29 October 2010

Pay Authorisation October 2010

27 October 2010

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பணி ஓய்வு









தோகமலை சமுதாய நல நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி 30.09.2010 அன்று வயது முதிர்வின்காரணமாக பணி ஓய்வு பெற்ற பெரியவர் திரு.இ.ராஜலிங்கம் அவர்களுக்கு தோகமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. வட்டார அளவில் அணைத்து ம்ருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வயதில் தான் இவர் பெரியவர் பணியில் இளைஞர் தான்.ஓய்வு பெறும் வயதில் கூட சுறுசுறுப்பும் பொறுப்புணர்வும் கொண்டு பணிபுரிந்தவர்.இவரது பெருமைகளை அனைவரும் பேசினர்.இவரது மனைவியும் இவருடன் கவுரவிக்கப்பட்டார்கள். திரு.இ.ராஜலிங்கம் அவர்கள்அனைவருக்கும் சிறப்பான விருந்து படைத்தார்.பிறகு அலுவலக சகோதர சகோதரிகள் படை சூழ அவரது சொந்த ஊரான தரகம்பட்டிக்கு அவரை கொண்டுவிட்டு பிரியாவிடைபெற்றுத் திரும்பினோம்.

26 October 2010

அல்மா-அட்டா பிரகடணம் (Alma-ata Declaration)

1978ல் அல்மா அட்டா என்ற ரஷ்ய நகரில் உலக சுகாதார நிறுவனம் (W.H.O) கூட்டிய மாநாட்டின் இறுதியில் வெளியிடப் பட்ட அறிக்கை கி.பி. 2000க்குள் அனைவருக்கும் மருத்துவ நலம் வழங்க உறுதியளித்தது. இந்த உறுதிமொழி பிரகடனத்தில் இந்திய அரசும் கையொப்ப மிட்டிருந்தது

170க்கும் மேற்பட்ட உலக நாட்டு அரசாங்கங்களுக்கு மருத்துவ ஆலோசனைûயும், வழிகாட்டுதலையும் வழங்கி வருவது உலக சுகாதார நிறுவனம். இதில் அங்கம்வகிக்கும் நாடுகளின் சுகாதாரத்துறை தலைமைப் பொறுப்பிலுள்ளோர் ஆண்டுதோறும் கூடி முக்கிய முடிவுகளை மேற்கொள்ளுமிடம் உலக சுகாதாரப் பேரவை. இப்பேரவையின் முடிவாக அந்தந்த காலத்திற்கேற்ப உலக சுகாதார அறிக்கைகள் வெளிவருகின்றன

கி.பி. 2000க்குள் எல்லோருக்கும் மருத்துவ நலம் என்ற இலக்கை முன்வைத்த அல்மா அட்டா அடிப்படை மருத்துவ மாநாட்டின் பிரகடனம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த்து.

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு 2010-11 ல் பக்கம் 56 அத்யாயம் 5ல் கீழ்கண்டவாறு இப்பிரகடணத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

1978 அல்மா அட்டா வில் தான் ஆரம்ப சுகாதார சேவை என்பதற்கான இலக்கணம் வகுக்கப்பட்ட்து.ஆரம்ப சுகாதார சேவை என்பது ஒரு அடிப்படையான அத்டியாவசிய சுகாதார சேவையாகும்.இதில் முழுமையாக சமூக பங்கேற்போடு மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்றதாகவும்,பொருளாதார சூழலுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.

பொது சுகாதாரம் மர்றும் மருத்துவத்துறையில் பணியாற்றும் அனைவரும் படிக்க வேண்டிய பிரகடணம் இது.



Declaration Almaata

23 October 2010

கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் பற்றிய சர்ச்சை

கருத்தரித்தப் பெண்கள் உடல் நலம்மற்றும் அவர்கள் மரணவிகிதம் பற்றியஇந்திய அரசின் உரிமை கோரல்களை ஆசியமகளிர் உரிமை மற்றும் மனித உரிமைகண்காணிப்பு ஆய்வாளர் அருணா காஷ்யப்கடுமையாக மறுத்துள்ளார்.

கருத்தரித்த பெண்களின் மரண விகிதத்தில் ஐ.நா. நிர்ணயித்துள்ள இலக்குகளைஎட்டுவதில் இந்தியா சரியான பாதையில்தான்சென்று கொண்டிருக்கிறது என்று இந்தியஅரசு தெரிவித்திருந்தது.


இது குறித்து அருணா காஷ்யப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியஅரசு அபாயகரமாக இந்திய மக்களை திசை திருப்புகிறது." என்றுகூறியுள்ளார்.

(“The Indian government should stop playing number games with women's lives,”)

கருத்தரித்த பெண்கள் மரண விகிதத்தை இந்தியா குறைத்து வந்தாலும் ஐ.நா. நிர்ணயித்துள்ள புத்தாயிரமாண்டு இலக்குகளுக்கு அருகில் அதுஇல்லை என்று உலகச் சுகாதார மையமும், ஐ.நா. அமைப்புகளும் செய்துள்ளமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. புத்தாயிர வளர்ச்சி இலக்குகள் உச்சி மாநாட்டிற்கு முன்னதாகவேவெளியிட்டுள்ள அறிக்கைகளின் படி, இந்தியா, ஆப்கான், வங்கதேசம்,காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, இந்தோனேசியா, கென்யா, நைஜீரியா,பாகிஸ்தான், சூடான், தான்சானியா, ஆகிய நாடுகள் கருத்தரித்த பெண்களின்உலக அளவிலான மரண விகிதத்தில் 65% என்று பங்களிப்பு செய்துவருகிறதுஎன்று தெரிவித்துள்ளது. அதாவது உலக அளவில் கர்ப்பம்தரித்த பெண்கள்அதிக அளவில் இந்த நாடுகளில்தான் மரணம் அடைந்து வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு புள்ளிவிவரம் இது. ஆனால் இதனை இந்திய அரசுமறுத்தது. ஆனால் ஐ.நா. சுகாதாரப் பிரிவு உடனடியாக இந்திய அரசின்மறுப்பை எதிர்த்து ஐ.நா. இலக்குகளை இந்தியா சந்திக்காது போகும்நிலை உள்ளது என்று தெரிவித்திருந்தது.

அதாவது "இன்ஸ்டிட்யூஷனல் டெலிவரீஸ்" என்று அழைக்கப்படும் ஒருசுகாதார நிலையத்தில், அது மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகள்நிரம்பிய இடங்களில் மகப்பேறு நடக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதைவைத்துக் கொண்டு இந்தியா இந்த விவகாரத்தில் தாங்கள் முன்னேற்றம்கண்டு வருவதாகத் தவறாக கூறிவருகிறது.

இதனாலெல்லாம் கருத்தரித்த பெண்களின் மரண விகிதம் இந்தியாவில்குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளது என்றாலும் அந்த வசதிகள்இன்மையால் நிகழும் மரணங்கள் பற்றி இந்திய அரசு எதையும்குறிப்பிடுவதில்லை.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் சுமார் 1 கோடிப் பெண்கள் மருத்துவமனைகளில்பாதுகாப்பான பிரசவம் பெற்றனர். என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவமனைகளில் அல்லதுசுகாதார மையங்களில் மகப்பேறு அடையும்தாய்மார்களில் எத்தனை பேர் அதன் பிறகுஅல்லது அங்கிருந்து வெளியேறி வீட்டுக்குச்சென்ற பிறகு உயிரிழந்துள்ளனர் என்பதைஇந்திய அரசு கண்டு கொள்வதில்லை,இதுதான் இந்தத் திட்டம்வெற்றிபெற்றதற்கான அளவு கோல் என்றுமனித உரிமை கண்காணிப்பு அமைப்புதெரிவித்துள்ளது.

சுகாதார வசதிகள் இன்மை, மோசமானபோக்குவரத்து வசதிகள், அவசரகாலமகப்பேறு வசதிகள், மகப்பேறுக்குப் பிந்தைய சிகிச்சை மற்றும் கவனிப்புகள்ஆகியவற்றில் போதாமை காரணமாக இந்தியாவில் இன்னும் மரண விகிதம்அதிகமாகவே உள்ளது.

மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையில் தங்களது இந்தஅறிக்கைக்கு உதாரணமாக கடந்த ஜூலை மாதம் புதுடெல்லியில் எந்தவசதியுமின்றி நடைபாதையில் குழந்தை பெற்ற தாய் ஒருவர் படுமோசமான சூழ்நிலையில், அசுத்தமான மழைநீர் நிரம்பிய இடத்துக்கு அருகில்பிரசவம் முடிந்து 4 நாட்கள் அவதியுற்று கவனிப்பாரற்று பிறகு இறந்துபோனதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு திட்டத்தின் படி பிரசவ விடுதிகளில் பிரசவம்செய்து கொண்ட தாய்மார்களுக்கு ரொக்க ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது.ஆனால் வீட்டில் பிரசவம் பார்த்தவர்களைக் கூட பிரசவ மருத்துவமனையில்பிரசவம் பார்த்துக் கொண்டதாக சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தி வரும்பணத்தில் சரிபாதி பங்கு பெறுவதும் இந்த நாட்டில் நடந்து வருகிறதுஎன்று மனித உரிமை அமைப்பிடம் பெண்கள் சிலர் புகார் கூறியதையும்இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.

சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமையால், பிரசவ ஆஸ்பத்திரிக்குச்செல்லும் முன்னரே பல கருத்தரித்த பெண்கள் இறந்து விடுவதும் தினசரிநிகழ்வாக இருந்து வருகிறது.

இவையெல்லாம் இந்திய அரசு வெளியிடும் உரிமை கோரல் அறிக்கைகளில்காணப்படுவதில்லை. மேலும் அவசரகால போக்குவரத்து வசதிகள் மேம்பாடுஅடைந்ததாகவும் தெரியவில்லை.

மனித உரிமை கண்காணிப்பினர் வருகை தந்த பெரும்பாலானமருத்துவமனைகளில் சாதாரண பிரசவம் மட்டுமே நடைபெறுகிறது.

தொடர்ந்து கருத்தரித்த பெண்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்ந்துஅவர்களை வேறு வேறு மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறுகூறப்படுகிறது. கடைசியாக மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளுக்குஅவர்கள் செல்லும்போது காலதாமதமாகி விடுகிறது. மேலும் நல்லசிகிச்சையும், கவனிப்பும் பெற ஏழைத் தாய்மார்களும் ஒரு சிலரை 'கவனிக்க'வேண்டிய நிலையும் உள்ளது என்று அந்த மனித உரிமை அமைப்பின்அறிக்கை இந்திய அரசுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

அக்டோபர் 20 உலக புள்ளியியல் தினம்

ஐக்கிய நாடுகள் பொது சபை. அக்டோபர் 20-ம் தேதியை உலக புள்ளியியல் தினமாக அறிவித்துள்ளது. புள்ளி விவரங்களின் பயன்பாட்டின் வெற்றியையும், அவற்றின் சேவை, மேன்மை மற்றும் தொழில் திறமையையும் கொண்டாடுவதே இத்தினத்தின் பொது நோக்கமாகும்.

ஏழை, எளிய மக்களுக்காக அரசால் வரையறுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் இப்புள்ளி விவரங்களைச் சார்ந்தே உள்ளன. பல்வேறு அரசுத் துறைகளிலும், பல்வேறு வகையான இடைநிலை புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இப்புள்ளி விவரங்கள் சேகரிக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களுக்கு இத்தினத்தில் பாராட்டுக்களை தெரிவிப்போம்.

கரூர் மாவட்ட உதவி இயக்குனர் திரு.ஈஸ்வரன் அவர்களின் சலியாத உழைப்பும்,சமரசம் செய்துகொள்ளாத பணி நேர்மையும் இங்கு நினைவு கூர்ந்து பாராட்டத்தக்கது.

இந்தியாவில் மலேரியா




இந்தியா குறித்து யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் எளிதாகச் சொல்லிவிட முடியும் என்பதற்கு தற்போது "லேன்செட்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒரு உதாரணம்.
இந்தியாவில் மலேரியாவினால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 15,000 என்று உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் அளித்திருக்கும் நிலையில் அதை மறுப்பது போன்று "லேன்செட்' வெளியிட்டுள்ளது ஆய்வறிக்கை. இந்த மருத்துவ இதழின் ஆய்வுப்படி இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மலேரியா காய்ச்சலால் இறக்கிறார்கள். இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் மறுத்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம்.
இதற்கான ஆதாரங்களை லேன்செட் அளிக்கவில்லை. ஆனால் இந்த மருத்துவ இதழ் இதுபற்றி மேலும் கூறுகையில், மலேரியா காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை 90 விழுக்காடு கிராமப்புறங்களில்தான் நடக்கிறது என்றும், இதில் 89 விழுக்காடு எந்த மருத்துவஆவணங்களிலும் பதிவு செய்யப்படாமலேயே போகிறது என்றும் சொல்கிறது. ஒரிசாவில்தான் அதிகபட்சமான மலேரியா மரணங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. இந்த ஆய்வு 2002-ம் ஆண்டு முதலாக 6,671 ஊர்கள் ஒவ்வொன்றிலும் 200 வீடுகளில் ஆய்வு நடத்தியதாகவும், இந்த ஆய்வை கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழகம் மற்றும் செயின்ட் மைக்கேல் உலக சுகாதார ஆய்வு மையமும் குழுவாக இணைந்து நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ இதழ் அண்மையில், சில மாதங்களுக்கு முன்புதான், சூப்பர்-பக் என்கிற கிருமி இந்தியாவிலிருந்து பரவியதாக ஒரு கட்டுரையை வெளியிட்டது. இந்த சூப்பர்-பக் கிருமியைக் கண்டுபிடித்தவர்களில் முக்கிய நபராக தமிழகத்தைச் சேர்ந்த சென்னை பல்கலைக்கழக ஆய்வு மாணவர் இருந்ததால், அவர் இந்த அறிக்கையை மறுத்து பேட்டிகளும் வெளியானது. அந்த சர்ச்சை ஓய்ந்துபோன பின்னர் தற்போது மலேரியா பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டுள்ளது லேன்செட்.
லேன்செட் போன்று ஒரு மருத்துவ இதழ் இந்தியாவிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள நோய்கள் குறித்து ஆய்வு நடத்தி, இப்படியான அறிக்கையை தன்னிச்சையாக வெளியிட முடியுமா என்று யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. நிச்சயமாக முடியாது.
இன்னொரு நாட்டில் படிப்பதற்காகவும் சுற்றுலாவுக்காகவும் சென்றாலும்கூட ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அப்படியிருக்க, அந்த நாட்டு மக்களின் சுகாதாரம், நோய்கள் குறித்த ஆய்வுக்காக செல்கிறோம் என்றால், ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள். அப்படியே ஒப்புக்கொண்டாலும் அந்த ஆய்வை கூட்டுமுயற்சி என்ற அளவில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஆய்வின் முடிவுகளை வெளியிடுவது, அல்லது நிறுத்தி வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று ஒப்பந்தத்தில் ஒரு விதியாகச் சேர்த்துத்தான் அனுமதிப்பார்கள்.
ஆனால் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வந்து என்ன ஆய்வுகள் வேண்டுமானாலும் செய்ய முடிகிறது. அதைவிட ஒருபடி மேலே போய், எந்த அறிக்கையையும் வெளியிட முடிகிறது. இதைத் தடுக்க எத்தகைய நடவடிக்கையையும் அரசு மேற்கொள்வதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
எந்த ஆதாரமும் இல்லாமல் இத்தகைய தகவல்களை ஆய்வுக் கட்டுரை என்ற பெயரில் வெளியிடும் இதழுக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவிக்கின்றபோது, இந்திய அரசு ஏன் மானநஷ்ட வழக்கு தொடுக்கக்கூடாது?
இந்தியாவின் மக்கள்தொகையும் மருத்துவ வசதியைத் தேடிச் செல்வோரின் எண்ணிக்கையும் பல கோடிகளாக இருப்பதால், மிகப் பெரும் மருத்துவச் சந்தையாக இந்தியா திகழ்கிறது. வெளிநாட்டவர் யார் சொன்னாலும் அதை உண்மை என்று நம்புகின்ற இயல்பினர் இந்தியர் என்பதால் இத்தகைய செய்திகளை உண்மையைப் போலவே சொல்லி, இந்தியர்களை பீதிக்குள்ளாக்குவதும் அதற்கான மருந்துகளை விற்பனைக்குத் தள்ளிவிடுவதும்தான் இத்தகைய ஆய்வுகளால் பிற நாடுகளுக்குக் கிடைக்கும் பொதுப்பலன்.
இந்தியாவில் நிலவும் நோய்கள் குறித்து ஆய்வுகள் நடத்திட வேண்டுமானால் அதை எந்த அமைப்பு செய்யலாம் என்பதையும், அந்தக் கணக்கெடுப்பு முறைப்படி நடத்தப்பட்டதா, ஆய்வுகள் உண்மையானவையா என்பதையும் இந்திய மருத்துவக் கழகம் தீர்மானித்து, அதன் பிறகு இந்திய அரசு அவை வெளியாகலாம் என்று அனுமதி கொடுக்கும் நடைமுறைதான் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும்.
அதேபோன்று புதிய மருந்துகளை நோயாளிக்குக் கொடுத்து சோதனை நடத்தும்போதும், அதைப் பற்றி நோயாளிக்கு அறிவிப்பதும் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளுக்காக உடனடி சிகிச்சை அளிப்பதும், பாதகமான விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீட்டின் அளவு ஆகிய அனைத்தையும் தீர்மானித்த பிறகே அத்தகைய மருத்துவ அமைப்புகள் இந்தியாவுக்குள் ஆய்வு நடத்த அனுமதிக்க வேண்டும்.
ஆய்வுகள் என்ற பெயரில், பெயரும் புகழும் பெற்ற மருத்துவ இதழ்களே இத்தகைய ஆதாரமற்ற செயல்களில் இறங்குவார்கள் என்றால், அதை இனியும் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது இந்தியாவுக்கு நல்லது அல்ல.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால் பொய்போலும்மே பொய்போலும்மே
லேன்செட் முதல்ரகம், இந்தியா இரண்டாவது ரகம்.

நன்றி தினமணி தலையங்கம் 23.10.2010

04 October 2010

நிலையான முன்பயணப்படி (FIXED TRAVELING ALLOWANCE)

நிலையான முன்பயணப்படி (FIXED TRAVELING ALLOWANCE) பொது சுகாதாரத்துறையில் உதவி மருத்துவர்( assistant surgeon),கிராம சுகாதார செவிலியர்(VHN),சுகாதார ஆய்வாளர்கள் நிலை1 மற்றும் 2 (HI Gr 1,2), பகுதி சுகாதார செவிலியர் (SHN),ஆகியோர் பெற்று வருகின்றனர்.

இதற்கான விதிமுறைகளை சற்று பார்க்கலாம்.

1.முதல் முதல் பணியேற்ற மாதம் நி.மு.ப கிடையாது.

2.முந்தைய மாத பயண அறிக்கையின் அடிப்படையில் இந் நிலையான முன்பயணப்படி வழங்கப்படும்.

3.ஒவ்வொரு பதவிக்கும் குறைந்த பட்ச பயண நாட்கள் உண்டு.

4.உதாரணமாக கிராம சுகாதார செவிலியருக்கு 20 நாட்கள்

சில ஃபார்முலாக்கள்:

1. proportionate minimum tour

minimum Tour X Actual Duty Period
No.of Days in month

2.Proportionate FTA

Monthly Rate of FTA X Actual Duty period
No.of DAys in the month

3.Recovery for Short Tour

Monthly Rate of FTA X Short Tour Days
Minimum Tour Days

4.Recovery for Use of Government Vehicle:

Monthly Rate of FTA X No of DAys Touredin Govt.Vehicle x1/4
Minimum tour

5. Proportionate FTA to be deducted from the tour TA for tour out side jurisdiction

Rate of Monthly FTA X No of Days journed out side jurisdiction
30