17 December 2011

"பெண்டாவேலண்ட்"வேலூரில் அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்




குழந்தைகளுக்கு 6 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் திட்டம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலூரில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சுகாதாரம் சம்பந்தமான சிறந்த உள்கட்டமைப்பை தமிழ்நாடு பெற்றிருப்ப தாலும், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்தது.
 வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய தடுப்பூசி தொடக்கவிழா இன்று நடந்தது. சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் முகமது ஜான், எம்.எல்..க்கள் கலையரசு, சீனிவாசன், மேயர் கார்த்தயாயினி, கலெக்டர் நாகராஜன், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர்.பொற்கைப் பாண்டியன் மற்றும் வேலூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். . பெண்டாவேலண்ட் தடுப்பூசி அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.
  •   குழந்தைகளுக்கு போடப்படும் ஊசிகளின் எண்ணிக்கை குறைகிறது.
  •   புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது

நடப்பு ஆண்டில் 2011-12-ல் 3.60 லட்சம் குழந்தைகள் பெண்டா வேலண்ட் தடுப்பூசியின் மூலம் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் ஸ்டைல் வேண்டாம்!
இந்த விழாவில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கான புகையில்லா திட்டத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் குறித்து அமைச்சர் பேசியது:
புகையிலையால் ஏற்படும் தீமை எல்லோரும் அறிந்த ஒன்று. பொது இடங்களில் புகைப்பிடிப்போரை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும்வீடுகளில் புகைப் பிடிப்பதை தாய்மார்கள் தடுக்க வேண்டும். நாங்கள் எம்ஜிஆரை பார்த்து கழகத்தில் இணைந்தவர்கள். அவர் புகைப்பிடித்ததும், மது அருந்தியதும் இல்லை. அவர் வழியில் வந்த தொண்டர்கள் இந்தப் பழக்கங்களுக்கு ஆளாவதில்லை. இன்றைய நடிகர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

No comments: