மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்
கரூர் மாவட்டத்தில் துவக்க விழா
முதலமைச்சர் மு கருணாநிதியின் 86ஆவது பிறந்த நாளான (ஜுன் 3-2009) தமிழகத்தில் 6,7,8, வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு, கண் பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்ட்டது
சிறப்பு கண்ணொளி திட்டம்
பள்ளிக்கூடங்களில் படிக்கும் 4.7 சதவீத மாணவர்களுக்கு பார்வை குறைபாடு உள்ளது. இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனை கண்டறிந்து கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிந்தால் பார்வை குறைபாட்டை சரி செய்ய இயலும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் சுமார் 24 லட்சம் பள்ளி சிறார்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுவின் மூலம் கண் பரிசோதனைகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியருக்கு பயிற்சி
ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியருக்கு மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவ உதவியாளர்களால் தகுந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களிடையே பார்வை குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களை மேல்பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்கள். கண் மருத்துவ உதவியாளர்கள் பார்வை குறைபாட்டின் தன்மையை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் கண்களுக்கு கண்ணாடிகள் வழங்குவார்கள்.
இவ்வாறு வழங்கப்படும் கண்ணாடிகள் மிகவும் பாதுகாப்பானவை, மிகவும் தரமானவை, உடைபடாத தன்மை கொண்டவையாகும். பார்வை குறைபாடு சுமார் 2 லட்சம் சிறார்களுக்கு இருக்க வாய்ப்புள்ளது என உத்தேசமாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்புறங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்திற்கென ரூ.5.38 கோடி நிதி தேசிய ஊரக நல்வாழ்வு திட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளான 15.9.2009 அன்று இத்திட்டம் நிறைவடையும்.
இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில்

132 நடுநிலைப் பள்ளிகள்,
48 உயர்நிலைப் பள்ளிகள்,
43 மேல்நிலைப் பள்ளிகள்
ஆக மொத்தம் 223 பள்ளிகளில் பயிலும்
சுமார் 44,788 மாணவ-மாணவிகளுக்கு
கண் பரிசோதனை செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment