24 February 2012

பிரிவோம் சந்திப்போம்

                                 
                          கடந்த 25.01.2011 முதல் எங்களுடன் இணைந்து பணியாற்றி எங்களை எல்லாம் வழிநடத்திய சீப் சிவில் சர்ஜன் திரு.கே.குமாரசாமி அவர்கள் பழனி நகராட்சி பள்ளி மருத்துவ ஆய்வு அலுவலர் பணிக்கு பணியிட மாறுதலில் சென்றுவிட்டார.
                      வேடசந்தூர் அவரது சொந்த ஊர்.அவரது ஊருக்கு அருகாமையில் சென்றது அவருக்கு வசதி.எங்களுக்கெல்லாம் அசதி.இவருடன் பழகிய நாட்கள் என் நினைவிலிருந்து எப்போதும் நீங்காது.மனித நேயமும்,அன்பும்,பணிவும் மிக்கவர்.தன்னைவிட வயதிலும்,பதவியிலும்,குறைந்தவர்களிடம் இவர் காட்டிய பணிவும் , கனிவும் அசாத்தியம்.
              இவரிடமிருந்து கால் வந்தாலே ஒரு அவசரம் எனக்குள் தொற்றிக் கொள்ளும்.காரணம் போனை ஆன் செய்தவுடன் வணக்கம் சொல்லிவிடவேண்டும் . ஒரு நொடி தயங்கிவிட்டால் கூட “ வணக்கம் சார்” என எதிர் முனையிலிருந்து குரல் வந்துவிடும்.நமக்கு.வயதிலும் பதவியிலும் பெரியவர் நமக்கு முதலில் வணக்கம் சொல்கிறாரே என்கிற குற்ற உணர்வு எனக்குள் வியாபிக்கும்.அவருக்கு அதெல்லாம் ஒன்றுமில்லை.சாதாரணமாக உரையாடுவார்.குடும்ப விஷயங்களை விசாரிப்பார்.
                                குட்மார்னிங் சொன்னால் பதிலுக்கு சிலர்  தலையை மட்டும் ஆட்டுவர், சிலர் அதைக்கூட ஆட்ட மாட்டாரகள், எனக்கு குட்மார்னிங் சொல்வது உனது கடமை என்பதாக நிமிர்ந்து கூட பார்க்காமலும் சில அலுவலர் இருப்பார்கள்.இவர்களுக்கு நடுவில் திரு.குமாரசாமி அய்யா அவர்கள் குறிஞ்சிப்பூ.
                                 பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா என்ற பாடல்வரிகளைப் போல இவருக்கு பணிவு அசாத்தியம், துணிவு பிரயோகிக்க வேண்டிய வாய்ப்பே இவருக்கு  கிடையாது .ஒரு ஊழியரை கூட கடிந்து பேசமாட்டார்.அதிகாரிகளின் உத்தரவினை சிரமேற்கொண்டு செய்து முடித்திட வேண்டும் என நினைப்பார்.கடிதங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு “ சார் அந்த லெட்டருக்கு பதில் எழுதிடலாமா? என கூலாக கேட்பார்” அப்போது தான் எனக்கே அந்த கடிதம் மறந்து போனது தெரியும்.சிறந்த மனிதாபிமானி.எல்லா ஊழியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இவரது மாறுதல் பேரிழப்பு.
                          சில மனிதர்களை வாழ்க்கையில் இனி சந்தித்து விடவே கூடாது என எனக்கு தோன்றியிருக்கிறது.ஆனால் இவரைப் போன்ற மனிதர்களை எப்போது சந்திக்கப் போகிறோம் என தோன்றுகிறது.இவருக்கு என்ன கைமாறு செய்ய?...இவரைப் போல துளிகூட கர்வமும்,ஆணவமும்,இல்லாத மனிதனாக வாழ முயற்சிப்பது மட்டுமே இவர் நினைவை நம்முள் நிறுத்த ஒரே வழி.

3 comments:

Anonymous said...

manidanin thotram sila karuthugalai sollum, amithiyin maruuruvamaga thotramalikum inda maruthuvaridam sellum noyaligal koduthuvaithavargal - mohanamoorthy

சே.வேங்கடசுப்ரமணியன் said...

உருவத்துக்கு ஏற்றார் போல அமைதியின் திரு உருவம் தான்

selva said...

ஆயிரத்தில் ஒருவர்.
தன கீழ் பணிபுரிவோர் தன முன் உட்கார்ந்தால் கூட
சகித்துக்கொள்ளாத பலர்
பணிபுரியும் இந்நாளில்
பணிவு,பண்பு நிறைந்தோரை
காணுதல் அரிது......
வாழ்த்துகிறேன் ...