17 May 2012

ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ்




கரூர் ரயில்வே ஸ்டேஷனில் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் (எய்ட்ஸ் விழிப்புணர்வு ரயில்) பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களிடையே ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு முழுவதும் ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 9 ம் தேதி ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.


நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை தொடர்ந்து கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததுள்ளது. விழிப்புணர்வு ரயிலில் ஆறு பெட்டிகள் உள்ளது. 
1.முதல் பெட்டியில் ஹெச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் குறித்த தொடுதிரை, 3டீ மாதிரி வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


2.இரண்டாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களுக்கான மருத்துவ சேவைகளும், 


3.மூன்றாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களை சமுதாயத்தில் அங்கீகரிப்பது தொடர்பான விளக்க படங்கள், கூட்டு மருத்துவ முறைகள் .


4. நான்காவது பெட்டியில் தாய்சேய் நலம், பொது சுகாதாரம் மற்றும் காசநோய், பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் குறித்த விழிப்புணர்வு படங்கள் உள்ளது.


5.ஐந்தாவது பெட்டியில் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த கருத்தரங்குகள், வகுப்புகள் நடக்கிறது.


6. ஆறாவது பெட்டியில் பால்வினை மற்றும் எய்ட்ஸ் தொற்றுகள் குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.


கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு மூன்றாவது பிளாட்ஃபாரத்தில் (17ம் தேதி) வரை நிற்கிறது.


 இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு பஞ்சாயத்து யூனியன்களிலும் இருந்து கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 


காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொதுமக்கள் பார்வையிடலாம்.









No comments: