29 October 2008

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள்

ஆரம்ப சுகாதார நிலையப் பணிகள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் , களப்பணியாள்ர்கள் ஆகியோரது பணிகள் குறித்த அரசு ஆணைகள் கீழே.

27 October 2008

தீபாவளி வாழ்த்து



தீபாவளி திருநாளான இன்றய தினம் அனைவருக்கும் மற்றும் ஆரம்ப சுகாதார நலையங்களில் கடமை ஆற்றிவரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

26 October 2008

ஊட்டியா?, பெங்க‌ளூரா?



இப் புகைப்படங்கள் எங்கே எடுக்கப்பட்டன?


ஊட்டியா?, பெங்க‌ளூரா? பூங்காவா? இதெல்லாம் இல்லை
க‌ரூர் மாவ‌ட்ட‌த்தில் உள்ள‌ ஒர் ஆர‌ம்ப‌சுகாதார‌ நிலைத்தில் ப‌ராம‌ரிக்க‌ப்ப‌டும் தோட்ட‌ம்.

அந்த‌ ஆர‌ம்ப‌ சுகாதார‌ நிலைய‌ம் காவ‌ல்கார‌ன்ப‌ட்டி

பேரரிஞர் அண்ணா பிறந்தநாள் விழா



15.09.2008 பேரரிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா அன்று உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து அவைகளது முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கர்பிணிபெண்களுக்கு வாராந்திர பரிசோதணையின் போது இலவச மதிய உணவு ,மற்றும் பிரசவித்த தாய்மார்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு மூன்றுவேளை சத்துணவு ( மூன்று நாளைக்கு),திட்டம் செயல்படுத்தப்பட்டது.


தற்போது பிரசவமாகி மருத்துவமணை யிலிருந்து வீட்டிற்கு செல்லும் போதே குழந்தைக்கான பிறப்புச் சான்று ஆரம்பசுகாதார நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிற நிகழ்வை கொண்டாடும் வகையில் அன்றைய தினம் டிஸ்சார்ஜ் ஆன தாய்மார்களுக்கு குழந்தக்கான பிறப்புச்சான்று வழங்கப்பட்டது.

பிரசவமான ஒரு வாரத்திற்குள் ஜனனி சுரக்க்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.700 க்கான காசோலை பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.
உடன் கர்பிணிப்பெண்களுக்கு வளையல் காப்பும் கொண்டாடப்பட்டது.


மருத்துவ அலுவலர் திரு.பி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவை வட்டார சுகாதார அய்வாளர் திரு.இ.இராஜலிங்கம் ஏற்பாடு செய்திருந்தார்.


இதே விழா காவல்காரன்பட்டி ஆரம்ப்ப சுகாதார நிலையத்திலும் நடைபெற்றது.மரு.தேன்மொழி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ் விழாவில் கர்பிணிபெண்களுக்கு வளைகாப்பு சிறப்பாக செய்யப்பட்டது. சில புகைப்படங்கள் சிலைடு ஷோவாக.

புகை தடைச்சட்டம்



பொது இடங்களில் புகைபிடிக்க தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.மத்திய கலால், வருமான வரி, விற்பனை வரி, சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகளின் ஆய்வாளர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பொது இடங்களிலும் யார் புகைபிடித்தாலும் நடவடிக்கை எடுக்கலாம்.

ரயில் நிலையம் மற்றும் அதற்குட்பட்ட பகுதிகளில் ரயில் நிலைய அதிகாரிகள், துணை நிலைய அதிகாரி, தலைமை நிலைய அதிகாரி, நிலைய பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு அலுவலகங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தபால் நிலையங்களில் தபால் நிலைய அதிகாரிகள், தனியார் அலுவலகங்களில் தலைமை நிலைய அதிகாரிகள், மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், கல்வி நிலையங்களில் கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

நூலகங்கள், வாசகர் அறைகளில் நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலக அலுவலர்கள், விமான நிலையங்களில் விமான நிலைய மேலாளர்கள், அதிகாரிகள், அனைத்து பொது இடங்களிலும் பொது சுகாதாரத் துறை இயக்குநர்கள், மத்திய, மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலைக் கட்டுப்பாடு மாநில, மாவட்ட நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் அவரவர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.
இது தொடர்பாக தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் களப்பணியாளர்கள் இப் பகுதியில் சிறு பிரச்சாரம் செய்தனர்.அதன் புகைப்படங்கள் சில சிலைடு ஷோவாக.

25 October 2008

அரசுஆணைகள் தொகுப்பு

106 பக்கங்கள் கொண்ட அரசு ஆணைகளின் தொகுப்பு பிடிஎஃப் வடிவில் ‍டவுன்லோடு .

23 October 2008

கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு

துறை நண்பர்களின் வேண்டுகோளின் படி அரசு ஆணைகள் மற்றும் துறை தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த வலைப் பூவில் கொடுக்கலாம் என இருக்கிறேன்.

முதலில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு

த‌மிழ்நாட்டில் மொத்தம் உள்ள 12618 ஊராட்சிகளில் கிராம சுகாதாரம் நீர் மற்றும் துப்புறவுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.வருடத்திற்கு ரூ.10000/ இக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.பாதுகாப்பான குடிநீர் வழங்கவும்,கிராமங்களில் சுகாதாரம் பேணவும் இத் தொகை பயன்படுத்தப்பட வேண்டும்.

Village health and water sanitation commitee,Patient welfare society, தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டு ஆவணம் பிடிஎஃப் வடிவில் இங்கே.


RNTCP

திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டம்(RNTCP) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்.

தேசிய மலேரியா ஒழிப்பு மாதம்



ஜூன் 2008 தேசிய மலேரியா ஒழிப்பு மாதமாக‌ அனுச‌ரிக்க‌ப்ப‌டுவ‌தை தொட‌ர்ந்து காவ‌ல்கார‌ன்பட்டி ஆர‌ம்ப‌ சுகாதார‌ நில‌ய‌த்தின் சார்பாக ப‌ள்ளி மாண‌வ‌ மாண‌விக‌ளைக் கொண்டு விழிப்புண‌ர்வுப் பேர‌ணி ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.ம‌லேரியா தொட‌ர்பான‌ வினாடி வினா நிக‌ழ்ச்சி மாண‌வ‌ர்க‌ளுக்கு இடையே நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.டாக்டர்.சவுமியா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் பேரணியை சுகாதார ஆய்வாளர் திரு.வாசுதேவன் அவர்களும் கிராம சுகாதார செவிலியர்களும் முன்நின்று நடத்தினர்.

22 October 2008

பொது சுகாதாரம் தொடர்பான டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்

சமீபத்தில் ஒரு வலைப்பக்கம் பார்க்க நேர்ந்தது. டாக்டர்.புருனோ அவர்களின் அனுபவங்கள், மற்றும் மருத்துவத் துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.நீண்ட நாட்களாக தமிழில் இத்தகைய வலை பக்கங்களைப் பார்க்க மாட்டோமா? என நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தேன்.நல்ல வரவு.உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்
டாக்டர்.புருனோ வின் வலைப்பக்கம்

17 October 2008

உணவு கலப்படத்தடுப்புத் திட்டம்




22.07.2008 அன்று சென்னை முதல் கன்யாகுமரி வரை ஒரே நாளில் பால் பொருட்களில் கலப்பட‌த்தைக் கண்டுபிடிப்பதற்காக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறையினரால் பெரிய அளவிலான ரெய்டு நடத்தப்பட்டது.
இந்தியாவிலேயே இப்படி ஒரே நேரத்தில் மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட ரெய்டு இது ஒன்றாகத் தான் இருக்கும்.
இந்த ரெய்டு தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இணை இயக்குநரும் உணவு கலப்படத்த‌டுப்புத்திட்ட அதிகாரியுமான திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் 5.10.2008 தினமணி கதிர் இதழுக்கு இந்த ரெய்டு பற்றியும் உணவு கலப்படத்தடுப்புத் திட்டம் ப்ற்றியும் அளித்துள்ள விரிவான பேட்டி மேலே.
தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய களப்பணியாளர்கள் ரெய்டின்போது slide show வாக‌ (சிலைடு ஷோ தெரிய flash player தேவை)


டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் கனவு.



எனக்கு ஒரு கனவு உண்டு அது நாடு முழுதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க‌ள் திற‌மையான மருத்துவர்களைக் கொண்டும், மருத்துவ வசதிகளைக் கொண்டும் 100 சதவீதம் செயல்படவேண்டும் என புதுவை ஜிப்மர் மருத்துவமணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.(16.10.2008 தினகரன் செய்தி)

உங்கள் கனவு நன‌வாகும் நாள் வெகு தொலைவில் இல்லை அய்யா.

காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தினம் 06.05.2008


தோகமலை வட்டாரத்தில் மூன்று ஆரம்ப சுக்காதார நிலையங்கள் உள்ளன.
1. வட்டார ஆரம்ப சுகதார நிலையம் தோகமலை
2. ஆரம்பசுகாதார நிலயம் காவல்காரன்பட்டி
3. ஆரம்பசுகாதார நிலயம் சேப்ளாப்பட்டி


06.05.2008 அன்று
ஆரம்ப சுகாதார நிலைய தினம்
காவல்காரன்பட்டி ஆரம்பசுகாதார நிலயத்தில்
கொண்டாடப்பட்டது .அன்றய தினம் மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து நலப்பணிகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது செய்யப்பட்டு வரும் சிறப்பு சேவைகள் பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்கள் வழஙப்பட்டன.ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தினுள் மரக்கன்றுகள் நடப்பட்டன.மருத்துவ அலுவலர் திருமதி.தேன்மொழி அவர்கள் தலைமயில் நடைபெற்ற இவ் விழாவில் பகுதிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை சுகாதார ஆய்வளர்கள் திரு.பி.முத்தையன், திரு.எஸ்.வாசுதேவன், அகியோர் செய்திருந்தனர்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்டம்


படத்தில் உள்ள இச் சிறுமி கரூர் மாவட்டம் தோகமலை வட்டாரத்திற்கு உட்பட்ட அ.உடயாபட்டி கிராமம் காலனியை சேர்ந்த திரு.ராஜா /மஞ்சுளா தம்பதியரின் புதல்வி.இவர்கள் வருட வருமானம் ரூ.12000/ க்கு உட்பட்ட வறுமை கோட்டிற்கு உட்பட்ட விவசயக்கூலிகள்.அ.உடயாப்பட்டியில் உள்ள பள்ளியில் இச்சிறுமி படித்து வரும் போது தோகமலை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவால் பள்ளி சிறார் நலவாழ்வு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வின்போது இவருக்கு இருதய கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது.03.06.2008 ல் கரூரில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் இளம் சிறார் இருதய பாதுகாப்பு திட்ட மருத்துவ முகாமில் இச்சிறுமிக்கு (வி.எஸ்.டி பி கிரேடு) அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு சென்னை மரு.கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் ல் 27.08.2008 அன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது இச்சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.இதற்காக இச்சிறுமியின் குடும்பத்தார்க்கு எந்த செலவும் இல்லைமுழுக்க முழுக்க அரசே போக்குவரத்து செலவு உட்பட அனைத்தயும் செய்துள்ளது. இதே போல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள மற்ற நான்கு மாணவர்களின் புகப்படம்சிலைடுஷோவக இங்கே.

15 October 2008

சர்வதேச கைகள் கழுவும் தினம் 15/10/2008

15/10/2008 சர்வதேச கைகள் கழுவும் தினம் அனுசரிக்கப்பட்டது.ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு வந்திருந்த பயனாளர்களுக்கும் சிறுவர் சிறுமியர்களுக்கும் சோப்பினால் கைகழுவுவதின் முக்கியத்துவத்துவம் பற்றியும் ,கைகழுவும் முறை பற்றியும் மருத்துவ அலுவலர் ,செவிலி, சமூக சுகாதார செவிலி,மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள் எடுத்து கூறினர்.வட்டார மருத்துவ அலுவலர் திரு.பாரதிராஜா,சமூக‌.சு.செவிலி திருமதி.நாகராணி,பகுதி சு.செவிலி திருமதி பங்கஜம்,செவிலியர் திருமதி.சாந்தி,மற்றும் கண்காணிப்பாளர் கலந்துகொண்டோம்.

07 October 2008

தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு கலைக்குழு

இன்று தொழு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டுஒரு கலைக்குழு ஆ.சு.நி.க்கு வந்திருந்தது.தொழுநோய் பற்றிய பல தகவல் களை மிக யதார்தமாக ஒரே ஒரு மைக் வைத்து கொண்டு பர்வையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்து கவனிக்கச் செய்துவிடும் லாவகம் அபாரம்.கணவன் மனைவி பாத்திரஙளை ஏற்று நடித்த இருவரும் நடிக்க வில்லை. ஆனால் ஒலிபெருக்கியில் பேசும்போது நடிப்பது போனற ஒரு நளினம்.கிட்ட தட்ட டப்பிங் கலை.உடலில் ஏற்படும் தேமல்கள் பற்றி பொது மக்களிடம் ஊள்ள அறியாமை என்ன என்பதை (எச்சிதழும்பு,அதிர்ஷ்டதழும்பு) நகைச்சுவயுடன்விள‌க்கியதோடு . அறிகுறி உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன, யாரை தொடர்பு கொள்ள வேண்டும், போன்ற பல தகவல்களை அற்புதமான எற்ற இறக்க வசனங்களுடன் நடித்த பாங்கு நன்றாய் யிருந்தது.நிகழ்சி ஏற்பாடுகளை திரு.டி.ஜெயராமன் என்.எம்.ஸ். அவர்கள் செய்திருந்தார்.மருத்துவ அலுவலர்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர்,சமூக சுகாதார செவிலி,கண்காணிப்பளர் ஆகியோர் ந்கழ்ச்சியில் கலந்து கொண்டனர்.