திருச்சி, : மகப்பேறு மரணத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் டாக்டர்கள் பணியாற்ற வேண் டும் என்று கலெக்டர் ஜெயஸ்ரீ பேசினார்.
திருச்சி மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் நகர சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு மகப்பேறு மரணம் ஏற்படுவதை தவிர் ப்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் சுகாதாரப்பணி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது:
மாநிலத்தில் தற்போது பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு வறுமையும் ஒரு காரணமென பொதுவாக தெரிவிக்கின்றனர். ஆனால் அது உண்மைய ல்ல. மக்களின் மனநிலை தான் காரணம்.
அதனை மாற்ற மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும். இதற்கு மருத்துவர்கள் பெரும்பங்காற்ற வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்கேன் செய்யும்போது கரு வில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்ப தை எக்காரணத்தை கொண்டும் தெரிவிக்கக்கூடாது.
திருச்சி மாவட்டத்தில் 2009-10, 2010-11 ஆகிய வருடங்களில் 40 மகப்பேறு மரணங்கள் எற்பட்டது. 2011-12, 2012-13 ஆகிய வருடங்களில் 29 ஆக குறைந்துள்ளது. நடப்பு ஆண்டு இதுவரை 16 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட் டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக இருந்தும், அனைத்து சுகாதார வசதிகளும் இருந்து மகப்பேறு மரணம் குறையாமல் இருப்பது கவலைக்குரியது என்பதை அனைத்து சுகா தாரப் பணியாளர்களும் கவனத்தில் கொண்டு மகப் பேறு மரணத்தை முற்றிலும் தவிர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக சுகாதார பணிகள் துணை இயக்குநர் சேரன் வரவேற்றார். கி.ஆ.பெ.வி மருத்துவக் கல்லூரி தலைமை மகப்பேறு மருத்துவர் பரிமளாதேவி கர்ப்பகால மரணம் தடுப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

No comments:
Post a Comment