடர்பாக அப்போது கோரிக்கைகள் எழுப்பி வந்த என்.ஜி.ஓ , பணியாளர் சங்கம் ஆகியவைகளை
அந்த கோரிக்கையை எழுப்பியதற்காகவே கேலிசெய்யும் பாங்கு சில இடங்களில் தெரிய வருகிறது.
அமைச்சுப்பணியாளர்களின் குறைவான ஊதிய நிர்ணயத்தில் உள்ள குறைகளை களைய மட்டுமே போராட்டத்தை முன்னெடுக்க சிவஇளங்கோ மற்றும் பணியாளர் சங்கங்கள் முயற்சி செய்த போது இதர தரப்பு ஊழியர்களின் கோரிக்கைகளையும் அதில் சேர்த்து பிரச்சினையை நீர்க்கச் செய்து அவர்தம் நிலையில் உள்ள அனைவருக்கும் 5% தனிஊதியம் என்ற நிறைவில்லாத சலுகையினை அமைச்சுபணியாளர்கள் பெற அரசு ஊழியர் சங்கத்தினர் காரணமாக இருந்த வரலாற்றுப் பிழையினை இப்புத்தகம் மூலம் உணர முடிகிறது.இதன் தாக்கம் இன்றுவரை அமைச்சுப்பணியாளர்கள் ஊதிய அளவில் நிமிர முடியாமல் உள்ளனர் என்பது நிதர்சனம்.
ஒட்டு மொத்தத்தில் ஒரு மாவீரனின் வாழ்க்கையினை படித்த திருப்தி.ஒரு இயக்கத்தின்
வரலாற்று ஆவணப்படம் பார்த்த மாதிரியான உணர்வு.நிறைய எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாம்.பாகம் இரண்டு விரைவில் வெளிவரவேண்டும்.
No comments:
Post a Comment