01 March 2012

டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை


 தமிழகத்தில் 1,500க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில், அறுவை சிகிச்சை அரங்குகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட 173 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த சேமிப்பு மையங்கள் தொடங்கப்பட்டன. இவற்றை முழு அளவில் சிறப்பாக செயல்படுத்துவதற்காக, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு 5 நாள் பயிற்சி பட்டறை, சென்னையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க இணை இயக்குனரும், அரசு பொது மருத்துவமனை ரத்த வங்கி தலைவருமான டாக்டர் கே.செல்வராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குனர் ஏ.சி.மோகன்தாஸ், பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ரத்த சேமிப்பு மையங்களுக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிகளில் இருந்து ரத்தம் கொண்டு செல்லப்படும். அதற்காக, 10 முதல் 15 ரத்த சேமிப்பு மையங்களை, ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கியுடன் இணைத்துள்ளோம். இதை சிறப்பாக முழு அளவில் செயல்படுத்த, இவற்றில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் 40 டாக்டர்கள் வீதம் 5 நாட்களுக்கு 200 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

இதனால், கிராமங்களில் போதுமான ரத்தம் கிடைக்காமல், பெண்கள் பிரசவ நேரத்தில் இறப்பது முழுமையாக தடுக்கப்படும். 

ரத்த சேமிப்பு குறித்து மேலாண்மை பயிற்சி முகாமை டான்சாக்ஸ் திட்ட இயக்குனர் டாக்டர் மோகன்தாஸ் தொடங்கி வைத்து, டாக்டர்களுடன் கலந்துரையாடுகிறார்.கரூர் மாவட்டத்தில் தோகமலை ஆரம்ப சுகாதார நிலையமும் ரத்த சேமிப்பு மையமாகும்.

No comments: