07 December 2015

சென்னை வெள்ளம் மருத்துவ நிவாரணக்குழு









மருத்துவ நிவாரணக்குழு இரண்டாவது அணி இதோ இப்போது புறப்படப் போகிறது.கொட்டும் மழையில் வழியனுப்பி வைக்க போய்க்கொண்டிருக்கிறேன். ஒரு போர் வீரனைப்போல மழைக்கோட்டையும் துணிமணிகளையும் கையில் எடுதுக்கொண்டு கிராமங்களில் இருந்து வந்து நிற்கும் இவர்கள் தெய்வங்கள். துறையில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான அழைப்பை இயக்குனர் டாக்டர்.குழந்தைசாமி அவர்கள் கொடுத்தபோது கொஞ்சம் மலைத்தேன். யாரும் முன்வருவார்களா? என்று. எல்லோரைப் போல அரசு அலுவலர்கள் பற்றிய பொது புத்தியுடன். இரண்டு மணி நேரத்தில் நான்,நீ என் போட்டி போட்டுக்கொண்டு பெயர் கொடுத்தார்கள்.குறிப்பாக பெண்கள் கிராம சுகாதார செவிலியர் களின் எண்ணிக்கை அதிகம். அமைச்சுப் பணியாளர்களுக்கான அழைப்பு இல்லாதது இவர்களுடன் பங்கேற்க முடியவில்லியே என்ற ஏக்கத்தை தருகிறது.என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். பொது சுகாதாரத் துறையில் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

08 September 2015

ரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள்

சுகாதாரத் துறைக்கு ரூ. 276 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ. 276.38 கோடியில் சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
 சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த கட்டடங்களை காணொலிக் காட்சியின் மூலம் அவர் திறந்து வைத்தார்.
 சென்னையில்...சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.77 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை, நரம்பியல் சிறுநீரகவியல் ஆகிய சிகிச்சைப் பிரிவுகள், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள நுண்ணுயிரியல் ஆய்வகக் கட்டடம், அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6. 37 கோடியில் கட்டடம், எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனை செவிலியர்கள், செவிலியர்கள் மாணவர்களுக்கு ரூ. 2.70 கோடியில் விடுதிக் கட்டடங்கள், கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து, ஆராய்ச்சி நிலையத்தில் ரூ. 1.2 கோடியில் நோய் எதிர்ப்புத் திறன் கண்டறியும் ஆய்வகக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
 புற நோயாளிகள் பிரிவு: பெரியகுளம், ஆண்டிபட்டி, செஞ்சி, திருச்செந்தூர், பொள்ளாச்சி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகள், ஈரோடு, பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ. 13.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், அறுவைச் சிகிச்சைக்குப் பிறகான கவனிப்பு வார்டு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, மருந்துப் பொருள்கள் கிடங்கு, அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு, நவீன சமையல் கூடம், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருந்தகம், அடிப்படை கண் சிகிச்சைப் பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகியவற்றுக்கான கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 ஹோமியோபதி: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் ரூ. 1.49 கோடியில் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம்,
 பார்வையாளர்கள் காத்திருப்புக் கூடம் ஆகியவை திறக்கப்பட்டன.
 பொது சுகாதாரம், ஊரக நலப்பணிகள்: பொது சுகாதார இயக்ககத்துக்கு ரூ. 9 கோடியில் அலுவலகக் கட்டடம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ரூ. 26.69 கோடியில் அவசர கால மேலாண்மை கட்டுப்பாட்டு மையம், மருத்துவமனை நிர்வாகம், சுகாதார அமைப்புகள் பயிற்சி நிலையகக் கட்டடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளது.
 இது தவிர நீலகிரி, சேலம், தஞ்சாவூர், கரூர், மதுரை, நாகப்பட்டினம், தருமபுரி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூ. 15.25 கோடியில் 15 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், 22 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ. 3.64 கோடியில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
 அடிக்கல்: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ரூ. 75 கோடியில் அடுக்குமாடி கட்டடம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்
 ரூ. 58.65 கோடி செலவில் புறநோயாளிகள், முடநீக்கியல் பிரிவுக்கான கட்டடம், சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை, சிறுநீரகவியல் பிரிவுகளுக்கு ரூ. 19.65 கோடியில் கட்டடம், சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 6 கோடியில் விடுதிக் கட்டடம் என மொத்தம் ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
 புதிய கருவிகள்: சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் ரூ.9.59 கோடியில் நிறுவப்பட்டுள்ள "சி.டி. ஸ்டிமுலேட்டர்', டிஜிட்டல் எக்ஸ்ரே, புறநாடித் துடிப்புக் கருவி, மிகையளவு அண்மைக் கதிர்வீச்சுப் பிரிவு ஆகிய மருத்துவ உபகரணங்களின் சேவையையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.
 ரூ. 200 கோடியில் புதிய மருத்துவக் கல்லூரி, ரூ. 107.48 கோடியில் புதிய கட்டடங்கள், ரூ. 9.59 கோடியில் புதிய உபகரணங்கள், ரூ. 159.30 கோடியில் புதிய கட்டடங்களுக்கான அடிக்கல் என முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டிய மொத்த திட்டங்களின் மதிப்பு ரூ.276.38 கோடியாகும்.
போதை மறுவாழ்வு மையம்!
 தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 6.52 கோடியில் போதை மறுவாழ்வு மையங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 விழுப்புரம், தருமபுரி, தேனி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.02 கோடியில் அவசர கால தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம், போதை மறுவாழ்வு மையம், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1 கோடி செலவில் போதை மறுவாழ்வு மையம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 1.50 கோடியில் போதை மறுவாழ்வு மையம், வைரஸ் ஆராய்ச்சி பரிசோதனைக் கூடம் ஆகியவையும் திறக்கப்பட்டுள்ளன. இந்த போதை மறுவாழ்வு மையங்கள் அனைத்தும் மருத்துவக் கல்லூரியின் உளவியல் சிகிச்சைத் துறையின் கீழ் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்

ரூ.1000 மதிப்பில் 16 பொருட்களுடன் “அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்”.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா 07.08.2015 அன்று தொடங்கி வைத்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்படும்



குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்பு பெட்டி, சோப்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கைகழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சவுபாக்கியா' சுண்டிலேகியம் என மொத்தம் 16 பொருட்கள் இருக்கும்.


10 July 2015

Singapore International Foundation லிருந்து உயரலுவலர்கள் இன்று திருச்சிக்கு வந்திருந்தனர், மகாத்மாகாந்தி மருத்துவமணையில் நடக்க இருக்கும் பயிற்சி தொடர்பாக பயிற்சி நடக்க உள்ள அறை களை பார்வையிட்டனர். அருகில் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.திட்டமிடுதலில் அவ்வளவு துல்லியம். இருக்கைகள் எப்படி இருக்க வேண்டும், டேபிள் எந்த அளவு இருக்க வேண்டும், மைக், ஸ்கிரீன் என ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்துக்கொண்டனர். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. கடந்த ஒரு வருட காலத்தில் இது மூன்றாவது முறை இவர்கள் வருவது.3 நாட்கள் நடக்க இருக்கும் பயிற்சிக்கு இவ்வளவு சிரத்தைஎடுத்துக்கொள்ளும் இவர்கள் பணி ஆச்சரியப்படுத்துகிறது. Jane Lee,Manager, Communications, Communications & Corporate Devolopement Division, Thavamalar Balakrishnan Manager Volunteer Cooperation, Programmes Division.i









08 April 2015

                                              இந்திரதனுஷ்- தடுப்பூசி முகாம்
( ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது.)
தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் ஏப்ரல் 07 முதல் 13 வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் இம்முகாமுக்கு தவறாமல் வந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் 07-4-2015 அன்று முதல் 13.04.2015 வரை முதல் கட்டமாக கோயம்புத்தூர், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மாவட்டங்களில் தடுப்பு மருந்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யேகமாக நிறுவப்பட்டு தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
1. இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
2. அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் 07.04.2015 முதல் 13.04.215 வரை தடுப்பூசி வழங்கப்படும்.
3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும்.
4. 0-2 வயதுள்ள தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம்.
5. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி மருந்து வழங்கப்படும்.
தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு:
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது.






தடுப்பூசி மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் 07.04.2015 – 13.04.2015 அன்று இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாமில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள்(கிராம சுகாதார தன்னார்வலர்கள்) மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் நாட்டில் போலியோ, தொண்டை அடைப்பான், இரணஜன்னி போன்ற நோய்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“இந்த பூமியிலிருந்து காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்”