08 February 2014

நடமாடும் மருத்துவக்குழு ஊர்தி பராமரிப்பாளர் ஊதியம்

                         பொது சுகாதாரத்துறையில் இயங்கிவரும் நடமாடும் மருத்துவக்குழு வில் ஊரிதி ஓட்டுனர்(Driver), ஊர்தி பராமரிப்பாளர்(Cleaner-cum-Attender) ஆகிய இரண்டு பணியிடங்களும் தொகுப்பூதியத்தில் இருந்து வந்தது.ஓட்டுனர்களுக்கு ரூ.4000 மற்றும் ஊர்தி பராமரிப்பாளர்களுக்கு ரூ.3000 என இருந்தது. 

                    மாநில நலவாழ்வுக்குழும இயக்குனர் அவர்களின் கடித எண் 5711/P/SHS/13, dt.29.7.13 படி இவ்வூதியம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ஒவ்வொரு வருடமும் நிர்ணயிக்கும் தினக்கூலியினடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இது 29.07.2013 முதல் நடைமுறையில் உள்ளது.

                    தற்போது  மாநில நலவாழ்வுக்குழும இயக்குனர் அவர்களின் கடித எண் 5711/P/SHS/13,  dated 1.2.2014 படி ஊர்தி பராமரிப்பாளர்(Cleaner-cum-Attender) க்கும் இம்முறை நீட்டிக்கப்பட்டுள்ளது இதனால் ஒரு மாத்த்தில் 25 நாட்கள் பணிபுரியும் ஊர்தி பராமரிப்பாளர் ஒரு மாதத்திற்கு 1000 லிருந்து 2000 வரை கூடுதலாக ஊதியம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது இது 01.02.2014 முதல் அமலுக்கு வருகிறது. (தினக்கூலி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபடும்)


https://docs.google.com/document/d/12iVRosSA1OywigS2F-JlUss0eUmVG_LfMuXje9ypbTQ/edit?usp=sharing 



No comments: