13 August 2011

சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' HI.Gr.1b


சென்னை : கோர்ட் அவமதிப்பு வழக்கில், சுகாதாரத் துறை செயலர் 15.07.2011 அன்று ஐகோர்ட்டில் ஆஜரானார். தொழுநோய் ஆய்வாளர்களாக 1987ம் ஆண்டு நூற்றுக்கணக்கான பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களை பொது சுகாதாரத் துறையில் இணைத்து, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' என அழைக்கப்பட்டனர். 1997ம் ஆண்டு இது நடந்தது.
தங்களுக்கும் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு -1 "ஏ'க்கும் இடையே சம்பள வேறுபாடு உள்ளது; ஆனால், இருவரும் ஒரே பணியை தான் செய்கிறோம் என அரசிடம் சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 "பி' முறையிட்டனர். இதையடுத்து, கிரேடு-1 "ஏ'க்கு இணையாக கிரேடு-1 "பி' ஆய்வாளர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு அக்டோபர் முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவால், தங்களது சீனியாரிட்டி பாதிக்கப்படும் எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் சேலத்தைச் சேர்ந்த வெங்கடரமணன், இளங்கோ மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்', "1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்களாக சேர்க்கப்பட்ட தொழுநோய் ஆய்வாளர்களை, சுகாதார ஆய்வாளர்கள் கிரேடு-1 என கருத வேண்டும். அவர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் டெக்னிக்கல் தனி உதவியாளர் என பதவி உயர்வு வழங்க வேண்டும். இவர்களின் ஜூனியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்ட தேதியில் இருந்து சம்பள பலன்களுடன் இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அப்போதைய சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ், பொது சுகாதார இயக்குனர் பொற்கை பாண்டியனுக்கு எதிராக, கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
சுகாதாரத் துறை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆஜரானார். ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்த அரசுக்கு இரண்டு வார காலம் அவகாசத்தை, "டிவிஷன் பெஞ்ச்' வழங்கியது. கோர்ட் உத்தரவை அமல்படுத்தி, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரப்பட்டது. இம்மனு, நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சுரேந்தர் சிங் நிஜார் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட்-ஜெனரல் கோமதிநாயகம் ஆஜரானார். சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், "ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து பதவி உயர்வு ஏதும் அளிக்கப்பட்டால், அது அப்பீல் மனுவின் மீதான இறுதி முடிவைப் பொறுத்தது. ஐகோர்ட்டில் உள்ள கோர்ட் அவமதிப்பு விசாரணைக்கு தடை விதிக்கப்படுகிறது' எனக் கூறப்பட்டுள்ளது.

2 comments:

சே.வேங்கடசுப்ரமணியன் said...

http://thogamalaiphc.blogspot.com/2011/08/1-higr1b.html
13 August at 07:35 · Like ·

Suresh Kumar இந்தக் கதையை ஆரம்பத்திலிருந்து யாராவது சொல்வாங்களா? குறிப்பாக 1, 1பி, மற்றும் துறையின் பார்வையில்.., என்ன நடந்தது, நடக்கிறது, நடக்கப் போகிறது தெளிவாகச் சொன்னால் துறையினர் புரிந்து கொள்வார்கள்..,
13 August at 13:12 · Like
Mani Seshan இது உண்மையில் ஒரு சோகக்கதை சார்.””மயிலப்புடிச்சு கூண்டிலடைச்சு ஆடச்சொல்லுகிற உலகம்”” ஒழுங்காக போய்க்கொண்ட்டிருந்த துறை பணியாளர்களை பொது சுகாதாரத்துறையில் சேர்த்ததும் ,மாற்றான் தாய்பிள்ளையாக நடத்துவதும் தான் எல்லா குழப்படிகளுக்கும் காரணம்.இ...
See more
13 August at 22:23 · Like · 1 person

Suresh Kumar thanks
Tuesday at 06:41 · Like

Suresh Kumar ஒருவர் ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் இள்நிலை உதவியாளராக இருப்பவர், அக்கவுண்ட் டெஸ்ட் போன்ற தேர்வுகள், சில பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இத்தனை ஆண்டுகள் பணி செய்துள்ளேன் அதுவே ஒரு தகுதிதான் எனக்கு பதவி உயர்வு கொடுங்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? ---------இது சக தோழர் ஒருவர் கேட்ட கேள்வி. இது போன்ற கேள்விகளுக்கு உங்களைப் போன்ற ஆரம்ப நிலையிலிருந்து பார்த்து வருபவர்களால்தான் விளக்க முடியும் என்று நினைக்கிறேன்.
Tuesday at 21:14 · Like
Mani Seshan அக்கவுண்ட் டெஸ்ட் என்பது தனியரே முயற்சி செய்து எழுத வேண்டியது ஆனால் SI course போன்ற பயிற்சிகள் பவானிசாகர் பயிற்சி போன்றது நாமே பவானிசாகர் பயிற்சிக்கு செல்ல முடியாது பயிற்சி கொடுக்காதது துறையின் குற்றம்.தனி நபரின் குற்றமல்ல.பயிற்சி கொடுங்கள் என்றுதான் ஆரம்பத்திலிருந்தே கேட்டு வருகிறார்கள்.அதுவும் சுகாதாரத்துறையுடன் இணைத்து சுகாதார ஆய்வாளர் பணிகளை செய்யச் சொன்னதால் தான்.சுகாதார ஆய்வாளர்களுக்கு இணையாக துறையில் இணைத்தபோதெ ஊதியம் கொடுத்திருந்தால் பதவிஉயர்வு கொடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது.வேண்டுமானால் nms பதவியையும் பொதுவாக்கி இருவருக்கும் சீனியாரிட்டி அடிப்படியில் பதவிஉயர்வு வழங்கியிருக்கலாம்.இது முழுக்க முழுக்க நிர்வாக சீர்கேட்டினால் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

SUNRAYS said...

ஐயா. பொது சுகாதாரத் துறையில் என்னைப் போன்ற ஒரு வருடம் படித்து சான்றிதழ் பெற்றவர்கள் நிலைமை என்ன? தெரிந்தால் சொல்லவும்.