டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஒரு பகுதியாக மக்களுக்கு புரியும் மொழியில் அடித்தட்டு மக்களுக்காக பாடல் எழுதி தான் செல்லும் கிராமங்களில் பாடல் மூலமாக மக்களிடமும்,மாணவ மாணவிகளிடமும், விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கடலூர் மாவட்டம் ஆவட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் திரு.ச.பூவராகன் அவர்கள்.அவரது
பாடல் இங்கே.
டெங்கு, டெங்கு, காய்ச்சலுன்னு
தேசம் பூரா பேசுறாங்க
தங்குமிடம் அழித்து விட்டால்
தடுத்திடலாம் டெங்கு காய்ச்சலை...
வண்ண , வண்ண ஏடிஸ்கொசு
வாட்டுதம்மா லேடிஸ்கொசு
சின்ன சின்ன முட்டையிட்டு
சீரழிக்கும் டைகர்கொசு...
தண்ணி ,தண்ணி தொட்டிகளில்
தலைகீழா துடித்து வாழும்
எண்ணி எண்ணி ஏழுநாளில்
எழுந்துவந்து கடிக்குதம்மா...
வீட்டைச்சுற்றி மழைநீரை
தேக்கிவைக்க கூடாதக்கா
டப்பா,டயர்,குடக்கல்லை
தலைகீழா கவிழ்த்திடக்கா...
நமது நலவாழ்வு
நம் கையில் இருக்குதண்ணே
கொசுப்புழுவை ஒழித்துவிட்டால்
குறையில்லாமல் வாழலாண்ணே...
சுத்தம் சுகாதாரம் பேணிகாப்போம் ! டெங்குவை ஒழிக்க சபதம் ஏற்போம் !
ச. பூவராகன்
சுகாதார ஆய்வாளர்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , ஆவட்டி
மங்களூர் வட்டாரம்,கடலூர் மாவட்டம்.
No comments:
Post a Comment