03 June 2011

மேல்படிப்பிற்குச் செல்லும் மருத்துவர்கள்

இந்த வருடம் தோகைமலை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து மூன்று மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்காக தேர்வாகி பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
1.மரு.எஸ்.தேன்மொழி MD(GM) Madurai Medical collage
Dr.A.Thenmozi MBBS


காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்த இவருக்கு இது தான் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்த இடம்.சளைக்காமல் மருத்துவச் சேவை செய்யக்கூடியவர். மென்மையும் நேசிப்பும் கொண்டவர்.நிர்வாகத்தில் தவறு நிகழ்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்.எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டு அதன்படி நடக்கக் கூடியவர்.எடுத்தோம் கவிழ்த்தோம் என எதையும் செய்யாதவர்.இவரது வாழ்வில் முக்கியமான தருணங்களான திருமணம்,குழந்தைபேறு,கிரகப்பிரவேசம்? என அனத்தும் இங்கு பணியார்றும் போது நடந்ததால் இவரது குடும்பதுடன் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர்களுக்கும் பரிச்சயம் இருந்தது.இவரது கணவரும் மருத்துவர். உடன் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு எனில் தம்பதியர் இருவருமே பாரபட்சமின்றி தங்களால் ஆன உதவிகளை செய்யக்கூடியவர்கள்.எனக்கு நல்ல குடும்ப நண்பர்.பட்ட மேற்படிப்பிற்காக குறைந்த நாட்களே விடுப்பு எடுத்து அதிக மதிப்பெண்களை பெற்றவர்.MD (GM) .கிடைத்து மதுரை மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் இவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.15.05.2011 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இவர் பிரிவு உபசார விழாவிற்காக விருந்திற்கு அழைத்திருந்தார்.நானும் முதன்மை குடிமை மருத்துவ அலுவலரும் ,என்.எம்.எஸ் மனோகரன் அவர்களும் காவல் காரன் பட்டி ஆ.சு.நி சென்றிருந்தோம்.விருந்து முடிந்து நடை பெற இருந்த கூட்டத்தில் நான் கல்ந்து கொள்ளவில்லை. கலந்து கொண்டு பேசும் அளவு எனது மன நிலை இல்லை,திருமணமாகி புகுந்த வீடு செல்லும் சகோதரியை பிரியப்போதும் ஒரு சகோதனின் மன நிலையே எனக்கு இருந்தது.வெறுமனே ”போய் வருகிறேன் மேடம்” எனச் சொல்லிவிட்டு வந்து விட்டேன்.எல்லா வெறுமை களும் இடைவெளிகளால் நிரப்பப் படுகின்றன.

02. மரு.கே.சவுமியா (DPM Madras Medical collage) 
Dr.K.Sowmiya MBBS


காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வந்தார்.சிறிதுகாலம் வட்டார மருத்துவ அலுவலராகப் பொறுப்பு வகித்தார்.சிறந்த நிர்வாகி.இவர் IAS ஆகி யிருக்க வேண்டியவர்.இவரது நிவாகத்தின் கீழ் பணியாற்றுவது பாதுகாப்பானது.எல்லா பொறுப்பையும் சுமக்கத் தயங்காதவர்.பல்வேறு காலகட்டங்களில் இவரது துணிச்சலான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்ததுண்டு.குறிப்பாக எங்களது ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான போது துரிதமாகச் செயல்பட்டு அகால வேளை எனவும் பாராமல் சம்பவ இடத்திற்குச் சென்று அங்கேயே இரவு தங்கி தேவையான பணிகளை மேற்கொண்டார்.இவ்வளவு பணிகளையும் தமது கடமை எனக்கருதியே செய்தார்.எந்த நேரத்திலும் சோர்ந்து கொண்டதோ புலம்பியதோ இல்லை.தேவையான நேரத்தில் அன்பு காட்டியும் தேவையான நேரத்தில் கண்டிப்பு காட்டியும் பணியாற்றியவர்.காய்க்கிற மரம் தான் கல்லடி படும்,ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்க முடியாது,போன்ற சொல்லாடல் களை யெல்லாம் பொருத்திப்பார்க்கத்தக்கவர் எனினும், சிறந்த நிவாகம் என வரும் போது இதெல்லம் சாதாரனமாகிவிடுகிறது.மெட்ராஸ் மெடிகல் காலேஜ் க்கு DPM படிக்கச் செல்லும் இவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.15.05.2011 பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


03. மரு.உமாமகேஸ்வரி( எம்.டி பெத்தாலஜி- திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி) Dr.Umamaheswari MBBS


இவர் சேப்ளாப்பட்டி துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார். பழனி மாவட்டத்திலிருந்து சமீப வருடத்தில் இங்கு வந்தவர்.அதிகம் பேசாதவர்.அதிர்ந்து பேசாதவர்.இவர் பிரிவு உபசாரமாக சேப்ளாபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிய சிறந்த விருந்தில் நானும்,BMO,NMS,Opthalamic assist ஆகியோர் கலந்து கொண்டோம்.15.05.2011 பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.மேற்படிப்பிற்குச் செல்லும் இவருக்கு எனது வாழ்த்துக்கள்.

No comments: