இன்று 21.02.2014 திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகக் கூடம் காணொளி காட்சி மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இப் பகுப்பாய்வகத்தினால் திருச்சி,பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை,திண்டுக்கல்,கரூர்,திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி மற்றும் அரசு நிறுவனங்களில் பொது மக்களூக்கு விநியோகிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை காலமுறை தோறும் நீர்மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.இதனால் குடிநீரினால் பரவும் தொற்று நோய்களான வாந்திபேதி,காலரா போன்ற கொள்ளை நோய்கள் வராமல் பொது மக்களை காப்பாற்ற ஏதுவாக இருக்கும்..சென்னை கிங் நிலைய நோய்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் இயங்கிவரும் தலைமை நீர் பகுப்பாய்வகத்தின் மற்றுமொரு கிளைதான் இது.
No comments:
Post a Comment