26 October 2008

புகை தடைச்சட்டம்



பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
இது தொடர்பாக தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் களப்பணியாளர்கள் இப் பகுதியில் சிறு பிரச்சாரம் செய்தனர்.அதன் புகைப்படங்கள் சில சிலைடு ஷோவாக.

No comments: