22 June 2010

அரசு ஊழியர்கள் இனி கையெழுத்து இடவேண்டாம்

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பெரும்பாலும் ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயண்கள் கருவூலத்தில் ஒப்பளிப்பு செய்யப்பட்டு நேரடியாக பணியாளர்களது வங்கிக் கணக்கில் பற்று வைக்கப்படுகிறது.அதற்கான பற்றொப்பப் பதிவேட்டில் (acquittance) அவர்களது கையொப்பம் பெறுவது நடைமுறையில் மிகுந்த சிக்கல் உடையதாக இருந்தது.அவர்கள் பணியாற்றுவது ஒரு இடம் acquittance இருப்பது ஒருஇடம், கையெழுத்து இடுவதற்காக பேருந்து பிடித்து அரைநாள் செலவு செய்ய வேண்டியிருந்தது.ஆனால், தணிக்கையின் போது இவ்வாறு கையொப்பம் இல்லாத குறைகளை சுட்டிக்காட்டும் பத்திகளே பெரும்பாலும் இருக்கும். ஊழியர்கள் மாறுதலாகிச் சென்றுவிட்டாலோ,அக்கையொப்பம் பெறுவட்தும் அந்த தணிக்கைத்தடையை நீக்குவதும் பெரும் பாடாகிவிடும்.தற்போது அரசு ஆணை எண்.G.O.No.175 fin(salaries) 18.06.2010 ன் படி ஊதியங்கள் மற்றும் இதர பணப்பயன்கள் ECS முறையில் ஊழியர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டால் அதற்கான கையொப்பம் வாங்க அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலவிரயம் மனித ஆற்றல் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அனால் ECS copy அலுவலக நகலில் ஒட்டி வைக்கப்பட வேண்டும்.

2 comments:

கொல்லான் said...

//தணிக்கையின் போது இவ்வாறு கையொப்பம் இல்லாத குறைகளை சுட்டிக்காட்டும் பத்திகளே பெரும்பாலும் இருக்கும்.//
உண்மை சார்.

Umapathy said...

சிறந்த பதிவு நன்றி