01 September 2010

உணவுக் கலப்படத் தடைச்சட்டம்

இன்றைக்கு உணவு பொருட்களில் பளீர் நிறத்துக்காக கலக்கபடும் அனைத்து செயற்கை ரசாயனங்களும் நம்முடைய உடலின் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைப்பது மட்டுமின்றி, உயிருக்கே ஆபத்தாகவும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

பாக்கெட் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகளில் 52 சதவீதம் கலப்படத்தயாரிப்புகள் என்கிற செய்தியும் பொது சுகாதாரத் துறை இயக்குனர் திரு.பொற்கைப்பாண்டியன் அவர்களின் பேட்டியும் 1.9.10 குமுதம் இதழில் வெளிவந்துள்ளது.


இது தொடர்பாக கலப்படம் பற்றியும் கலப்படத்தடை சட்டம் பற்றியும் ஒரு செய்தி தொகுப்பு இங்கே.


உணவுப் பொருட்கள் அனைத்தும் கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது. பாலில் கார்பனேட், ஹைட்ராக்சைடு, ரசாயன கழிவுகள் போன்றவை கலக்கப்படுகிறது. தேயிலை தூளில் முந்திரி, புளியங்கொட்டை தோல்களின் துகள்கள் கலந்து விற்கப்படுகிறது. இதனை பயன்படுத்தும் மக்களுக்கு புற்றுநோய், வாதம் போன்ற நோய்கள் தாக்குகின்றன. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் பழங்களில் மண்புழுதிகள், வாகன புகை படிவதால் நோய் ஏற்டுகிறது.

பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்… இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி…. காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள். ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்

கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.

இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள். கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் மஞ்சள் தூளுக்கு ரேஷன் கடையில் விற்கப்படும் ஒரு ரூபாய் அரிசியை மாவு போல பவுடராக்கி, அதனுடன், "லெட் குரோமேட்' என்ற துத்தநாக ரசாயனத்தை கலப்படம்

செய்கின்றனர்

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் சில்கி, இன்னொன்று செகண்ட்ஸ். இந்த சில்கி தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும். கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த செகண்ட்ஸைதான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு… காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியொரு ரூபத்தில்

அங்கே காத்துக் கொண்டிருக்கும்

கூட்டு பெருங்காயத்துடன் கால்போனி மற்றும் கருவேல மரத்தின் பிசின் ஆகிய பொருட்கள் கலக்கபடுகின்றன. குளிர்பானங்களில் எத்தலின், கிளிக்கால், பாஸ்பரிக் போன்ற அமிலங்கள் மற்றும் சாபரின் என்னும் போதை பொருட்களும் கலக்கபடுகின்றன

பி.கு( டீத்தூளில் சாயம் கலந்ததை கண்டுபிடிக்க வழி உண்டு. அதாவது ஈரமான வடிதாளின் மீது டீத்தூளை தூவும் போது, வண்ணங்கள் தோன்றினால், அது சாயம் கலந்த தூள் என்று அறியலாம்

2.நன்றாக பொடியாக்கபட்ட ஒரு கிராம் பெருங்காயத்துடன், ரெக்டிபைடு ஸ்பிரிட் சேர்த்துக் குலுக்கி, வடிகட்டி அதை ஐந்து மில்லி எடுத்து, அத்துடன் பத்து சதவிகித பெர்ரிக் குளோரைடு சேர்த்துக் குலுக்கவும். இளம் பச்சை நிறம் தோன்றினால் பெருங்காய துடன் வேறு பிசின்களும் கலந்திருப்பது உறுதி)

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது

நன்றி http://thogamalaiphc.blogspot.com/2008/10/blog-post_7706.html

http://foodsafetynews.wordpress.com/

http://cchepeye.blogspot.com/

http://tamilcnn.com/

http://www.mohfw.nic.in/pfa.htm

http://www.pfndai.com/Gazette%20pdfs/GSR44E22-01-09DraftPFAamend_SampleAmtForAnalysis.pdf

http://www.mohfw.nic.in/pfa%20acts%20and%20rules.pdf


1.09.2010 குமுதத்தில் இயக்குனரின் பேட்டி

குளித்தலை பகுதியில் சுகாதார ஆய்வாளர்களின் ஆய்வு.கலப்படப் பொருட்களும் அதனால் வரும் நோய்களும்கரூர் மாவட்டம் தாந்தோணி பகுதியில் குடிநீர் பாட்டில்,பாக்கெட் ஆய்வு.


பால் கலப்பட ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார ஆய்வாளர்கள் குழு.(பழைய படம்)


2 comments:

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உணவுக் கலப்பட் பற்றி நல்ல தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். நல்ல பதிவு

Dr.எம்.கே.முருகானந்தன் said...

எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளேன். நன்றி.
http://www.facebook.com/home.php?#!/Dr.M.K.Muruganandan