உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நரேஷ் குப்தா. 1973-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், தொடர்ந்து 37 ஆண்டுகள் அரசின் பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியவர். இன்று 31.07.2010 அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.ஒரு சாமானியனைப்போல எந்த பந்தாவுமின்றி எளிமையுடனும் நேர்மையாகவும் பணியாற்றிய இவரது ஸ்டெயில் எனக்கு ரொம்ப பிடிக்கும்.சிலரை பார்க்கும் போது நாமும் இப்படி இருக்க வேண்டும் என எனக்குள் தோன்றும். அப்படி நான் பார்த்து வியந்த, விரும்பிய, ஒரு அதிகாரி இவர்.இவரது பணியே ஒரு பாடம் என்னைபோல பலருக்கு. மனநிறைவுடன் ஓய்வு பெறுவதாக நேற்று தலைமச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.இவரின் பாதையில் இவருக்கே தெரியாமல் இவரது பாதம் பட்டு எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டிருக்கிற்து .அவைகள் பெரும் விருட்சமாகி இவரை எப்போதும் நினைவுகூறும். போய்வாருங்கள் நரேஷ் குப்தா.
4 comments:
//.இவரின் பாதையில் இவருக்கே தெரியாமல் இவரது பாதம் பட்டு எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டிருக்கிற்து .அவைகள் பெரும் விருட்சமாகி இவரை எப்போதும் நினைவுகூறும். //
சத்தியமான வார்த்தைகள் சார்.
நேர்மையாக ஊழியம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் அவர் ஒரு முன்னுதாரணம்.
நேர்மையான அதிகாரி. ஒரு முறை ரயிலில் சக பயணியாக வந்தார். அதிகார பந்தா கொஞ்சம் கூட இல்லாதவர். அதிர்ந்தும் பேச மாட்டார். அவருக்கு ஏதோ டிக்கெட் பிரச்சினை இருந்தது. பரிசோதகரிடம் ரொம்ப பணிவாக விண்ணப்பித்து பிரச்சினையை சரி செய்தார். வடநாட்டவர் என்று அவருடைய பெயரைக் கேட்டுதான் கணிக்க முடியும். தமிழ் அத்தனை சரளமாகப் பேசுகிறார். ஓய்வுக்குப் பின்னரும் நாட்டுக்கு நல்லது செய்ய அவருக்கு வாய்ப்பும் விருப்பமும் இருக்குமென நம்புவோம். என்னுடைய வாழ்த்துக்களும்.
நன்றி கொல்லான்,ஏவிஎஸ்,இவர் காந்தியவாதி கூட.
இவரின் ஓய்வு அதிர்ச்சி அளிக்கிறது
இது போன்ற அலுவலர்கள் இன்னும் கொஞ்ச காலம் பணி புரியலாம்
Post a Comment